சளி, இருமல் என்றதுமே மருத்துவரிடம் செல்லாமல் வீட்டிலுள்ள பொருட்களை கொண்டே சரிசெய்யலாம். மறதி: அவதிப்படுபவர்கள், ஒரு தேக்கரண்டி தேனில் 5 மிளகு பொடியை குழைந்து சாப்பிட்டு வந்தால் மறதி மறைந்துவிடும். இருமல்: உலர்ந்த திராட்சையை பாலில் இட்டு காய்ச்சி குடித்து வந்தால் நீங்கும். ஒரு சிட்டிகை மஞ்சள், மிளகுப்பொடியை தேனில் குழைத்து சாப்பிட்டு வந்தாலும் குணமாகும். சளித் தொல்லை: வெற்றிலை, 3 மிளகு, துளசி இலையை சேர்த்து மென்று விழுங்கவும் அல்லது உறங்கும்...
அனைவரும் விரும்பி சாப்பிடும் வல்லாரைக் கீரை மிகவும் சுவையாகவும், மருத்துவ குணம் நிறைந்ததாகவும் உள்ளது. வல்லாரைக் கீரை நீர் அதிகம் நிறைந்துள்ளப் பகுதிகளில் தானாக வளரக் கூடியது. இந்த கீரை வல்லமை மிக்கது என்பதால் இதற்கு வல்லாரை கீரை என்று பெயர் வந்தது. இக்கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து, விட்டமின் A, விட்டமின் C மற்றும் தாது உப்புக்கள் ஏராளமாக அடங்கியுள்ளன. பயன்கள் வல்லாரைக் கீரையை ஒரு கைப்பிடியளவு எடுத்து அரைத்து சாப்பிட்ட பின்னர், பசும்பால்...
உறவினர்கள் கைவிட்டதால் தனக்கு தானே கல்லறை கட்டி இறப்புக்காக காத்திருக்கும் பெண் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. குமரி மேற்கு மாவட்டத்தில் கேரள எல்லையையொட்டி அமைந்துள்ள கிராமம் பல்லுக்குழி. இங்கு வசித்து வருபவர் ரோசி (வயது 55). மத்திய அரசின் 100 நாள் வேலை திட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தனது வீடு அருகே தனக்காக கல்லறை கட்டி இறப்புக்கு காத்திருப்பதாக தகவல் வெளியானது. இது உண்மை தானா? என விசாரித்த போது ரோசி...
கிழக்கு மாகாண கால் நடை அபிவிருத்தி சுகாதாரத் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் காரியாலய புதிய கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. நீண்டகாலமாக மாகாண கால்நடை அபிவிருத்தி சுகாதாரத் திணைக்களத்தின் திருகோணமலை மாவட்ட பிரதிப் பணிப்பாளர் காரியாலயத்திற்கு சொந்தக் கட்டடம் ஒன்று இல்லாமல் இயங்கி வந்தது. தற்போது 18 மில்லியன் ரூபா பெறுமதியில் மேற்படி கட்டடம் அமைக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. மாகாணப் பணிப்பாளர் பாஃசி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம...
திருமணத்தில் மணப்பெண்களுக்கு மலர்களைக் கொண்டு அவர்களுடைய ஜடைகளில், பூ அலங்காரம் செய்வது மிகவும் பேஷனாகவும் இன்றும் வழக்கமாகவும் இருந்து வருகிறது. சமீப காலமாக ‘பிளவர் வேனி(Flower Veni)’ என்கின்ற பூ ஜடை அலங்காரம் ட்ரெண்டாக இருக்கிறது. தலையில் சூடும் மலர்களைத் தவிர்த்து, மலர் செண்டுகளாக பயன்படுத்தும் ஐடியா தான் இன்று மணப்பெண் அலங்காரத்திற்கு சிறப்பாக திகழ்கிறது. ஜெர்பரான் என்னும் மலரில் எண்ணற்ற வண்ணங்கள் இருப்பதால், இதனை தங்களின் ஆடைகளுக்கு ஏற்றார் போல நிறங்களை...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் நிலையத்திற்கு அருகில் நேற்று லொறி ஒன்று மின்கம்பத்தோடு மோதிய விபத்துக்குள்ளாகி உள்ளது. கல்முனையிலிருந்து மட்டக்களப்பை நோக்கி வந்த லொறி வீதியருகே இருந்த அதி வலு கொண்ட மின்கம்பிகளைத் தாங்கியிருக்கும் மின்கம்பத்துடன் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. குறித்த லொறியை செலுத்திச் சென்ற சாரதியும் உதவியாளரும் படுகாயங்கள் அடைந்த நிலையில் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இதேவேளை இந்த விபத்தின் காரணமாக மின்கம்பம் உடைந்து வீழ்ந்ததால் காத்தான்குடி நகரத்திற்கான...
மட்டக்களப்பு மாவட்டத்தின் செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் நடைபெறும் சட்ட விரோாத மண் அகழ்வினை தடுக்ககோரியும் மாவடியோடை பாலம் புனரமைப்பு பணிக்கு மண் எடுப்பதற்கான அனுமதி மறுக்கப்பட்டதை கண்டித்தும் விவசாயிகளினால் ஆர்ப்பாட்டம் ஒன்றுமுன்னெடுக்கப்பட்டது. குறித்த ஆர்ப்பாட்டம் இன்று மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக விவசாயிகளினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆர்ப்பாட்டத்தில் உறுகாமம் நீர்பாசனத்திற்குட்பட்ட பகுதிகளில் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடும் விவசாயிகள் கலந்துகொண்டுள்ளனர். நீர்பாசன திணைக்களத்தினால் மாவடியோடை பாலம் மற்றும் அதன் அணைக்கட்டுகள் புனரமைக்கப்பட்டுவந்த...
அமெரிக்க போன்ற நாடுகளில் பிரஜாவுரிமை பெற்றுக்கொள்வது என்பது இலகுவான காரியமல்ல ஆனால் மிக இலகுவாக பிரஜாவுரிமையை வழங்குவதற்கு தென் அமெரிக்க நாடு ஒன்று முன்வந்துள்ளது. தென்அமெரிக்காவின் பரகுவே நாடே இந்த வாய்ப்பை வழங்கியுள்ளது. பரகுவே நாட்டிற்குள் 50,000 டொலர்களை செலுத்தி வங்கிக் கணக்கை ஆரம்பிக்கும் வெளிநாட்டு பிரஜைகளுக்கு அந்த நாட்டின் பிரஜாவுரிமை வழங்கப்படவுள்ளதாக அரசு அறிவித்துள்ளது. இலங்கையின் பெறுமதியில் 7 இலட்ச ரூபாயினை பரகுவேயின் வங்கியில் வைப்பிலிடும் நபர்களுக்கு வங்கிகளில் கடிதம் ஒன்று...
10 வருட நிரந்தர வதிவிட வீசாவில் பிரித்தானியா செல்லவிருந்த தமிழ் வயோதிபத் தம்பதிகள் கட்டுநாயக்க விமானநிலையத்தில் வைத்து திருப்பியனுப்பப்பட்டனர். இந்தச சம்பவம் இன்று நண்பகல் நடைபெற்றுள்ளது. இது குறித்து தெரியவருவதாவது, முல்லைத்தீவு துணுக்காய் பிரதேசத்தைச் சேர்ந்த குறித்த வயோதிப தம்பதிகள் கடந்த 2012ம் ஆண்டு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தில் 10 வருடங்களுக்கு நிரந்தர வதிவிட வீசா பெற்றிருந்தனர். இவர்கள் வீசா பெற்ற பின்னர் இரண்டு தடவைகள் லண்டன் சென்று அங்கு சில காலங்கள் தங்கியிருந்து விட்டு...
இலங்கையிலிருந்து சட்டவிரோதமான முறையில் கட்டாரிற்கு பணிபுரிய சென்றவர்களுக்கு கட்டார் அரசாங்கம் 3 மாத பொது மன்னிப்பு காலம் வழங்கியுள்ளது. சட்டவிரோதமாக தொழில்புரியும் இலங்கையர்கள் நாடு திரும்புவதற்காகவே இந்த பொதுமன்னிப்பு காலம் வழங்கப்பட்டுள்ளது. செப்டம்பர் மாதம் 1ஆம் திகதி முதல் டிசம்பர் மாதம் 1ஆம் திகதி வரையில் இந்த பொதுமன்னிப்பு காலம் அறிவிக்கப்பட்டுள்ளது. விசா காலம் நிறைவடைந்தும் கட்டாரில் தங்கியிருக்கும் இலங்கையர்களுக்கும் நாடு திரும்புவதற்கு இது ஒரு நல்ல வாய்ப்பாக அமையும் என கட்டார்...