நாமல் ராஜபக்ஷவினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் Ford Mustang மோட்டார் வானம் தொடர்பில் சர்ச்சை நிலை நீடிக்கிறது.
Thinappuyal -0
நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவினால் பயன்படுத்தப்பட்டதாக கூறப்படும் Ford Mustang மோட்டார் வானம் தொடர்பில் சர்ச்சை நிலை நீடிக்கிறது.
பல்வேறு மோசடிகளை மேற்கொண்டு Ford Mustang மோட்டார் வானத்தை இலங்கைக்கு கொண்டு வரப்பட்டதாக பொலிஸ் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதற்காக நாமல் ராஜபக்ஷ பாரிய முறைக்கேடுகள் பலவற்றை மேற்கொண்டுள்ளதாக தெரிய வருகிறது.
சுங்க பிரிவு மற்றும் திரைச்சேரிக்கு செலுத்த வேண்டிய வரி செலுத்தாமை, சொத்துக்களை மறைத்தமை தொடர்பில் விசாரணை மேற்கொள்ளப்பட்டதன் ஊடாக இந்த...
இலங்கை போக்குவரத்து சபை எந்த நிலையிலும் தனியார் மயப்படுத்தப்படாது என போக்குவரத்து மற்றும் விமான சேவைகள் பிரதி அமைச்சர் அசோக்க அபேசிங்க தெரிவித்துள்ளார்.
நேற்று பாராளுமன்றத்தில் இலங்கை போக்குவரத்து சபையை தனியார் மயப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளதாக உதய கம்மன்பிலவினால் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே பிரதி அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இலங்கை போக்குவரத்து சபையின் சேவை தேசிய சொத்தாகும். எந்த ஒரு நிலையிலும் இந்த சேவையை தனியார் மயப்படுத்தும் நோக்கம் அரசாங்கத்துக்கு இல்லை...
மலேசியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகராக கொழும்பு நகர சபையின் முன்னாள் மேயர் ஏ.ஜே.எம்.முஸம்மிலை நியமிப்பதற்கு யோசனைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பில் அரச சேவைகள் பாராளுமன்ற செயற்குழுவினால் ஆராயப்பட்டு வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதேவேளை மலேசியாவிற்கான தற்போதைய உயர்ஸ்தானிகர் அன்ஸார் அண்மையில் மலேசியாவில் வைத்து தாக்குதலுக்கு உள்ளாகியுள்ள நிலையில் அவர் இலங்கைக்கு திருப்பி அழைக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கொழும்பு நகர மேயராக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோசி சேனநாயக்க போட்டியிடவுள்ளமை உறுதியாகியுள்ளதாக...
ஐந்து மாவட்டங்களின் கிராம சேவைப் பிரிவு வரைபடங்கள் வரையும் பணிகள் பூர்த்தியாகவில்லை! -லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன
Thinappuyal -
ஐந்து மாவட்டங்களின் கிராம சேவைப் பிரிவு வரைபடங்கள் வரையும் பணிகள் பூர்த்தியாகவில்லை என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான எல்லை நிர்ணயப் பணிகள் பூர்த்தியாகியுள்ளதாக ராஜாங்க அமைச்சர் லக்ஸ்மன் யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
தொகுதிவாரி அடிப்படையில் தேர்தலை நடாத்துவதற்கு எல்லை நிர்ணயப்பணிகள் பூர்த்தியாகியுள்ளன. எனினும் ஐந்து மாவட்டங்களின் கிராம சேவகர் பிரிவுகளுக்கான வரைபடங்களை வரையும் பணிகள்...
முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வின் போது, விஷ ஊசி ஏற்றப்பட்டதா என்பதை ஆய்வு செய்வதற்காக, நடத்தப்பட்ட முதற்கட்ட பரிசோதனைகளில், 26 முன்னாள் போராளிகள் பங்கேற்றதாக தெரிவிக்கப்படுகிறது.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மருத்துவமனைகளில் இந்த சிறப்பு மருத்துவ பரிசோதனைகளுக்கு முதற்கட்டமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இதன்போது யாழ்ப்பாண மாவட்டத்தில் 9 முன்னாள் போராளிகளும், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் தலா 7 முன்னாள் போராளிகளும், வவுனியா மாவட்டத்தில் 3...
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பக்கேஜ் போய் என அழைக்கப்படும் சஜின் வாஸ் குணவர்தன் அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு இரகசியமாக சென்றுள்ளார்.
Thinappuyal -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பக்கேஜ் போய் என அழைக்கப்படும் ராஜபக்ச ரெஜிமென்டின் பலமான நபரான சஜின் வாஸ் குணவர்தன் அண்மையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை சந்திப்பதற்கு அவரது கொள்ளுப்பிட்டி வீட்டிற்கு சென்றுள்ளார்.
பிரதமரை சந்திக்க அவர் ஒரு முச்சக்கர வண்டியிலேயே சென்றுள்ளார். அவரது வாகனத்தை ரோயல் கல்லூரிக்கு அருகில் நிறுத்தி வைத்து விட்டு பிரதமரின் வீட்டிற்கு யாருக்கும் தெரியாமல் இரகசியமாக சென்றுள்ளார்.
தன் அருகிலே இருக்கும் பலரின் கோரிக்கைகளுக்கமையவே பிரதமர்...
எனது தலையில் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்பதே வேறு நபர்கள் சொல்லித்தான் எனக்குத் தெரியும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா தெரிவித்துள்ளார்.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திர உள்ளிட்ட நான்கு பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் மேல் நீதிமன்றம் துமிந்த சில்வா உள்ளிட்ட ஐந்து பேருக்கு மரண தண்டனை விதித்திருந்தது.
நேற்றைய வழக்கு தீர்ப்பின் போது நீதிபதிகளிடம் துமிந்த இதனைத் தெரிவித்திருந்தார்....
சுவாதி படுகொலை வழக்கு தற்போது தீவிரமடைந்துள்ள நிலையில், வழக்கை வாதாடும் சிறப்பு அரச சட்டத்தரணியாக கோபிநாத் நியமிக்கப்பட்டுள்ளார்.
சென்னை நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தில் கடந்த ஜூன் மாதம் 24ஆம் திகதி சுவாதி கொடூரமாக வெட்டிக் படுகொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பில் ராம்குமார் என்பவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
எனினும், அவரது கைதில் பல சர்ச்சைகள் நிலவுகின்றன. உண்மையான குற்றவாளி ராம்குமார் இல்லை என ஒரு தரப்பு தீவிரமாக வாதிட்டு வருகிறது.
இந்நிலையில்,...
வடக்கில் படையினர் மீது சுமத்தப்படும் குற்றச்சாட்டுகளை நிராகரிக்கிறோம்! இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன
Thinappuyal -
சொந்தத் தேவைக்கே இராணுவத்தினர் வடக்கில் விவசாயம் செய்கின்றார்கள் என இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ரொசான் செனவிரட்ன தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் படையினர் விவசாயம் செய்து அறுவடையை விற்பனை செய்வதனால் விவசாயிகள் பாதிக்கப்படுவதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
இந்தக் குற்றச்சாட்டு குறித்து கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
வடக்கில் இராணுவத்தினர் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடுவது இராணுவத்தின் தேவைகளை பூர்த்தி செய்து கொள்வதற்காகும். வர்த்தக நோக்கங்களுக்காக...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜக்சவிற்கு எதிராக மலேசியாவில் சுமார் 400 முறைப்பாடுகள் செய்தவர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
மலேசிய பொலிஸார் நேற்று இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். மஹிந்த ராஜபக்சவிற்கு எதிராக போலியான முறையில் இவ்வாறு முறைப்பாடு செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச மலேசியாவிற்கு விஜயம் செய்வதற்கு ஒரு நாளுக்கு முன்னதாக நான்கு பொலிஸ் நிலையங்களில் இந்த முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முன்னாள் ஜனாதிபதி போர்க் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக அந்த முறைப்பாடுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது....