மாணவ சமுதாயத்தினரிடையே ஐக்கியத்தையும் புரிந்துணர்வையும் ஏற்படுத்துவதற்கு இவ்வாறான நிகழ்வுகள் உறுதுணையாக அமையக் கூடும் என்பதில் சந்தேகம் இருக்காது என வடக்கு மாகாண முதலமைச்சர் சி. வி. விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் முன்னெடுக்கப்படும் 28ஆவது தேசிய இளைஞர் விளையாட்டு விழா இன்று (10) யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,   ஒரு...
  வவுனியா மற்றும் மன்னார் மாவட்டத்தை சேர்ந்த பொது மக்கள் தமிழ் மொழியில் அவசர பொலிஸ் அழைப்புகளை மேற்கொள்ள புதிய தொலைபேசி இலக்கங்கைள அறிமுகப்படுத்தும் நிகழ்வு பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவால் நேற்று (09.09.2016) வவுனியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. வவுனியா பிரதி பொலிஸ்மா அதிபர் காரியாலயத்தில் வெள்ளிக்கிழமை இரவு இடம்பெற்ற இந்ந நிகழ்வில் வவுனியா மாவட்ட பொதுமக்கள் 0766224949 என்ற இலக்கத்துடனும் மன்னர்ர் மாவட்ட பொதுமக்கள் 0766226363 என்ற இலக்கத்துடனும் தொடர்பு கொண்டு...
  முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் ஜனாதிபதியின் தொழிற்சங்க ஆலோசகருமான பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நால்வரை கடந்த 2011ம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 8ம் திகதியன்று பிற்பகல் வேளையில் அங்கொடை, ஹிம்புட்டான ஒழுங்கையில் வைத்து சுட்டுக் கொலை செய்த குற்றச்சாட்டில் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை தீர்ப்பு வழங்கியுள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றின் சிறப்பு 'ட்ரயல் அட் பார்'...
  இலங்கையில் தேசிய அரசாங்கம் நிறுவப்பட்டுள்ள நிலையில், நீதித்துறையும் வலுவடைந்து வருவதாக அண்மைய கால பெறுபேறுகள் வெளிப்படுத்துகின்றன. சர்வதிகார ஆட்சி நிலவிய இலங்கையில், தற்போது நீதித்துறை திறம்பட செயற்பட ஆரம்பித்துள்ளமையால், பல்வேறு மோசடியாளர்களுக்கு கிலி பிடிக்கத் தொடங்கியுள்ளது. இதில் முக்கியமானவர்களாக ராஜபக்ஷ ரெஜிமென்டும் அவர்கள் சார்ந்த கும்பலைச் சேர்ந்தவர்களுமே அடங்கும். கடந்த ஆட்சியில் பலமான அமைச்சர்களாக செயற்பட்டவர்களை கைது செய்து சிறையில் அடைகும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளது. சிலர் சிறையில் அடைக்கப்பட்டும் வெளியில் வந்துள்ளனர். இந்நிலையில்...
  ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை பிரதிநிதித்துவம் செய்யும் மூன்று பிரபல கதாபாத்திரங்கள் தற்போது வரையில் ஐக்கிய தேசிய கட்சியில் உறுப்புரிமையை பெற்றுக்கொள்வதற்கான முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வடமேல் மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர் இவர்களில் முக்கியமானவர் என தெரிவிக்கப்படுகின்றது. கடந்த காலங்களில் அதிகமான வெளிநாட்டு விஜயங்களின் போது பிரதமருடன் இந்த அமைச்சர் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. அவரது தொகுதியில் முன்னாள் ஜனாதிபதிக்கு அதிக ஆதரவு வழங்கும் பலர் உள்ளமை இந்த தீர்மானத்திற்கு...
  கோ எனில் கடவுள் அல்லது அரசன் என்றுப் பொருள். இல் என்றால் குடியிருக்குமிடம் என்றுப் பொருளாகும், இங்கு கோவில் எனப்படுவது கடவுள்/தெய்வம் குடியிருக்குமிடம் என்பதாகும். கோவிலில் செய்யக்கூடாது சில விடயங்கள், கோவிலில் தூங்க கூடாது. தலையில் துணி ,தொப்பி அணியகூடாது. கொடிமரம் ,நந்தி,பலிபீடம் ,இவைகளின் நிழல்களை மிதிக்க கூடாது. விளக்கு இல்லாமல் (எரியாத பொழுது )வணங்க கூடாது. அபிஷேகம் நடக்கும் பொழுது சுற்றி வரகூடாது. குளிக்காமல் கோவில் போககூடாது. கோவிலில்...
  நேபாளத்தை சேர்ந்த 7 வயதான சிறுமி அங்குள்ள மக்களால் கடவுளின் அவதாரமாக பார்க்கப்படும் வினோத செய்தி அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது. நேபாளத்தை சேர்ந்த ரமேஷ்- சபிதா தம்பதியரின் மகள் யுனிகா(7). அந்த ஊர் வழக்கப்படி மாட்டிற்கு இருப்பது போன்ற இமையும், மான்-க்கு இருப்பது போன்ற தொடையும், வாத்தின் குரலும் அந்த சிறுமிக்கு இருப்பதால் அவர் கடவுள் அவதாரமாக பார்க்கப்படுகிறார். வாழும் கடவுளாக அவர் பார்க்கப்படுவதால் இந்து மத வழக்கப்படி அவர் கால்கள் தரையில்...
  தற்போது உள்ள இணைய வலையமைப்பு சேவை தொழில்நுட்பங்களில் அதி வேகம் கூடியதாக 4G தொழில்நுட்பம் காணப்படுகின்றது. இத் தொழில்நுட்பத்தில் 150 Mbps எனும் தரவிறக்கம் வேகம் வரை கிடைக்கப்பெறுகின்றது. ஆனால் தற்போது 360 Mbps வேகத்தில் மொபைல் போன்களிலும் தரவிறக்கம் செய்யக்கூடிய தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இத் தொழில்நுட்பத்தினை ஐக்கிய இராச்சியத்தில் தொலைத் தொடர்பு சேவையை வழங்கி வரும் EE நிறுவனம் வழங்க முன்வந்துள்ளது. Cat 9 LTE எனும் இப் புதிய தொழில்நுட்பத்தினை...
  ஹெட்போனை சொருகக்கூடிய துளை இல்லாமல் (Headphone Socket) ஐபோன்-7, ஐபோன்-7 பிளஸ் ஸ்மார்ட்போன்களை வடிவமைத்த அப்பிள் நிறுவனம் பல விமர்சனங்களை எதிர்கொள்கிறது. Headphone Socketஐ அப்புறப்படுத்தியதன் மூலம் அப்பிள் தைரியமான நடவடிக்கையை எடுத்துள்ளதென ஒருசாரார் கூற, இது அப்பிளின் வியாபார தந்திரம் என்று மறுசாரார் சாடுகிறார்கள். சகல வகை ஸ்மார்ட்போன்களிலும் 3.5 மிமி துளை உள்ளது. இதில் ஹெட்போனை செருகுவதன் மூலம் போனிலுள்ள பாடல்களையும், ஏனைய ஒலி சமிக்ஞைகளையும் கேட்க முடியும். இந்தத்...
  விமானத்தில் சாம்சுங் கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்போனின் ஆளியை அழுத்தவோ, மின்னேற்றவோ வேண்டாமென அமெரிக்க அதிகாரிகள் பயணிகளுக்கு எச்சரித்துள்ளார்கள். அமெரிக்க மத்திய விமானப் போக்குவரத்து நிர்வாக அமைப்பு எச்சரிக்கை அறிவித்தல்களை வெளியிட்டுள்ளது. பரிசோதிக்கப்பட்ட பயணப் பொதிகளுக்குள் ஸ்மார்ட்போனைப் போட வேண்டாம் எனவும் அவ்வமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மின்னேற்றப்படும் சமயத்திலோ, அதற்குப் பின்னரோ கேலக்ஸி நோட்-7 ஸ்மார்ட்கைப்பேசிகள் வெடித்துச் சிதறியதாக கடந்த வாரம் தகவல்கள் வெளியாகியிருந்தன. போன்கள் வெடித்துச் சிதறியமைக்கு மின்கலப் பிரச்சனைகள் தான் காரணம் என...