இனப்பிரச்சினைக்கான தீர்வை முன்னரே கண்டிருந்தால் மனிதப் பேரழிவு நடந்திருக்காது என இந்த நாட்டின் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார். மனிதநேயமுள்ள எவரும் ஜனாதிபதி மைத்திரி கூறிய கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வர். மனிதப் பேரழிவு தமிழ் மக்களுக்கு ஏற்படலாம் என்று சிங்கள மக்களோ அல்லது சிங்கள மக்களுக்கு ஏற்படலாம் என தமிழ் மக்களோ நினைப்பார்களாயின் அது தர்மமன்று. மனித அழிவு எங்கு...
இந்தியாவில் விடுதலைப் புலிகளுடன் இணைந்தவர் என்ற சந்தேகத்தில் கைதான சுதன் சுப்பையா நாடுகடத்தப்படவுள்ளார். சிறிலங்காவின் அதிகாரிகள் விடுத்த கோரிக்கை அடிப்படையில் இந்த நாடுகடத்தல் இடம்பெறவுள்ளது. கடந்த மாதம் பூனே விமான நிலையத்தின் ஊடாக ஜேர்மனி செல்ல முற்பட்ட வேளையில் அவர் கைதானார். அவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் 2005ம் ஆண்டுக் காலப்பகுதியில் செயற்பட்டவர் என்று கூறப்படுவதுடன் புலிகள் இயக்கத்தின் முக்கியஸ்தர் எனவும் இந்திய புலனாய்வு அமைப்பு சுட்டிக் காட்டியுள்ளது….
  ஒடிசாவில் இறந்த மனைவியின் உடலை 12 கி.மீ அவரது கணவர் தோளில் சுமந்து கொண்டு நடந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவலத்தின் தொடர்கதையாக மற்றொரு அவலம் போபாலில் நிகழ்ந்துள்ளது. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம் போபால் பகுதியை சேர்ந்தவர் ஜெகதீஷ் பில்(65). நீண்ட நாட்களாக நோய்வாய்பட்டு கிடந்த இவருடைய மனைவி நஜோ பாய் திடீரென காலமானார். மனைவியின் உடலை தகனம் செய்வதற்கு சுடுகாட்டில் உள்ள ஊழியர்கள் 2,500...
முழங்காவில் மாவீரர் துயிலுமில்லத்தில் நிலைகொண்டிருந்த படையினர் வெளியேறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. நீண்ட யுத்த போராட்டத்தில் பல உயிர்களை அர்ப்பணித்துள்ள தமிழ் மக்களுக்கு முழங்காவில் துயிலுமில்லம் விடுவிக்கின்ற விடயம் மனதில் ஒரு அமைதியை கொடுத்துள்ளது. தொடர்ந்தும் தமிழ் மக்களின் உணர்வுகளை புரிந்துகொண்டு அரசாங்கம் இதய சுத்தியுடன் எடுக்கும் முயற்சிகள் நிரந்தரமான அமைதியையும் உரிமையையும் பெறுதலை கொண்டுவரும் என பொதுமக்கள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்னும் 6 மாதத்திற்குள் இறந்து விடுவார் என பிரபல ஜோதிடர் ஒருவர் ஆருடம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி திடீர் விபத்திலோ அல்லது கொடூர நோயின் தாக்கத்திலோ இறந்து விடுவார் என ஜோதிடர் விஜித் ரோஹன விஜயமுனி தெரிவித்துள்ளார். இவரின் இறப்பை அடுத்து முன்னாள் பாதுகாப்பு செயளாலர் கோத்தபாயவே இலங்கையின் அடுத்த ஜனாதிபதி என்றும் இவர் தெரிவித்துள்ளார். அதேபோல் நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ஷ நாட்டின் பிரதமராவதை எவராலும் தடுக்க முடியாதென்றும்...
கல்முனை மாநகர் நற்பிட்டிமுனை அருள்மிகு ஸ்ரீ கணேசர் தேவஸ்தானம் வருடாந்த மகோற்சவத்தின் எட்டாம் நாள் உற்சவத்தின் விசேட நிகழ்வாக திருவேட்டை நேற்றைய தினம் இடம்பெற்றது. குறித்த திருவேட்டைத் திருவிழாவில் சர்வதேச இந்துமத குருபீடாதிபதி சபரிமலைக் குருமுதல்வர் சிவாகம கலாநிதி ஆன்மீக அருள்ஜோதி ஸ்ரீ ஐயப்பதாஸ சாம்பசிவ சிவாச்சார்யார் கலந்துகொண்டு நிகழ்வை அலங்கரித்ததுடன் மிகவும் சிறப்பான முறையில் நடாத்தினார். ஆலயத்தில் பூசைகள் இடம்பெற்றதும் சுவாமி வெளி வீதி வந்ததும் திருவேட்டையாடினர். திருவேட்டையின் போது...
எதிர்வரும் 9ம், 10ம், 11ம் திகதிகளில் சூரிச் நகரில் சிறிலங்கா கலாச்சார விருந்துபசார நிகழ்வு நடைபெறவிருக்கின்றது. அந்நிகழ்வில் பங்குபற்ற வேண்டாம் என சுவிஸ் தமிழர் ஒருங்கிணைப்புக்குழு அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில், ஓர் இனத்தின் விடுதலை என்பது வெறுமனே நிலப்பரப்பு மட்டுமல்லாது மொழி, கலை, கலாச்சாரம் என்பனவும் இணைந்ததே. தாயகத்தில் எமது நிலப்பரப்புக்களை ஆக்கிரமித்து மொழி, கலை, கலாச்சார,பண்பாட்டு விழுமியங்களை இலங்கை அரசு சிதைத்து தமிழர்களை அவலவாழ்வுக்கு தள்ளிவிடுகின்றனர் என...
தேசிய ஆசிரியர் கல்விக் கல்லூரிகளுக்கு புதிய மாணவர்களை சேர்த்துக் கொள்வதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்வரும் 9ம் திகதி வெள்ளிக்கிழமை வெளியிடப்படும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் இதற்கு உள்வாங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு வெளியிட்டுள்ள விசேட ஊடக அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. இதன்படி, இம்முறை துறை சார்ந்த 27 பாட நெறிகளுக்காக 4 ஆயிரம் பேர் மாவட்ட மற்றும் பிரதேச...
இறுதிக்கட்டப் போரில் போர்க்குற்றம் சாட்டப்பட்டிருந்த படையதிகாரி, மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, இலங்கை இராணுவத்தில் இருந்து நேற்றுடன் ஓய்வுபெற்றார். இறுதிக்கட்டப் போரில், மேஜர் ஜெனரல் குணரட்ன 53வது டிவிசனின் கட்டளை அதிகாரியாக பணியாற்றியிருந்தார். இந்தப் படைப்பிரிவினால் இழைக்கப்பட்ட போர்க்குற்றங்களுக்கு இவரே பொறுப்பானவர் என்று குற்றச்சாட்டுக்கு உள்ளாகியிருந்தார். கஜபா படைப்பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் கமால் குணரட்ன, 2001ம் ஆண்டுக்கும், 2010ம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், 523, 551 வது பிரிகேட்களினதும், வான்வழி தாக்குதல்...
இராணுவம் குற்றமிழைத்திருந்தால் அதன் உண்மைத்தன்மை தொடர்பில் தெரிந்து கொள்ள முயற்சிப்பதில் எவ்விதத் தவறும் கிடையாது எனத் தெரிவித்துள்ள வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்குள் அடிப்படைவாதிகளை ஊடுருவச் செய்தவர் மஹிந்த ராஜபக்சவே என்றும் சுட்டிகாட்டியுள்ளார் இது தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேலும் தெரிவித்திருப்பதாவது, உலகிலுள்ள இராணுவத்தினரில் இலங்கை இராணுவம் ஒழுக்க விழுமியங்களை கடைப்பிடிக்கும் இராணுவமாகும். இதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை. இதன் காரணமாக கடந்த காலங்களில்...