தல' என்னும் சொல் இன்று கோடிக்கணக்காண இளைஞர்களின் மந்திர சொல்லாய் இருக்கிறது என்பது நாம் அனைவரும் அறிந்த விஷயம். இந்த மக்களின் அன்பை நான் நிச்சயம் பெறுவேன் என தன்னம்பிக்கையோடு 20 வருடங்கள் முன்பே அஜித் கூறியுள்ளார். அந்த பிளாஸ்பேக் சம்பவம் 1996 ஆம் வருடம் அது, கல்லூரி வாசல் என்ற தமிழ்ப்படத்தின் வெளிப்புற படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து கொண்டிருந்தது. முக்கிய கதாநாயகனாக நடிகர் பிரசாந்தும், இரண்டாம் கதாநாயகனாக நடிகர் அஜித்தும்...
  அஜித் தமிழ் சினிமாவில் கிங் ஆப் ஓப்பனிங். இவர் படங்கள் வருகிறது என்றாலே தமிழகமே திருவிழா தான். இந்நிலையில் இவர் நடிப்பில் கடைசியாக வந்து செம்ம ஹிட் அடித்த படம் வேதாளம். இப்படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியுள்ளது, இப்பாடலுக்கு நடனமாடதவர்கள் யாரும் இல்லை. சமீபத்தில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் இந்த பாடலுக்கு வெஸ்ட் இண்டிஸ் கிரிக்கெட் ப்ளேயர் கிறிஸ் கெயில் நடனமாடி அசத்தியுள்ளார்.
  யாழ் உடுவில் மகளீர் கல்லூரியின் மாணவிகள் ஜனாதிபதி மைத்திரியால சிறிசேன அவர்களை “போதைபொருளில் இருந்து விடுமதலை பெற்ற தேசம்” என்ற போதை பொருள் ஒழிப்பு நிகழ்ச்சி திட்டத்தின் எட்டாவது கட்டம் யாழ்பாணத்தில் நடைபெற்ற போது இதற்கு பிரதம அதிதியாக கலந்து கொண்ட ஜனாதிபதி அவர்களை சந்தித்தனர். இந்த பாடசாலை மாணவிகள் சந்திப்பு தொடர்பில் கல்வி இராஜாங்க அமைச்சர் வே.இராதாகிருஸ்ணன் அவர்களை தொடர்பு கொண்ட போது. யாழ் உடுவில்...
  அமெரிக்காவில் அதிக போதை மருந்தை எடுத்துக்கொண்டு பெற்றோர் சுய நினைவை இழந்ததால், அவர்களது 4 வயது மகன் வாகனத்தில் சிக்கிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஓஹொயோ மாகாண பொலிசார் இதுகுறித்து தங்களது பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் கூடிய செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளனர். குறிப்பிட்ட புகைப்படத்தை பார்வையிடும் பெற்றோர் இனிமேலும் இதுபோன்ற செயலில் ஈடுபடாமல் இருக்க அது ஒரு எச்சரிக்கையாக அமையும் என ஓஹியோ பொலிசார் தெரிவித்துள்ளனர். குறிப்பிட்ட வாகனத்தில் அந்த போதை...
  காற்று மாசு காரணமாக உலகெங்கும் ஆண்டுதோறும் 55 லட்சம் பேர் இறப்பதாக உலக வங்கி ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உலக வங்கியும், சுகாதார அளவீடுகள் மற்றும் மதிப்பீடுகளுக்கான நிறுவனமும் இணைந்து மேற்கொண்ட ஆய்வுகளின் அடிப்படையில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டது. அதில், உலகளவில் 4-வது அபாயகரமான காரணியாக காற்று மாசு திகழ்கிறது. உலகில் 85 சதவீதம் பேர் சுகாதாரமற்ற காற்றை சுவாசிக்கின்றனர். சீனா மற்றும் இந்தியாவில் ஒரு சதவீதம் பேர் மட்டுமே பாதுகாப்பான காற்றை சுவாசிக்கின்றனர். காற்று...
  அமெரிக்காவில் தம்பதி ஒன்று தங்களுக்கு கிடைத்த திருமணப் பரிசை திறந்து பார்க்க 9 ஆண்டுகள் வரை காத்திருந்த சுவார்ஸிய சம்பவம் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் மிச்சிகன் மாகாணத்தில் குடியிருந்து வருபவர்கள் கேத்தி மற்றும் பிராண்டன் ஆகியோர். இவர்களது திருமணம் கடந்த 2007 ஆம் ஆண்டு உற்றார் உறவினர்கள் புடைசூழ விமரிசையாக நடந்துள்ளது. புதுமண தம்பதிகளுக்கு அவர்களது நெருங்கிய உறவினர் ஒருவர் திருமணப் பரிசு ஒன்றை வழங்கியுள்ளார். பரிசை வழங்கிய அந்த உறவினர் இவர்களுக்கு ஒரு...
  பிலிப்பைன்ஸ் ஜனாதிபதியான ரோடிரிகோ டுட்டர்டே, அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமாவை கடுமையாக திட்டிப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இதற்கிடையே ஆசியான் மாநாட்டில் பங்கேற்ற தலைவர்கள் விருந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர், அப்போது ஒபாமாவும், ரோடிரிகோவும் சந்தித்து பேசிக் கொண்டதாக தகவல்கள் வெளியானது. இதற்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ரோடிரிகோ, ஒபாமாவை நான் நாய்க்கு பிறந்தவன் என்று சொல்லவே இல்லை என்று தெரிவித்தார். மேலும் ஐநா சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன்...
  பதினோரு பரல் கோடா  மற்றும்  நாற்பது போத்தல் கசிப்பு  கசிப்பு மற்றும்  கசிப்பு காச்சுவதர்கான  உபகரணங்களுடன் கிளிநொச்சி மாவட்ட மது ஒழிப்புப் பொலிசாரால்  மூவர் கைது கிளிநொச்சி முல்லைத்தீவு பிரதிப் பொலிஸ்மா அதிபர் எம் வெலிகண்ண என்பவரின் ஆலோசனைக்கு அமைய மாவட்ட  பொலிஸ் மது ஒழிப்புப் பிரிவுக்குக் கிடைத்த இரகசியத் தகவலை அடுத்து  மாவட்ட  பொலிஸ் மது ஒழிப்புப் பிரிவு பொறுப்பதிகாரி என் ஜெயவர்த்தன  தலைமையிலான  குழுவினர் நேற்றுக்  காலை...
  எதிர்காலத்தில் பதவியை பொறுப்பேற்றுக் கொள்ளும் நிதி அமைச்சர்கள் நெருக்கடிகளை எதிர்நோக்கா வண்ணம் நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட தயாரிப்பிற்கு சமாந்தரமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மக்களிப்பு என்ற தொனிப் பொருளிலான கருத்தரங்கில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அண்மையில் கொழும்பில் இந்த நிகழ்வு நடைபெற்றது.அவர் மேலும் கூறுகையில், நல்லாட்சி அரசாங்கம் நாட்டை பின்நோக்கி நகர்த்தும் பொருளாதாரக் கொள்கைகளைப் பின்பற்றாது.நாட்டில் மாற்றங்களை ஏற்படுத்தும்...
  தேசிய அரசாங்கம் தொடர்பிலான மனுவை விசாரணை செய்ய நீதிமன்றங்களுக்கு அதிகாரம் கிடையாது என ஜனாதிபதி சட்டத்தரணி ரொமேஸ் டி சில்வா நேற்று உச்ச நீதிமன்றில் தெரிவித்துள்ளார். தேசிய அரசாங்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று நேற்று பரிசீலனை செய்யப்பட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் வாதிடுகையில், தற்போது நாட்டில் ஏற்படுத்தப்பட்டுள்ள தேசிய அரசாங்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் வகையில் உச்ச நீதிமன்றில் அடிப்படை உரிமை...