அமெரிக்காவில் சிறுவயதாக இருந்த போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்தவரை பெண் பொலிஸ் ஒருவர் 19 வருடம் கழித்து சிறையில் அடைத்துள்ளார்.
அமெரிக்காவில் டெக்சாஸ் என்ற பகுதியில் பெண் பொலிஸ் ஒருவர் தனக்கு 8 வயதாக இருக்கும் பொழுது தொடர்ந்து நான்கு வருடம் பாலியல் தொல்லை அளித்த Erlis Chaisson என்ற நபரை சிறையில் அடைக்க எண்ணியுள்ளார்.
இந்நிலையில், Erlis Chaisson - னிடம் தனியாக சந்திக்க அழைப்பு விடுத்துள்ளார்.
இதைத் தொடர்ந்து,...
கனவு கண்டு பயந்தவர்களைப் போன்று கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் கருத்து வெளியிட்டு வருவதாக சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பு பத்திரிகையொன்றுக்கு அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் விதுர விக்ரமநாயக்க உள்ளிட்ட சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் கனவில் மிரண்டவர்களைப் போன்றே கருத்து வெளியிட்டு வருகின்றனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் பொதுச்செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்கவை...
அருள்மிகு ஸ்ரீ கதிர்வேலாயுத சுவாமி தேவஸ்தான 27 வது ஆவணி
விநாயகர் மஹா சதுர்த்தி விழாவில் விநாயகர் மஹா சதுர்த்தி தினத்தை முன்னிட்டு (07.09.2016) பகல் 12.00 மணிக்கு பிரமாண்டமான ஸ்ரீ மஹா கணபதி திருவுருவ சிலைக்கு விசேட பூஜை நிகழப்பெற்று, விநாயகர் திருவுருவ சிலை மங்கள வாத்தியங்கள் முழங்க, கரகம், காவடியடன் வெகு விமர்சையாக புசல்லாவ நகரினூடாக ஊர்வலமாக எடுத்துச்செல்லப்பட்டு, இரட்டைப்பாதை ஸ்ரீ விநாயகர் ஆலயத்தின் அருகிலுள்ள ஆற்றில் இறக்கும்...
“நச்சுத்தன்மையற்ற நாடு” தேசிய நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக ஊடக நிறுவனங்களின் பிரதிநிதிகளுக்கு விளக்கமளிக்கும் சந்திப்பு ஜனாதிபதி தலைமையில்
Thinappuyal -
நச்சுத்தன்மையற்ற நாடு தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டத்தை நாடெங்கிலும் நடைமுறைப்படுத்தி அரசாங்கம் நாட்டில் ஒரு ஆரோக்கியமான சமூகத்தைக் கட்டியெழுப்பும் மிகப்பெரும் பொறுப்பை நிறைவேற்றி வருகின்றது என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார்.
எனவே அந்த நிகழ்ச்சித்திட்டங்களுடன் எல்லாத் தரப்பினரும் ஒன்றிணைய வேண்டும் என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டார். நேற்று (07) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற 'நச்சுத்தன்மையற்ற நாடு' தேசிய உணவு உற்பத்தி நிகழ்ச்சித்திட்டம் தொடர்பாக ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் பிரதிநிதிகளுக்கு தெளிவுபடுத்தும் சந்திப்பின்போதே ஜனாதிபதி இதனைத்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமசந்திரவின் கொலை வழக்கின் குற்றவாளிகளான முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா வெளிக்கடை சிறைச்சாலையில் இருந்து கண்டி போகம்பறை சிறைச்சாலைக்கு இடமாற்றப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் இந்த வழக்கின் மற்றுமொரு குற்றவாளியான தெமட்டகொட சமிந்தவையும் போகம்பறை சிறைச்சாலைக்கு இடமாற்ற சிறைச்சாலையின் உயர் அதிகாரிகள் தீர்மானித்துள்ளதாக சிறைச்சாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
ஏற்கனவே மரண தண்டனைப் பெற்ற பாதாள உலக குழுவினர் குறித்த சிறைச்சாலையில் இருப்பதால் அவர்களால் துமிந்த...
மேல் மாகாண விவசாய நீர்ப்பாசன, காணி, கால்நடை உற்பத்தி, சுகாதார, மீன்பிடி மற்றும் விவசாய அபிவிருத்தி அமைச்சினால் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள விவசாய, பண்ணை உற்பத்தி கண்காட்சியை ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் இன்று (08) ஹோமாகம வில்பிரட் சேனாநாயக்க விளையாட்டு மைதானத்தில் திறந்து வைத்தார். இன்றும் நாளையும் இடம்பெறும் இக்கண்காட்சி, மாகாணத்தில் உள்ள பாடசாலை மாணவர்கள்,
இளைஞர் சமூகத்தினர், விவசாய சமூகத்தினர் மற்றும் மாகாணத்தில் உள்ள விவசாய தொழில் முயற்சியாளர்களுக்கு விவசாயத்துறை தொடர்பான விளக்கங்களை பெற்றுக்கொடுப்பதற்கும்...
நச்சுத்தன்மையுள்ள கிருமிநாசினிகளுக்குப் பதிலாக மாற்று வழிகளை கண்டறிவதற்கு விஞ்ஞானிகள் உடனடிக் கவனம் செலுத்த வேண்டும் – ஜனாதிபதி
Thinappuyal -
மக்களின் சுகாதாரத்திற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் நச்சுத்தன்மையுடன் கூடிய கிருமிநாசினிகள், பீடைக்கொல்லிகள் தொடர்பில் மாற்று வழிமுறைகளை கண்டறிவதற்கு விஞ்ஞானிகளும் தொழில்நுட்பவியலாளர்களும் உடனடிக் கவனம் செலுத்த வேண்டுமென ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். நேற்று (07) பிற்பகல் தாமரைத் தடாகம் கலையரங்கில் நடைபெற்ற 2016ஆம் ஆண்டு விஞ்ஞான தொழில்நுட்ப மாநாட்டின் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.
கிருமிநாசினிகள் மற்றும் பீடைகொல்லிகளின் காரணமாக இன்று நாட்டில் அப்பாவி மக்கள் முகங்கொடுத்துள்ள சிறுநீரக நோய் ஒரு தேசம்...
கலை கலாசாரத்தை பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியமானது என நாடாளுமன்ற உறுப்பினர் அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் நேற்று உரையாற்றிய போது இதனைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்…
இன சமூகத்தைப் போன்றே அதன் கலை மற்றும் கலாசாரத்தையும் பேணிப் பாதுகாக்க வேண்டியது அவசியமானதாகும்.
அனைத்து இன சமூகங்களும் தத்தமது மரபுகளுக்கு ஏற்ற வகையில் கலை மற்றும் கலாசார நடவடிக்கைகளை முன்னெடுக்கின்றனர்.
சில வேளைகளில் நாம் மேற்கத்தைய கலாசாரத்தை நோக்கி நகர்கின்றோமோ என்ற சந்தேகம் எழுகின்றது.
நாம்...
மத்திய வங்கி முறிக்கொள்வனவில் முறைகேடு தொடர்பிலான நாடாளுமன்ற கோப் குழுவின்விசாரணைகள் நேற்று முடிவடைந்தன.
இந்தநிலையில் இது தொடர்பான அறிக்கை எதிர்வரும் ஒக்டோபர் 13ம் திகதியன்றுநாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று கோப் குழுவின் தலைவர் சுனில்ஹந்துன்நெத்தி தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற விசாரணையின்போது மத்திய வங்கியின் ஆளுநர் இந்திரஜித்குமாரசுவாமியும் தமது சாட்சியத்தை பதிவுசெய்தார்.
எனினும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கோப் குழுவினர் இணக்கத்தை எட்டவில்லை என்றுகூறப்படுகிறது.
இந்திரஜித் குமாரசுவாமி, சாட்சியமளிக்க வந்த போது பிரதியமைச்சர் ஹர்ச டி சில்வாசில...
மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி சந்தனமடு ஆற்றுப் படுக்கையை அண்டிய காட்டுப் பாதையில் கடந்த சனிக்கிழமை காட்டு யானை தாக்கி 11 வயதான பாடசாலை மாணவி உயிரிழந்தார்.
அத்துடன், உயரிழந்த சிறுமியின் தங்கை காயமடைந்த துயரச் சம்பவமொன்று பதிவாகியிருந்தது. குறித்த சம்பவம் இடம்பெற்ற காட்டுப் பாதை மிகவும் மோசமான நிலையில் பாதுகாப்பற்ற நிலையில் காணப்பட்டது.
இந்நிலையில், குறித்த வீதி பற்றைக்காடுகளால் மூடியிருந்த நிலையில் அவற்றினை முழுமையாக அகற்றி மக்களின் போக்குவரத்து...