மனிதனின் ஆரோக்கியமான வாழ்விற்கு காய்கறிகளும், பழங்களும் மிக முக்கிய பங்கு வகிக்கிறது. காய்கறி வகையை சேர்ந்த கத்திரிக்காய் தக்காளிக்கு நிகரான சத்துக்களை கொண்டுள்ளது என்பது சில பேருக்கு தெரியாததால், அதை சாப்பிடாமல் ஒதுக்கி வைக்கின்றனர். நீங்கள் நினைக்காத அளவுக்கு இந்த கத்தரிக்காயில் சிறந்த மருத்துவ குணங்கள் ஏராளமாய் உள்ளது. நீல நிறமுள்ள பிஞ்சு கத்தரிக்காய் உடலுக்கு நல்ல வளத்தையும், சத்துக்களையும் தருகிறது. நீர்ச்சத்து, இரும்புச்சத்து, நார்ச்சத்து, புரதம், கார்போஹைட்ரேட், பாஸ்பரஸ், கால்சியம், விட்டமின்கள்...
இன்றைய காலகட்டத்தில் இருப்பது போன்ற சூழல் நீடித்தால் 2050ம் ஆண்டுக்குள் பாதி உயிரினங்களே இருக்காது என நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இதுகுறித்து சூழலியல் நிபுணராக ரீஸ் ஹால்டர் என்பவர் கூறுகையில், பூமியை மனிதர்கள் மிக மோசமான நிலைக்கு கொண்டு வந்து விட்டனர். இந்த நிலை நீடித்தால் இன்னும் பல கோடி ஆண்டுகளில் பூமியே ஒரு பாறை போன்று மாறிவிடும். இங்கு தாவரங்களும், உயிரினங்களும் பாசில்கள் போல மாறி விடும். இதை மாற்ற நாம் மிகப்...
அமெரிக்காவில் உள்ள பிரபல நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான இந்திய வம்சாவளியை சேர்ந்த ஹிமன்சு பாட்டியா மீது வேலைக்காரப் பெண்ணை கொடுமைப்படுத்தியதாக புகார் எழுந்துள்ளது. ரோஸ் இன்டர்நேஷனல் என்ற நிறுவனம் அமெரி்க்காவின் மிசவவுரி மாகாணத்தைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்தியாவிலும் இதற்குக் கிளைகள் உள்ளன. இதன் தலைமை செயலதிகாரி பொறுப்பில் இருந்து வருபவர் கொல்கத்தாவை பூர்விகமாக கொண்ட ஹிமன்சு பாட்டியா. இந்நிலையில் இவர் மீது வீட்டு வேலைக்காரப் பெண்ணை கொடுமைப்படுத்தியதாக அந்த...
மனிதர்கள் தாம் சுத்தமக இருப்பதற்கும், தம்மை அழகுபடுத்துவதற்கும் பல்வேறு செயற்கை பொருட்களை அன்றாட வாழ்வில் பயன்படுத்தி வருகின்றனர். இவ்வாறான பல பொருட்களில் அவர்களில் உடலுக்கும், சூழலுக்கும் தீங்கு விளைவிக்கக்கூடிய பதார்த்தங்கள் காணப்படுவதாக தொடர்ச்சியாக எச்சரிக்கப்பட்டு வருகின்றது. இவற்றின் வரிசையில் தற்போது டூத்பேஸ்ட் மற்றும் சில அழகுசாதனப் பொருட்களில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் சிறு துணிக்கைகள் பற்றி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதாவது பற்களை இலகுவாக சுத்தம் செய்வதற்காக இப் பிளாஸ்டிக் சிறு துணிக்கைகள் டூத்பேஸ்டில் சேர்க்கப்பட்டுள்ளன. அதே...
பல வகையான உயிரினங்கள் இயற்கை சீற்றம், மற்றும் மனித செயற்பாடுகள் காரணமாக இன்று வெகுவாக அழிந்து வருகின்றன. ஆனால் ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னர் இயற்கை அனர்த்தங்களால் மட்டுமே அழிந்து பல்வேறு உயிரினங்களின் படிமங்கள் இன்றும் ஆங்காங்கே கண்டெடுக்கப்பட்டு வருகின்றன. தற்போது சுமார் 170 மில்லியன் வருடங்களுக்கு முன்னரான ஜுராஸிக் காலம் எனப்படும் டைனோசர் காலத்தில் வாழ்ந்ததாகக் கருதப்படும் கடல் வாழ் உயிரினம் ஒன்று தொடர்பில் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன் படிமங்கள் கடந்த கால்...
உடல் எடை அதிகமாக உள்ளது என்று வருந்துபவரா நீங்கள், இனிமேல் கவலை வேண்டாம். உங்களின் எடையை குறைத்து, ஸ்லிம்மாக தினமும் காலை உணவாக இரண்டு முட்டைகள் மட்டுமே சாப்பிடுங்கள். இவ்வாறு சாப்பிடுவதால் அதிக புரோட்டீன் சத்துகள் கிடைக்கிறது, மதிய உணவு மட்டுமின்றி நாள் முழுவதும் பசியின் அளவு குறைந்து, உடம்பில் உள்ள கலோரிகள் குறைக்கப்பட்டு, உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க முடிகிறது. முட்டையில் கொழுப்பு, புரதம், விட்டமின்கள், இரும்புச்சத்துகள், அயோடின், கால்சியம், போலிக்...
இம் மாதம் iPhone 7 எனும் புதிய கைப்பேசியினை அப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்யவுள்ளது. இது தொடர்பான தகவல்களை வெளியிடும் செய்தியாளர்கள் மாநாடு இன்றைய தினம் நடைபெறவுள்ளது. இந்நிலையில் தற்போது iPhone 7 பக்கிங் எப்படி இருக்கும் என எதிர்பார்ப்பவர்களுக்காக முன்னரே புகைப்படங்கள் இணையத்தளங்களில் வெளியாகியுள்ளன. இப்புதிய கைப்பேசியின் வடிவத்தில் சில மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதுடன், 3.5 மில்லி மீற்றர் ஓடியோ ஜக், லைட்னிங் போர்ட் என்பவற்றினையும் உள்ளடக்கியுள்ளது. தவிர iPhone 7 மற்றும் iPhone...
வவுனியா பண்டாரப்பெரிய குளத்தில் 150 வருட காலமாக செய்கை பண்ணிய விவசாயிகளின் காணிகள் பேராறு நீர்த்தேக்கத்திற்காக 2007 இல் சுவீகரிக்கப்பட்ட நிலையில் 2014 ஆம் ஆண்டு சுவீகரிக்கப்பட்ட காணிக்கு மாற்றீடாக காணி வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு காணி வழங்கப்பட்டபோதிலும் அது விவசாயம் செய்யக்கூடிய நிலையிலோ அல்லது சுவீகரிக்கப்பட்ட காணிக்கு ஒப்பானதாக இல்லை என தெரிவித்து, இன்று 07-09-2016 வவுனியா பிரதேச செயலகத்தின் வாயிலிருந்து வவுனியா மாவட்ட செயலகம்வரை ஊர்வலமாக...
இனிமேல் நடைபெறவுள்ள தேர்தல்களின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் புதிய தலைமுறையினருக்கு கூடுதல் முக்கியத்துவம் வழங்கப்படுமென ஜனாதிபதி அவர்கள் தெரிவித்தார். அவ்வாறே மக்களுக்கு விசுவாசமானதும் பொதுமக்களின் இதயத் துடிப்பினைப் புரிந்துகொள்ளக்கூடியதுமான மக்கள்நேயக் கட்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைக் கட்டியெழுப்பி இனிமேல் நடைபெறவுள்ள தேர்தல்களில் வெற்றிபெறச் செய்வதாகவும் ஜனாதிபதி அவர்கள் குறிப்பிட்டார். ஸ்ரீஜயவர்தனபுர கோட்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தை நேற்று  (06) பிற்பகல் திறந்து வைத்த போதே ஜனாதிபதி கௌரவ...
இணையத்தளம் என்பது சம காலத்தில் அனைவரது வாழ்விலும் முக்கிய இடத்தினைப் பிடித்துள்ளது என்பதை எவராலும் மறுக்க முடியாது. இந்த இணைய வலையமைப்பின் ஊடாக உலகளவில் நாள்தோறும் பாரிய அளவு தரவுகள் பரிமாற்றம் செய்யப்படுகின்றன. இந் நிலையில் அமெரிக்காவின் தொலைத்தொடர்பாடல் சேவையினை வழங்கும் முன்னணி நிறுவனமான AT&T உலகளவில் எவ்வாறு தரவுப் பரிமாற்றம் மேற்கொள்ளப்படுகின்றது என்பது தொடர்பான புகைப்படம் ஒன்றினையும், தரவுகளின் கொள்ளளவினையும் வெளியிட்டுள்ளது. இதன்படி சராசரியாக நாள் ஒன்றிற்கு 49 பீட்டா பைட்...