பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸவிற்கு எவ்விதத்திலும் பாதிப்பு ஏற்படுவதற்கு இடமளிக்கப் போவதில்லை என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றில் நேற்று (06)உரையாற்றுகையிலேயே பிரதமர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும், அவருடைய வாழ்க்கையை பாதுகாப்பது அரசின் கடமை, பொறுப்பு எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய மஹிந்தவிற்கு இலங்கையிலும், வெளிநாட்டு சுற்றுலாக்களின் போதும் பாதுகாப்பை பெற்றுத் தருமாறும், வழங்கப்படும் பாதுகாப்புகளை அதிகரிக்குமாறும் கோரிக்கை விடுக்கப்படுமாயின் அது தொடர்பில் ஆராயப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் மஹிந்தவின் வெளிநாட்டு...
உள்ளூராட்சி மன்றத் தேர்தல் எதிர்வரும் 2017ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறும் என்று மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பின்போதே இவ்வாறு கூறினார். தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,
இந்த மாதம் 15ஆம் திகதியுடன் எல்லைநிர்ணயங்கள் அனைத்தும் பூர்த்தியடைந்துள்ளதாகவும், இதைத் தொடர்ந்து உள்ளூராட்சி மன்றத் தேர்தல் 2017இல் நடைபெறும் என்று இறுதியான முடிவை அறிவித்தார்.
தேர்தல் அணையாளர் மஹிந்த தேசப்பிரிய நேற்று ஊடகவியலாளர்கள்...
சுவிட்சர்லாந்தில் தங்கியிருந்த புகலிடக் கோரிக்கையாளர்களை திருப்பி அனுப்பியதற்கு கண்டனம் தெரிவித்து 50 பேர் போராட்டம் செய்துள்ளனர்.
சிரியாவில் நடக்கும் யுத்தம் காரணமாக, அந்நாட்டை சேர்ந்த குர்திஷ் குடும்பத்தினர் கடந்த வருடம் Balkans ஐரோப்பிய எல்லை வாயிலாக சுவிட்சர்லாந்திற்கு புகலிடம் கோரி வந்துள்ளனர்.
இவர்களின் உறவினர் ஒருவர் சுவிட்சர்லாந்தில் இருந்த காரணத்தால் அவர்களது வீட்டில் தங்கியதோடு மட்டுமல்லாமல், புகலிடம் கோரி விண்ணப்பத்தினையும் பாதுகாப்பு துறையிடம் சமர்ப்பித்துள்ளனர்.
இந்நிலையில், இக்குடும்பத்தை சேர்ந்த 3 பேரையும் கைது...
வவுனியா மேல் நீதிமன்றத்தில் தயா மாஸ்ரரின் வழக்கு இன்று 06-09-2016 மேல் நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரன் முன்னிலையில் எடுக்கப்பட்டபோது சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தயா மாஸ்ரரின் சார்பாக ஆஜராகிய பின்னர் ஊடகவியலாளர்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளின் கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் எடுக்கப்பட்டு மீள திரும்பிவராத காரணத்தால் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை இன்று மேல்...
மலேசியாவில் புலம்பெயர் தமிழர்களால் கடந்த வாரங்களில் மேற்கொள்ளப்பட்ட அட்டூழியங்கள் இலங்கையிலும் ஏற்படலாம் என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
எனவே மலேசியாவில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் அரசு அதிக அவதானம் செலுத்தவது சிறந்தது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாவில் மஹிந்தவிற்கு எதிராக தாக்குதல் இடம்பெற்றது, அவருக்கு பலத்த எதிர்ப்புகள் காணப்பட்டது என்று தினமும் கூறி சந்தோசமடையும் விடயம் அல்ல இது எனக் குறிப்பிட்டுள்ள அவர்,
இந்த சம்பவத்தின் பின்னர் நாம் மேலும்...
சிறுவன் மீது கொதிநீர் ஊற்றிய குற்றச்சாட்டில் அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது சிறிய தாயை 1 லட்சம் ரூபாய் சரீர பிணையில் விடுதலை செய்ததுடன் வழக்கை நீதிவான் ஒத்திவைத்தார்.
06.09.2016 அன்று மஸ்கெலியா பொலிஸாரினால் அட்டன் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே நீதிவான் இவ்வாறு உத்தரவிட்டார்.
கடந்த 04.09.2016 இரவு மஸ்கெலியா ஸ்டஸ்பி தோட்டத்தில் 8 வயதுடைய சிறுவனை தனது சிறியதாய் கொதிநீரை ஊற்றி காயப்படுத்திய நிலையில் 05.09.2016 மஸ்கெலிய பொலிஸாரினால்...
யாழ்ப்பாணம் கோணப்புலம் முகாம் பகுதியில் மோதல் ஒருவர் பலி யாழ்ப்பாணம் கோணப்புலம் முகாம் பகுதியில் ஏற்பட்ட குடும்பதகராறு கைகலப்பாக மாறியதில் குடும்பஸ்தர் ஒருவர் நேற்று கொலை செய்யப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபரிற்கும் அவரது உறவினர் ஒருவருக்கு இடையில் நீண்டகாலமாக குடும்ப தகராறு காணப்பட்டுள்ளது. இதனையடுத்து நேற்று இரவு குறித்த உயிரிழந்த நபரும் அவரது உறவினரும் கோணப்புலம் முகாம் பகுதியில் வைத்து தகராறில் ஈடுபட்டுள்ளனர்.
தகராறு கைகலப்பாக மாற்றிய நிலையில் குறித்த நபர் மீது...
குழந்தையின் வளர்ச்சியை கண்டு மகிழ்வதில் பெற்றோருக்கு அளவில்லா இன்பம்.
உங்கள் குழந்தையை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்
குழந்தையின் வளர்ச்சியை கண்டு மகிழ்வதில் பெற்றோருக்கு அளவில்லா இன்பம். சில சமயங்களில் குழந்தையின் வளர்ச்சிப் படிகள் சீறாக அமைவதில்லை. அப்படிப்பட்ட குழந்தைகளை எவ்வாறு கண்டு கொள்வது என்பதை பற்றி பார்க்கலாம்.
குழந்தை பிறப்பிற்கு பின் உள்ள வளர்ச்சிப்படிகளைப் பற்றி பார்ப்போம்.
குழந்தையின் வளர்ச்சியை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம்.
1. உடல் சார்ந்த வளர்ச்சிகள்
2. அறிவு சார்ந்த வளர்ச்சிகள்...
கடந்த ஞாயிற்றுக் கிழமை திருகோணமலையில் வைத்து காணாமல் போனதாக கூறப்படும் வர்த்தகர் மொஹமட் நஸ்ரின் இன்று காலை ஹல்துமுல்ல பிரதேசத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த வர்த்தகர் ஹல்துமுல்ல பிரதேசத்திற்கு பஸ்ஸில் பயணிப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலில் அடிப்படையில் பொலிஸார் முன்னெடுத்த சுற்றிவளைப்பில் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மொஹமட் நஸ்ரின் கடன் தொல்லைகளிலிருந்து தப்பிப்பதற்காக தலைமறைவாகியிருந்துள்ளார் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
குறித்த சந்தேகநபர் திருகோணமலையிலிருந்து யாழ்ப்பாணம், வவுனியா, கொழும்பு, கொழும்பிலிருந்து...
இலங்கையின் வடக்கில் மக்கள் தொகை குறைவாக உள்ளதால் இராணுவ முகாம்கள் அமைக்க வடக்கே பொருத்தமான பகுதியாக அமையும் என பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்தார்.
அதேவேளை, தேசிய பாதுகாப்பிற்கு வடக்கிலிருந்தே 80 வீதமான அச்சுறுத்தல் செயற்பாடுகள் வந்துள்ளன. எனவே வடக்கில் தொடர்ந்தும் இராணுவத்தினை நிலைகொள்ளச் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார்.
தூய்மையான ஹெல உறுமயவின் தலைமை அலுவலகத்தில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துக்கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஐக்கிய...