ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று வெள்ளிக்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று காலை விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி யாழ்.சுப்ரமணியம் பூங்காவில் இடம்பெறும் போதை ஒழிப்பு நிகழ்வில் பங்கேற்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து யாழ். மத்திய கல்லூரியில் 200 ஆவது ஆண்டு விழாவில் பிரதம அதிதியாக ஜனாதிபதி கலந்துகொள்ளவுள்ளார். இந்த நிகழ்வினை அடுத்து யாழ்.பொலிஸ் நிலையத்தின் புதிய கட்டடத் தொகுதியை இன்று மாலை ஜனாதிபதி மைத்திரிபால திறந்துவைக்கவுள்ளார். இந்த நிகழ்வுகளில், அமைச்சர் சாகல ரட்ணாயக்க...
புதிய தலைமைத்துவம் ஒன்று புலிகளின் தலைவர் பிரபாகரனின் தலைமைத்துவத்துக்கு ஈடான காத்திரமான இடத்தைப் பிடிக்க முடியாது என்று மேஜர் ஜெனரல் கமால் குணரத்ன தெரிவித்துள்ளார். தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் கொல்லப்பட்ட நான்காம் கட்ட ஈழப்போரின் இறுதிக்கட்ட 45 நிமிட யுத்தத்தில் 53வது டிவிசனுக்கு மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவே தலைமை தாங்கினார். 30 ஆண்டுகால யுத்தம் முடிவிற்குக் கொண்டு வரப்பட்டமை தொடர்பாக மேஜர் ஜெனரல் குணரத்னவால் எழுதப்பட்ட...
  திருகோணமலை, சம்பூர் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நீலாங்கேணி பகுதியில் நான்கு வயதுச் சிறுமியின் சடலமொன்று, நேற்று வியாழக்கிழமை (08) மீட்கப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்தனர். இவ்வாறு கண்டெடுக்கப்பட்ட சடலம், நல்லூர்-நீலாங்கேணி பகுதியைச் சேர்ந்த ஜெகதீஸ்வரன் அஜந்தா எனவும் பொலிஸார் தெரிவித்தனர். இன்று காலை 9 மணியளவில், வீட்டிலிருந்த சிறுமி, காணாமல் போயுள்ளதாகத் தெரியவந்ததையடுத்து தேடுதலில் ஈடுபட்ட கிராமமக்கள், காட்டுப்பகுதியில் புதைக்கப்பட்ட நிலையில் சிறுமியின் சடலத்தைக் கண்டு, பொலிஸாருக்குத் தெரியப்படுத்தியுள்ளனர். மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் மேற்கொண்டு...
  நாளுக்கு நாள் உடல் எடை அதிகரிக்கிறது என்று வருத்தப்படுகிறீர்களா? உங்கள் தோற்றத்தைக் கண்ணாடியில் பார்த்து தினமும் கவலைக் கொள்கிறீர்களா? உங்கள் நண்பர்கள் உங்களை கிண்டல் செய்கிறார்களா? என்ன முயற்சி செய்தும் உடல் எடை குறையமாட்டீங்குதா? இந்த கட்டுரை உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். ஏனெனில் இங்கு உடல் எடையை வேகமாக குறைக்க உதவும் ஓர் அற்புத பானம் குறித்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பானம் உடல் பருமன் பிரச்சனையை மட்டுமின்றி, சர்க்கரை...
கைத்தொழில் உற்பத்தியாளர்களை ஊக்குவிக்கும் முகமாக வட மாகாண கைத்தொழில் கண்காட்சி நேற்று வவுனியாவில் ஆரம்பமானது. வட மாகாண கைத்தொழில் திணைக்களத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இக் கண்காட்சி மூன்று நாட்களுக்கு வவுனியா நகரசபை கலாசார மண்டப வளாகத்தில் இடம்பெறவுள்ளது. இந்த நிலையில் நேற்று வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மற்றும் வட மாகாண போக்குவரத்து கிராமிய அபிவிருத்தி அமைச்சர் பா. டெனிஸ்வரன் ஆகியோரால் திறந்து வைக்கப்பட்டது. வட மாகாணத்தில் உள்ள கைத்தொழில் பயிற்சி...
அறிஞர் அண்ணாவின் பிறந்த நாள் செப்டம்பர் 15ஆம் திகதி கொண்டாடப்பட உள்ளது. இதனை முன்னிட்டு 20 ஆண்டுகளைக் கடந்த ராஜிவ் காந்தியின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் 7 பேரை விடுதலை செய்வதற்கு தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ராஜிவ் கொலை வழக்கில் தமிழக அரசு தமக்கு உள்ள 161ஆவது பிரிவை பயன்படுத்தி 7 தமிழர்களையும் விடுதலை செய்து விடும் என்றே கூறப்படுகிறது. முருகன், பேரறிவாளன், சாந்தன், நளினி, ரவிச்சந்திரன், ராபர்ட்...
கிளிநொச்சி மாவட்டத்தில் போசாக்கு மட்டத்தை உயர்த்துதல் தொடர்பானகலந்துரையாடல் ஒன்று மாவட்டச் செயலகத்தில் இன்று நடைபெற்றுள்ளது. இன்று பகல் 10 மணிக்கு அரச சார்பற்றநிறுவனங்களின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலக மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் எஸ் .சத்தியசீலன் தலைமையில் நடைபெற்றுள்ளது. இதில் திட்டமிடல் பணிப்பாளர் எஸ். மோகனபவன் சுகாதார திணைக்கள அதிகாரிகள் பிரதேச செயலக திட்டமிடல் அதிகாரிகள் எனப்பலர் கலந்து கொன்டனர்.  
வடக்கு கிழக்கு மாகாணங்களில் சுமார் 3030 ஏக்கர் வரையான காணிகளை அடுத்த வருடத்திற்குள் விடுவிப்பதற்கு எண்ணியுள்ளதாக பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். குறித்த காணிகளை இரண்டு கட்டங்களாக விடுவிப்பதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி மேலும் கூறியுள்ளார். வடக்கில் பொது மக்களின் 21,659 ஏக்கர் காணிகள் அரசாங்கத்தின் வசமும், 7022 ஏக்கர் வரையான காணிகள் தனியார்த் துறையினரிடமும் உள்ளன. கிழக்கு மாகாணத்தில் சுமார் 21519 ஏக்கர் காணிகள் அரச...
முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் கமநலசேவை நிலையத்திற்கு உட்பட்ட 19 சிறிய நீர்ப்பாசனத்தின் கீழ் பிரதேசத்தில் 550 ஏக்கர் சிறுபோக நெல் பயிரிடப்பட்டு விவசாயிகள் அறுவடை செய்துவருவதாக ஒட்டுசுட்டான் கமநல சேவை நிலையத்தின் பெரும்போக உத்தியோகத்தர் ம.சற்குணநேசன் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிட்டுகையில், இத்திமடுக்குளம பெரியகுளம், ஒதியமலைக்குளம், கோடாரி கல்லுக்குளம் ஆகிய குளங்களின் கீழ், 50 ஏக்கருக்கு மேல் நெல் பயிரிடப்பட்டு அறுவடை செய்யப்பட்டுவதாக தெரிவித்துள்ளார். குறித்த பிரதேசத்தில் பெரிய நீர் பாசனக் குளமாக காணப்படும்...
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானிகள், சட்டப்படிவேலை இயக்கத்தில் இணைந்துள்ளதாக கூறப்படுகின்ற போதிலும் அந்த தொழிற்சங்க நடவடிக்கை தொடர்பில் முகாமைக்குஅறிவிக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானிகள் மத்தியில் மூச்சுப்பகுப்பாய்வு தொடர்பான சோதனைகளை மேற்கொள்வதற்கு முகாமை முடிவெடுத்தமையை ஆட்சேபித்தே விமானிகள் நேற்று இரவு முதல் தொழிற்சங்கநடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். பிராங்போட்டில் இருந்து புறப்பட்ட விமானம் ஒன்று காலதாமதம் ஆவதற்கு விமானி ஒருவரின்குடிபோதை காரணமாக இருந்தது என்ற சம்பவத்தின் பின்னரே முகாமையின் அறிவிப்பு வெளியானது. எனினும் இந்த சோதனை நடவடிக்கைகளுக்கு...