புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப்புலிகள் அமைப்பின் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாகக் கூறப்படும் விடயத்தை உறுதிப்படுத்துவதற்கான போதுமான சாட்சிகளைத் தேடுவதற்கு இதுவரை முடியாமல் போயுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
சகோதர மொழி ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
100 பேருக்கு அதிகமானோர் இந்த விஷ ஊசி விடயத்தில் இறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்ட போதும் இதுவரை 5 பேரைக் கூட கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
1. ‘பால் இன் லவ்’ (Fall in love) காதல் வயப்படுவதை, ஆங்கிலத்தில் ‘ஃபாலிங் இன் லவ்’ என்பார்கள், (அ) ‘காதலில் விழுகிறேன்’ என்று பொருள்படும். இது ஒரு அற்புதமான வெளிப்பாடு… ஏனெனில், காதலில் நீங்கள் உயர்வதில்லை, பறப்பதில்லை, நடப்பதில்லை, நிற்பதும் இல்லை.
காதலில் விழமட்டுமே முடியும்… காரணம், அப்போது ‘நான்’ என்ற உங்கள் அகங்காரத்தில் இருந்து ஏதோ ஒன்று உடைய வேண்டும். அதாவது, உங்களை விட வேறொருவர் உங்களுக்கு...
கிளிநொச்சி மாவட்டத்தில் போருக்குப் பின்னர் இராணுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருந்த 142 ஏக்கர் நிலப்பரப்பு, கடந்த வெள்ளிக்கிழமை 2ம் திகதி மக்களிடம் மீள கையளிக்கப்பட்டுள்ளதாக கிளி.மாவட்ட செயலாளர் சுந்தரம் அருமைநாயகம் கூறியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை கரைச்சி பூநகரி பச்சிலைப்பள்ளி ஆகிய பிரதேச செயலர் பிரிவுகளில் பொதுமக்களுக்கு சொந்தமான மற்றும் அரச காணிகள் படையினரின் பயன்பாட்டில் இருந்து வருகின்றது. அந்தக் காணிகள் தற்போது விடுவிக்கப்பட்டு வருகின்றன.
கடந்த வெள்ளிக்கிழமை ஒரு பகுதி காணிகள்...
மலேசியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர், கோலாலம்பூர் விமான நிலையத்தில் வைத்து தாக்கப்பட்டமை குறித்து மலேசிய அரசாங்கம் தமது கவலையை வெளியிட்டுள்ளது
கடந்த 4ஆம் திகதியன்று உயர்ஸ்தானிகர் அன்சார் தாக்குதலுக்கு உள்ளானார். இதன்போது அவர் சிறுகாயங்களுக்கு உள்ளானார்.
இந்தநிலையில் குறித்த சம்பவம் தொடர்பில் மலேசிய அரசாங்கம் கவலை கொள்வதாக அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் இப்ராஹிம் அன்சார் தெரிவித்துள்ளார்.
அத்துடன் குற்றவாளிகள் விரைவில் நீதிக்கு முன் நிறுத்தப்படுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாமல்...
இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் ஓகஸ்ட் மாதம் வரை ருஹுனு யால தேசியபூங்காவின் வருமானம் மாத்திரம் 6000 இலட்சங்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வருடத்தில் சுமார் 5 இலட்சத்திற்கு அதிகமான உள்நாட்டு,வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் யால பூங்காவை பார்வையிட வருவதாக வனஜீவராசிகள் பிரதி அமைச்சர் சுமேதா ஜயசேன தெரிவித்துள்ளார்.
கடந்த மாதத்தின் ஒரு நாளில் மாத்திரம் இதன் வருமானம் 45 இலட்சமாக காணப்பட்டதாகவும்,ஏனைய நாட்கள் வழமைப் போலவே 25 இலட்ச வருமானங்களை...
மட்டக்களப்பு திருப்பழுகாமம் மாவேற்குடா பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த தேர்த்திருவிழா சிறப்பாக இடம்பெற்றது.
இன்று காலை விசேட பூஜைகள் நடைபெற்று சுவாமி வீதியுலா வருகைதந்து அருள்பாலித்தார்.
இதனை காண ஆயிரக்கணக்கான அடியார்கள் புடை சூழ காத்திருந்தனர்.
உலகம் முழுவதிலும் தடை செய்யப்பட்ட உடற் பயிற்சி முறைகள் இலங்கைப் பாடசாலைகளில் பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
விளையாட்டு விஞ்ஞானம் தொடர்பிலான நிபுணத்துவ மருத்துவர் அசாங்க விஜேரட்ன இதனைத் தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடுகையில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்,
அமெரிக்க விளையாட்டு விஞ்ஞான கல்லூரி, பிரிட்டன் விளையாட்டு விஞ்ஞான கல்லூரி மற்றும் இராணுவ உடற்பயிற்சி முறையிலிருந்து நீக்கப்பட வேண்டுமென 108 உடற்பயிற்சி வகைகள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அபிவிருத்தி அடைந்த நாடுகளில் இந்த உடற்...
மலேசியாவில் இடம்பெற்ற தாக்குதல் சம்பவத்தின் பின்னணியில் முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் எனப்படும் கருணா மற்றும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் ஆகியோர் செயற்பட்டுள்ளனரா என்பது பற்றிய சந்தேகம் எழுந்துள்ளது என டிஜிட்டல் உட்கட்டுமான வசதிகள் அமைச்சர் ஹரின் பெர்னான்டோ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.அவர் மேலும் கூறுகையில்,
தமிழ் புலம்பெயர் அமைப்பு எனக் கூறிக்கொண்ட சில...
இலங்கை அரசியலின் அண்மை கால மாற்றங்களினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும் கோபமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் தன் கட்சி சார்ந்த உறுப்பினர்களின் செயற்பாடுகள் மஹிந்த ராஜபக்சவுக்கு கடும் மன அழுத்தங்களை கொடுத்துள்ளதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65வது ஆண்டு நிறைவு அண்மையில் குருநாகலில் வெகு சிறப்பாகவும், வெற்றிகரமாகவும் இடம்பெற்று முடிந்தது.
மாநாடு மிகவும் வெற்றிகரமாக ஏற்பாடு செய்யப்பட்டமை மற்றும் மாநாட்டில் அதிகளவான மக்கள் கலந்துகொண்டமை தொடர்பில் மஹிந்த...
தமது சித்தியினால் சித்திரவதைக்குட்படுத்தப்பட்ட ஆண் குழந்தையொருவர் மஸ்கெலியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த குழந்தையின் இரு கரங்கள் மற்றும் அவரின் முகத்தில் சுடு நீர் ஊற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இதன் காரணமாக அவரின் இரு கரங்கள் மற்றும் முகத்தில் தீக்காயம் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தித் தொடர்பாளர் குறிப்பிட்டிருந்தார்.
மஸ்கெலியா பிரதேசத்தில் தோட்டமொன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றுள்ள நிலையில் , வலி தாங்க முடியாமல் குழந்தை கதறியுள்ளதை தொடர்ந்து பிரதேசவாசிகள்...