பிரித்தானிய நாட்டில் தொலைக்காட்சியில் செய்தி வாசிக்கும் பெண் மீது மோகம் கொண்ட நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
பிரித்தானியாவை சேர்ந்த பிபிசி தொலைக்காட்சியில் Emily Maitlis(45) என்ற பெண் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இந்நிலையில், எமிலிக்கும் அவரது தாயாருக்கும் அடிக்கடி கடிதங்கள் வந்துள்ளன.
அதில், ‘எமிலியிடம் பழக வேண்டும் எனவும், அவர் மீது தீராத காதல் இருப்பதாகவும்’ அந்த கடிதத்தில் Edward Vines(46)...
வெளிநாட்டிற்கு பணிபுரிய செல்பவர்களுக்கான குறைந்த பட்ச ஊதியமாக 300 அமெரிக்க டொலர்களை வழங்க கட்டாயப்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது.
எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் முதல் இதனை நடைமுறைப்படுத்தவுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பணிப்பாளர் சட்டத்தரணி உபுல் தேஷப்பிரிய குறிப்பிட்டார்.
ஐ.எஸ் தீவிரவாதிகள் எப்படி குண்டு தயாரிக்கிறார்கள்? தப்பிய 8 வயது சிறுமியின் அதிர்ச்சி தகவல்!
Thinappuyal -
ஐஎஸ் தீவிரவாதிகள் எப்படி குண்டு தயாரிக்கிறார்கள் என்று அவர்களிடமிருந்து தப்பிய 8 வயது சிறுமி அதிர்ச்சி தரக்கூடிய தகவல்களை கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யாசிதி பிரதேசத்தை ஐ.எஸ் தீவிரவாதிகள் கைப்பற்றிய பின்பு, அம்மக்கள் பல வித இன்னல்கள் அனுபவித்து வந்துள்ளனர்.
அவர்களில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள் வெட்டிக் கொல்லப்பட்டு, பெண்கள் கடத்தப்பட்டனர். கடத்தப்பட்ட பெண்கள் இக்குழுவினரால் பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டு அடிமைகளாக நடத்தப்பட்டனர்.
யாசிதி குழந்தைகள் சிலர் அடிப்படை வாத மத பள்ளிகளுக்கு...
உலக சுகாதார அமைப்பின் தெற்கு மற்றும் கிழக்கு ஆசிய மண்டலத்தின் 69வது ஆண்டு அமர்விற்காக உடற்பயிற்சி வேலைத்திட்டம் இன்று காலை காலி முகத்திடலில் நடைபெற்றது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமைத்துவத்தில் நடைபெற்ற நிகழ்வில் பெருமளவானோர் பங்கேற்றனர்.
சுகாதாரம், ஊட்டச்சத்து மற்றும் சுதேச மருத்துவத்துறை அமைச்சர் ராஜித சேனாரத்ன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மஹிபால, உலக சுகாதார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் மார்கரெட் சான் (Dr.Margaret Chan) ,...
முல்லைத்தீவில் புதிதாக வாங்கிய அக்காவின் மோட்டார்சைக்கிளை செலுத்திப்பார்த்த 19 வயது வாலிபன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
Thinappuyal -
முல்லைத்தீவில் புதிதாக வாங்கிய மோட்டார்சைக்கிளை செலுத்திப்பார்த்த 19 வயது வாலிபன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துணுக்காய்- கொத்தம்பியா குளத்தில் நேற்று இந்த சம்பவம் நடந்தது. தேறாங்கண்டலை சேர்ந்த ஜெகநாதன் கோபிராஜ் (19) என்ற வாலிபனே உயிரிழந்துள்ளார்.
மூத்த சகோதரியால் புதிதாக வாங்கப்பட்ட மோட்டார்சைக்கிளை செலுத்திப்பார்த்த போது வேகப்பட்டுப்பாட்டை இழந்து விபத்தில் சிக்கியுள்ளார். வீதியினருகில் நடப்பட்டிருந்த இரண்டு மின்கம்பங்களில் மோதி, தலையில் படுகாயமடைந்து உயிரிழந்துள்ளார்.
மலேசியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் ஒருவர் தாக்கப்பட்டுள்ளார், அங்கு தாக்குதலில் ஈடுபட்டது விடுதலை புலிகளின் ஆதரவாளர்களும் மறைந்துள்ள விடுதலை புலிகளுமே. அதே சமயம் மலேசியாவில் மஹிந்தவிற்கு எதிராக பாரிய ஆர்ப்பாட்டம் ஒன்றும் மேற்கொள்ளப்பட்டது என நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கூறினார்.
மேலும் மலேசியாவில் ஏன் மஹிந்த ராஜபக்ஷவிற்கு போதிய அளவு பாதுகாப்பு வழங்குவதற்கு இலங்கை அரசு செயற்படவில்லை, தற்போது தாக்குதல் தொடர்பில் எவ்வகையான தீர்மானங்களை அரசு கொண்டுள்ளது என நாடாளுமன்ற...
மலேசியாவிற்கு பயணம் மேற்கொண்டிருந்த நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்தவுக்கு அங்குள்ள தமிழர்கள் எதிர்ப்பு தெரிவிப்பது சாதாரணமான ஒரு சம்பவம் என்று அமைச்சர் சரத்பொன்சேகா தெரிவித்தார்.
கொழும்பில் ஊடகவியலாளர்களுக்கு இடையில் கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறினார்.
இதன்போது கருத்து தெரிவித்த அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஸ மேற்கொள்ளும் வெளிநாட்டுப் பயணங்களின்போது, அவருக்கு ஏற்படும் எதிர்ப்புகளுக்கான காரணம், நாட்டின் நல்லிணக்கத்திற்கு அவர் தடையாக இருப்பதே எனவும் சரத் பொன்சேகா குறிப்பிட்டார்.
கடந்த காலங்களில் மஹிந்த...
களுத்துறை மாவட்டம் அட்டுலுகமவைச் சேர்ந்த வர்த்தகர் மொஹமட் நஷ்ரீனைத் (35) தேடி ஐந்து விசேட பொலிஸ் குழுக்கள் அமைத்து விசாரணைகள் மற்றும் தேடுதல் இடம்பெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
திருகோணமலையிலுள்ள வங்கி ஒன்றில் இடம்பெற்ற தங்க ஏலம் ஒன்றிற்காக சென்றிருந்த குறித்த வர்த்தகருக்கு என்ன நடந்தது என்பது பற்றி தெரியாத நிலையில் அவரது குடும்பத்தினர் மேற்கொண்ட முறைப்பாட்டை அடுத்து பொலிஸார் தீவிர தேடலில் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை கந்தளாயிலுள்ள...
மாங்குளம், கற்குவாரி கிராமத்திலிருந்து, ஓகஸ்ட் மாதம் 27ஆம் திகதி காணாமற்போன 2 சிறுவர்களையும் நுவரெலியாவில் வைத்து கடந்த 3ஆம் திகதி மீட்டதாக, மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.
மாங்குளம் மகா வித்தியாலயத்தில், தரம் 8இல் கல்வி பயிலும் சிவானந்தன் இராமகிருஷ்ணன் (வயது 16), கிருஷ்ணமூர்த்தி கிருஷ்ணகுமார் (வயது 15) ஆகிய இரு சிறுவர்களும், மாங்குளத்திலுள்ள உறவினர் வீட்டுக்குச் சென்றுவருவதாகக்கூறிச் சென்றுள்ளனர்.
அவ்வாறு சென்றவர்கள் வீடு திரும்பாததையடுத்து, அவர்களைத் தேடிய பெற்றோர் அதன் பின்னர்...
மாராவில கடற்கரை பிரதேசத்தில் அமைந்துள்ள சுற்றுலா ஹோட்டலில் தங்கியிருந்த 80 வயதுடைய ஜேர்மன் நாட்டு வயோதிபப் பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்திய குற்றச்சாட்டு தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கில் இரண்டாவது பிரதிவாதி குற்றத்தை ஒப்புக் கொண்டதால் அந்நபருக்கு சிலாபம் மேல் நீதிமன்ற நீதிபதி ரவீந்திர அமல் ரணராஜாவினால் 7500 ரூபா அபராதத்துடன் கடும் வேலையுடன் கூடிய 13 வருட சிறைத் தண்டனையும் வழங்கி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.
லிஹிரியாகம கிழக்கு கஹடவில பிரதேசத்தைச் சேர்ந்த...