சர்வதேச அளவில் அணு ஆயுதங்களை அதிகளவில் உற்பத்தி செய்து இருப்பில் வைத்துள்ள நாடுகளின் பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.
உலக வல்லரசு நாடுகளில் அமெரிக்கா முன்னணியில் இருந்தாலும் கூட, இதற்கு அடுத்த நிலையில் உள்ள ரஷ்யாதான் அதிகளவில் அணு ஆயுதங்களை இருப்பு வைத்துள்ளது.
அணு ஆயுதங்களை அதிகளவில் உற்பத்தி செய்து இருப்பில் வைத்துள்ள நாடுகளும் அணு ஆயுதங்களின் எண்ணிக்கையையும் பார்ப்போம்.
ரஷ்யா - 7,500
அமெரிக்கா - 7,200
பிரான்ஸ் - 300
...
ஐக்கிய தேசிய கட்சியின் 70 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பிரதான வைபவம் இன்று நடைபெற்று கொண்டிருக்கின்றது.
கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கெம்பல் மைதானத்தில் வருட பூர்த்தி வைபவம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இந்த வைபவத்தில் விசேட அதிதியாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கலந்து கொள்ளவுள்ளார்.
சகல கட்சிகளினதும் தலைவர்கள், ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்துள்ள கட்சிகளின் பிரதிநிதிகள், முன்னாள் பாராளுமன்ற, மாகாண சபைகள், உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள்...
கிழக்கு பல்கலைக்கழகத்தின் 20வது பட்டமளிப்பு விழா இன்று கிழக்கு பல்கலைக் கழகத்தின் நல்லையா மண்டபத்தில் நடைபெற்றது.
பல்கலையின் உபவேந்தர் கலாநிதி தங்கமுத்து ஜயசிங்கம் பட்டங்களுக்கான அங்கீகாரத்தினை வழங்கியதுடன் பட்டங்களையும் வழங்கி வைத்தார்.
மொத்தமாக பல்வேறு துறைகளையும் சேர்ந்த 893 பேர் பட்டம் பெற்றுக் கொண்டனர்.
நான்கு கட்டங்களாக இந்த பட்டமளிப்பு விழா இடம்பெற்றது.
இதில் கிழக்குப் பல்கலைக் கழக முன்னாள் தகுதி வாய்ந்த அதிகாரி உமா குமாரசுவாமி அவர்களுக்கு விஞ்ஞானமானி கலாநிதிப் பட்டம் பட்டம்...
கிளிநொச்சி-அம்பாள்நகர் கிராம அலுவலக பிரிவில் அமைந்துள்ள சாந்தபுரம் கிராம மக்கள் தமது வாழ்வாதார முயற்சிகளில் இராணுவத்தினுடைய தலையீடு தொடர்வதனால் தாம் தொடர்ந்து பாதிக்கப்பட்டுவருவதாக பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரனின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.
சாந்தபுரம் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் இவ்விடயங்கள் வெளிப்படுத்தப்பட்டன.
சாந்தபுரம் எட்டாம் குறுக்கு வீதியில் ஆறு காணிகளை ஊடறுத்து இராணுவப் பாதை ஒன்று செல்வதால் தமது விவசாய முயற்சிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அவ்வீதியில் உள்ள பத்தொன்பது குடும்பங்களை 2012 ஆம்...
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக 500க்கு மேற்பட்ட இலங்கை கடற்படையினர் கோத்தபாய கடற்படைமுகாமுக்குள் நுளைந்துள்ளனர்.
முல்லைத்தீவு வட்டுவாகல் பாலத்தின் ஊடாக இன்று காலை 10.00 மணியளவில் நூற்றுக்கு மேற்பட்ட சிங்கள மக்களும் 500க்கு மேற்பட்ட கடற்படையினரும் அணிஅணியாக குறிப்பிட்ட முகாமுக்குள் சென்றுள்ளனர்.
மேலும், கடற்படையினருடன் சிறப்பு கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கடற்படையினரின் உறவினர்களுடன் மதியபோசன விருந்து உபசாரத்தை மேற்கொள்வதற்காகவும் கோத்தபாய கடற்படைமுகாமுக்கு சென்றுள்ளதாகவும் கடற்படை அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்டபட்ட லிந்துலை - கொணன் மேற்பிரிவு தோட்ட குடியிருப்பில் நேற்று இரவு ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் தொடர் லயக்குடியிருப்பில் தீ ஏற்ப்பட்டுள்ளது.
குறித்த ஒரு வீட்டிற்குள் ஏற்பட்ட தீயினால் மின்மானியும், வீட்டின் ஒருபுற பகுதியும் எரிந்துள்ளது.
எனினும் அயலில் உள்ளவர்களால் ஏனைய வீடுகளுக்கு தீ பரவாமல் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.
தொடர்பாக தோட்ட நிர்வாகத்திற்கும், லிந்துலை பொலிஸ் நிலையத்திற்கும், மின்சார சபையினருக்கும் பிரதேசவாசிகளால் தகவல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பொருளாதார கொள்கையையும் மனித உரிமை விடயங்களையும் அவர் கையாண்ட விதத்தையும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விமர்சித்துள்ளார்.
ஐக்கிய தேசியக்கட்சியின் 70வது வருட நிகழ்வில் சிறப்பு விருந்தினராக பங்கேற்ற ஜனாதிபதி, இந்தக் காரணங்களால் தான் மஹிந்த ராஜபக்ச தோல்வியை தழுவியதாக குறிப்பிட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதியிடம் தேர்தல் ஒன்றுக்கு செல்லவேண்டாம் என்று தாம் கூறியபோதும் அதனை மதிக்காது அவர் முன்கூட்டியே ஜனாதிபதி தேர்தலை நடத்தினார்.
இதன் அடிப்படையில் அவர், விளைவுகளை...
இலங்கையின் வீட்டுத்தேவைகளை பூர்த்தி செய்ய அரசாங்கம் புதிய வங்கி ஒன்றை உருவாக்கவுள்ளதாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்
ஐக்கிய தேசியக்கட்சியின் 70வது ஆண்டு நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய அவர், மூன்று வங்கிகளை இணைந்து வீடமைப்புக்காக புதிய வங்கி ஒன்று உருவாக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதன்மூலம் குறைந்த வட்டியின் அடிப்படையில் பொதுமக்கள் வீடமைப்பு கடன்களை பெற்றுக்கொள்ள முடியும் என்றும் ரணில் கூறியுள்ளார்.
இதற்காக நிதியமைச்சும், வீடமைப்பு அமைச்சும் இணைந்து செயற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை அரசாங்கம், வடக்கு...
இந்த நல்லாட்சி அரசாங்கம் சிங்கள மக்களுக்கு ஒரு நீதியையும் தமிழ் மக்களுக்கும் ஒரு நீதியையும் வழங்குவது தமிழ் மக்கள் மத்தியில் தொடர்ந்தும் அச்ச நிலையினையே ஏற்படுத்தியுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் சுகிர்தன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் நேற்று நடைபெற்ற சத்துருக்கொண்டான் படுகொலை நினைவு தினத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை குறிப்பிட்டார்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,
சத்துருக்கொண்டான் படுகொலை 26 வருடங்களை கடந்துள்ளபோதிலும் அதன் உறவுகள் இன்றும் கண்ணீருடனேயே உள்ளனர்.
இது வரையும் அவர்களுக்கான நீதி...
ஒவ்வொரு சாம்பியனுக்கு பின்னாலும் ஒரு தூண்டுதல் கதை இருக்கும். மாரியப்பன் தங்கவேலுவும் அதற்கு விதிவிலக்கானவர் அல்ல. பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியுள்ள தமிழகத்தை சேர்ந்த இந்த இந்திய வீரர், சிறு வயதில் படாத கஷ்டங்களை பட்டுதான் இந்த நிலைக்கு உயர்ந்துள்ளார்.21 வயதாகும், மாரியப்பன், உயரம் தாண்டுதல் பிரிவில் இந்தியாவுக்கான முதலாவது தங்கம் வென்றுள்ளார். 1.89 மீட்டர் உயரத்தை தாண்டி பதக்கத்தை பறித்துள்ளார் மாரியப்பன்....