முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் கொலை செய்யப்பட்ட வழக்கின் இறுதித் தீர்ப்பு இன்று வழங்கப்பட உள்ளது. கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இந்த தீர்ப்பு வழங்கப்பட உள்ளதால் நீதிமன்றத்தைச் சுற்றி பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நீதிமன்றத்தின் நாலா புறமும் பொலிஸார் குவிக்கப்பட்டுள்ளதோடு, பிரச்சினைகள் ஏற்படுமிடத்து அதை தடுப்பதற்காக அனைவரும் தயார் நிலையில் உள்ளனர். இந்த வழக்கின் பிரதான சந்தேகநபரான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு எதிராக 17 குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் இந்த...
பாணந்துறை பிரதேசத்தை சேர்ந்த வர்த்தகர் ஒருவரை கார் ஒன்றில் கடத்திச் சென்ற மூன்று பேரை பண்டாரகம பொலிஸார் கைது செய்துள்ளனர். கடத்திச் செல்லப்பட்ட வர்த்தகர் தாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் பாணந்துறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த பண்டாரகம பொலிஸ் நிலையத்தின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்தே வர்த்தகரை கடத்திச் சென்ற சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் பொலிஸார் தொடர்ந்தும் விசாரணை நடத்தி...
குருணாகல் பகுதியில் பொலிஸ் அதிகாரிகள் முன்னிலையில் பெண் ஒருவர் மீது இளைஞர்கள் சிலர் கொடூரமாக தாக்குதல் மேற்கொண்டுள்ள காணொளி ஒன்று நேற்று வெளியாகியிருந்தது. நடு வீதியில் வைத்து யுவதி ஒருவரையும் இளைஞர் ஒருவரையும் விரட்டி விரட்டி கூட்டமொன்று தாக்கும் அந்த காணாளி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்நிலையில் குறித்த யுவதி மீது எதற்காக தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது என்ற காரணம் தற்போது வெளியாகியுள்ளது. தாக்குதலுக்கு இலக்கான பெண் தனது காதலனுடன் குருணாகல் பகுதியில்...
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளரான மைத்திரிபால சிறிசேனவை கொலை செய்ய முயற்சிகள் எடுக்கப்பட்டதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ஜனாதிபதி தேர்தலின் போது மருதானையில் இடம்பெற்ற இறுதி பேரணியில் மைத்திரியை கொலை செய்வதற்காக ஸ்னெப்பர் ரக துப்பாக்கிகள் சிலவற்றை, ராஜபக்சர்களினால் இரகசியமாக கொள்கலன்களின் மறைத்து கொண்டு வரப்பட்டதாக ஊடகம் சுட்டிக்காட்டியுள்ளது. அதனை பரிசோதிக்காமல் நாட்டினுள் விடுவிப்பதற்காக தற்போதைய சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சின் செயலாளர் ஜகத்...
உலக அளவில் இரவு கேளிக்கை அம்சங்களில் பலராலும் விரும்பப்பட்ட லண்டன் நகரம், அந்நிலையிலிருந்து தற்போது வீழ்ச்சியடைந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் லண்டன் மாநகர மேயர் தனது தீவிர கவலையை வெளிப்படுத்தியுள்ளார். இந்த ஆண்டின் தொடக்கத்தில், அதிகளவு போதைப் பொருள் உட்கொண்டதால் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ள ஃபேப்ரிக் இரவு விடுதியின் உரிமத்தினை ஒரு உள்ளூர் நகர சபை திரும்பப் பெற்றதற்கு பின்னர், அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பலரையும் ஈர்க்கக் கூடிய உலகின்...
  இதனுடைய உண்மைத் தன்மை என்னவென்று தினப்புயல் இணையத்தளம் வினவியபொழுது.. மிசநெறி பாடசாலைகளின் விவகாரத்தில் மத்திய அரசோ வடமாகனசபையோ தீர்த்துவைக்க முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்த வட்டுக்கோட்டை யப்னா கொலிஜ் (Jaffna College) அதிபர் டேவிட்.எஸ்.சலமொன் எமது பாடசாலையில் எமது நிர்வாகத்தைத் தவிர வேறு எவருமே தலையிடமுடியாது. அப்படியாக இருந்தால் இதனுடைய உண்மைத் தன்மை என்ன எப்படி அதனைச் சீர்செய்யமுடியும்? அறுபது வயதைக் கடந்துவிட்டால் ஒரு ஆசிரியர் ஓய்வு பெறவேண்டும். அதான் அரசாங்கத்தினுடைய...
மலேசியாவில் புலிகளின் ஆதரவுத் தளம் தீவிரமாக ஆதரித்து வரும் நிலையில் அங்குள்ள இலங்கைத் தூதரகம் தொடர்ந்தும் மௌனம் காத்துவருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தெரிவித்துள்ளது. மலேசியாவில் வாழும் இந்திய வம்சாவளியினர் தற்போது விடுதலைப் புலிகளின் தீவிர ஆதரவு நிலைப்பாட்டில் உள்ளனர். அண்மையில் மலேசிய பௌத்த விகாரை மற்றும் இலங்கையின் உயர் ஸ்தானிகர் மீதான தாக்குதலின் பின்னணியிலும் அவர்களே செயற்பட்டுள்ளனர். அத்துடன் மலேசிய அரசாங்கத்தில் பிரதிநிதித்துவம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் கஸ்தூரி பிராந்திய துணை...
மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதியொருவர் ஒன்பது வருட தலைமறைவு வாழ்க்கையின்பின்னர் பொலிசாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். இரத்தினபுரி மாவட்டம், கஹவத்தை, எண்டாலவத்தை பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயதான ஜேசையா ஆனந்தராஜா என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த 2007ம் ஆண்டு கஹவத்தை பிரதேசத்தில் நடைபெற்ற கொலைச் சம்பவம் ஒன்றில் தொடர்புடைய குறித்த நபர் , குறித்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்திற்குச் சமூகமளிக்காமல் தலைமறைவாகி உள்ளார். சந்தேக நபர் இன்றியே நடைபெற்ற வழக்கு விசாரணையின் முடிவில்...
இலங்கைக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் புதிய அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இலங்கைக்கு சுற்றுலா பயணம் மேற்கொண்டிருந்த சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை 166,610 ஆகும். அதனை இந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் 11.8 வீத அதிகரிப்பு காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. இதேவேளை, 2016ஆம் ஆண்டின் முதல் 8 மாதங்களுக்குள் இலங்கை வந்துள்ள சுற்றுலா பயணிகளின் மொத்த எண்ணிக்கை 1,359,906 ஆக பதிவாகியுள்ளது....
அவுஸ்திரேலியாவின் மெல்பேர்ன் பல்கலைக்கழகத்தில் பயிலும் இலங்கை மாணவிக்கு ஏனைய மாணவர்கள் இணைந்து கல்விக்காக நிதிசேர்த்துக்கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சுமுதினி சுலோச்சனா என்ற இந்த மாணவி பொருளாதாரத்துறையில் இறுதி ஆண்டில் கல்வி கற்றுவருகிறார். இதற்காக அவருக்கு 20ஆயிரம் டொலர்களை தேவை. எனினும் அதனை சுலோச்சனாவினால் வழங்க முடியாமையால் அவரின் வீசாவை முடிவுறுத்தும் நிலை ஏற்பட்டது. இதனையடுத்து அவரின் நண்பி ஒருவர் மேற்கொண்ட பிரசாரத்தின் பேரில் குறித்தமாணவியுடன் பயிலும் மாணவர்கள், இணைந்து 18,500 டொலர்களை சேர்த்தக்கொடுத்துள்ளனர் என்று...