மெல்பேர்னில் தமிழ் பெண்மணி ஒருவரை 8 ஆண்டுகளாக தமது வீட்டில் அடிமை போல வைத்திருந்தார்கள் என்ற குற்றச்சாட்டில் தமிழ் தம்பதியர் மீது வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கினறன. இலங்கைப் பின்னணி கொண்ட தமிழ் தம்பதியரின் வீட்டில் 2007ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை பணிபுரிந்த குறித்த பெண், கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் பொலிஸாருடனும் எல்லைப் பாதுகாப்புப் பிரிவினருடனும் சந்திப்பொன்றினை மேற்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகின்றது. இதைத்தொடர்ந்து இச்சம்பவம் மீதான வழக்கு விசாரணை...
    தற்போது பிறக்கும் குழந்தைகளுக்கும் போரின் பாதிப்புக்கள் ஏற்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். பாரிஸ் சுற்றாடல் பாதுகாப்பு உடன்படிக்கை தொடர்பில் நாடாளுமன்றில் நேற்று நடைபெற்ற விவாதத்தில் பங்கேற்ற போது அவர் இதனைக் கூறியுள்ளார்.அவர் மேலும் கூறுகையில், எமது நாட்டில் போர் இடம்பெற்றது. தற்போதும் வடக்கு கிழக்கில் போரின் பாதிப்புக்களை மக்கள் உணர்கின்றனர். சில தடை செய்யப்பட்ட பொருட்கள் போரின் போது பயன்படுத்தப்பட் காரணத்தினால் இன்று பிறக்கும் குழந்தைகள்...
  லிந்துலையில் 50 அடி பள்ளத்தில் பாய்ந்து முச்சக்ரவண்டி விபத்து சாரதி பலி நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன் முச்சக்கரவண்டி 50 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானதில் சாரதி ஸ்தலத்திலே பலியானதாக லீந்துலை பொலிஸார் தெரிவித்தனர் லிந்துலை பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பெயார்வெல்  தேயிலை தொழிற்சாலை பகுதீயிலே 10.09.2016 அதிகாலை இவ்விபத்து சம்பவீத்துள்ளது டீ மலை தோட்டத்தை சேர்ந்த 29 வதுடைய  பெருமாள் நாகேந்திரன் என்பரே மரணமானார் சம்பவம் தொடர்பில் தெரியவருகையில் கொழூம்பிலிருந்து லிந்துலை...
  நாடாளுமன்றின் ஒக்டோபர் மாத அமர்வுகள் ஒரு வார காலத்திற்கு ஒத்தி வைக்கப்பட உள்ளது. நாடாளுமன்றின் இலத்திரனியல் தொடர்பாடல் கட்டமைப்பை நவீனமயப்படுத்தும் நோக்கில் இவ்வாறு ஒக்டோபர் மாத அமர்வுகள் ஒரு வார காலம் ஒத்தி வைக்கப்பட உள்ளது. கட்சித் தலைவர்களின் இணக்கப்பாட்டின் அடிப்படையில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அவையின் ஒலி வாங்கி மற்றும் ஒலி பெருக்கி வசதிகள் இலத்திரனியல் வாக்களிப்பு முறைமை உள்ளிட்ட அதி நவீன கட்டமைப்புக்கள் உருவாக்கப்பட உள்ளன. ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில்...
  லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கொழும்பிலிருந்து லிந்துலை நோக்கி சென்ற முச்சக்கர வண்டி ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. முச்சக்கரவண்டி, வீதியை விட்டு விலகி புதிதாக நிர்மாணிக்கப்படும் கட்டிடத்தின் மீது விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், இந்த விபத்தில் காயமடைந்த இருவர் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், மேலதிக...
  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவின் உயிர் பிரியும் வரை தூக்கிலிடுமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்கமைய ஜனாதிபதியினால் தீர்மானிக்கப்படும் தினத்தில் தூக்கிலிடவுள்ள நிலையில், குறித்த குற்றவாளிகள் அதுவரையில் வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். தனது மகனின் இந்த அவல நிலைக்கு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவே என துமிந்த சில்வாவின் தந்தை குற்றம் சாட்டியுள்ளார். துமிந்த சில்வா மற்றும் பாரத லக்ஷ்மன் ஆகியோரை தம்முடன் மஹிந்த இணைத்துக் கொண்டமையே இந்த...
  உடுவில் மகளிர் கல்லூரி மாணவிகள் விவகாரம் தொடர்பாக இலங்கை ஆசிரியர் சங்கம் கண்டனம் வெளியிட்டுள்ளது. யாழ். உடுவில் மகளிர் கல்லூரியில் சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற விடயங்களை நன்கு அவதானித்து வந்துள்ளோம். இந்த பாடசாலையின் அதிபர் நியமனம் தொடர்பான சர்ச்சைகள் ஏற்பட்ட போதும் பாடசாலையின் மாணவிகள் சிலரால் ஜனநாயக ரீதியாகவே வேண்டுகோள் விடுக்கப்பட்டது. இது முன்னெடுக்கப்பட்ட நோக்கம் சரியாகவோ அல்லது தவறாக இருந்தாலும் கூட அம்மாணவிகள் மேற்கொண்ட ஜனநாயக ரீதியான செயற்பாட்டை மாணவிகள்...
  இணைந்த நேர அட்டவணை பக்கச்சார்பானதாக காணப்படுவதனால் அதற்கு ஒத்துழைப்பு வழங்கப்போவதில்லை என வட மாகாண இலங்கை போக்குவரத்துச் சபையின் இணைந்த தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது. வவுனியா இலங்கை போக்குவரத்து சாலையில் நேற்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்கள், கடந்த காலத்தில் தொழிலாளர்களின் வேதனத்தைகூட சீராக பெற்றுக்கொள்ள முடியாமல் இருந்தது. எனினும் கடந்தகால வரலாற்றை தோற்கடித்து தற்போது நல்ல நிலையில் இயங்கி வருகின்றோம். ஆனால்...
  முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மிகவும் மன ரீதியான குழப்பத்திலும் அமைதியற்ற நிலைமையிலும் காணப்படுவதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளனர். கோத்தபாயவின் அப்போதைய அமைச்சின் கண்கானிப்பு உறுப்பினராகவும், போதைப்பொருள் வலையமைப்பின் பிரதானியான ஆர்.துமிந்த சில்வாவுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை தொடர்பில் அதிர்ச்சியடைந்த கோத்தபாய, மிகவும் வருத்தத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சில காலங்களாக சுவாச நோயினால் பாதிக்கப்பட்டுள்ள கோத்தபாய, இந்த சம்பவத்தினால் நேற்று முன்தினம் மாலை வேளையில் மிகவும் தீவிர நிலையடைந்ததாக தெரியவந்துள்ளது. கோத்தபாய,...
  யாழ்,பிரபல கல்லூரிகளில் ஒன்றான உடுவில் மகளிர் கல்லூரியில் நீடித்து வந்த பதற்றமான சூழ்நிலை மல்லாகம் நீதிமன்ற நீதவான் ஏ. யூட்சனின் நேரடித் தலையீட்டால் நேற்று முன்தினம் வியாழக்கிழமை(08) பிற்பகலுடன் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டதாக அறிவிக்கப்பட்டிருந்தது. கல்லூரியின் முன்னாள் அதிபர், தற்போதைய அதிபர், ஆசிரியர்கள், மாணவிகள் ஆகியோரைக் கல்லூரியில் சந்தித்துக் கலந்துரையாடிய நீதவான் எந்தவிதமான குழப்பங்களும் ஏற்படாமல் இனிப் பாடசாலை ஒழுங்கான முறையில் நடைபெறும் என ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். எனினும் நேற்று (09)...