முல்லைத்தீவு மாவட்டத்தில் மொத்தமுள்ள 42 ஆயிரத்து 178 குடும்பங்களில் 6 ஆயிரத்து 260 குடும்பங்கள் பெண் தலைமைத்துவ குடும்பங்கள் என மாவட்ட செயலக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
பெண் தலைமைத்துவ குடும்பங்களில் ஆயிரத்து 830 குடும்பங்கள் நேரடியாக போரால் குடும்பத்தலைவர்களை இழந்த குடும்பங்களாக உள்ளனர்.
கரைதுரைபற்றுப்பிரதேச செயலாளர் பிரிவில் ஆயிரத்து 677 பெண் தலைமை தாங்கும் குடும்பங்கள் உள்ளன. அவற்றில் 441 குடும்பங்கள் நேரடியாக போரால் குடும்பத்தலைவரை இழந்த குடும்பங்களாகும்.
புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர்...
நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூன்று மாதங்களில் மூடப்படும் -ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன
Thinappuyal -
உள்ளக இடப்பெயர்வுக்குள்ளான மக்கள் வாழ்ந்து வரும் நலன்புரி நிலையங்கள் அனைத்தும் மூன்று மாதங்களில் மூடப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்றுவரும் ஊடக பிரதானிகளுடனான சந்திப்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை மக்கள் காணிகளை இனங்கண்டு அடையாளப்படுத்தியுள்ளதாகவும், ஜனாதிபதி கூறியுள்ளார்.
அதுமாத்திரமன்றி வடக்கு மாகாண மக்கள் தமது சொந்த காணிகளையே கேட்கின்றார்கள் எனவும் மாறாக இராணுவம் வசமுள்ள காணிகளை அல்ல எனவும் ஜனாதிபதி மேலும்...
ஈழ புகலிட கோரிக்கையாளரின் நாடு கடத்தலுக்கு எதிர்ப்பு தெரிவித்து சிட்னியில் ஆர்ப்பாட்டம்
Thinappuyal -
ஈழ புகலிட கோரிக்கையாளர் ஒருவரை நாடு கடத்தக்கூடாது என வலியுறுத்தி சிட்னி விலவூட் தடுப்பு முகாமில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
குறித்த நபரின் புகலிட கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் கடந்த 4 ஆண்டுகளாக விலவூட் தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
திருகோணமலையை சேர்ந்த அந்த நபரின் இரு சகோதரர்கள் ஸ்ரீலங்காவில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தத்தில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்காவிற்கு திருப்பி அனுப்பப்பட்டால் உயிருக்கு ஆபத்து உள்ளதாக தெரிவித்து நாடு கடத்தப்படக்கூடாது என வலியுறுத்தி...
பொலிஸ் அதிகாரிகளின் பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.
Thinappuyal -
பொலிஸ் அதிகாரிகள் முகங்கொடுத்துள்ள பல்வேறு பிரச்சினைகளுக்கு உடனடித் தீர்வுகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கவனம் செலுத்தியுள்ளார்.
அந்தவகையில் பொலிஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு தொடர்பாக ஒரு முறையான முறைமையைப் பின்பற்றவும் மேல்மட்டம் முதல் கீழ்மட்டம் வரையிலான சகல மட்டங்களிலும் நிலவும் வெற்றிடங்களை நிரப்புவதற்கு உடனடி நிகழ்ச்சித் திட்டமொன்றை ஆரம்பிக்குமாறும் ஜனாதிபதி பொலிஸ் ஆணைக்குழுவுக்கும் பொலிஸ் மா அதிபருக்கும் ஆலோசனை வழங்கியுள்ளார்.
பொலிஸ் அதிகாரிகள் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகள் அவ்வப்போது ஜனாதிபதியின் கவனத்திற்குக்...
வர்த்தகர் முஹம்மட் சகீப் சுலைமானின் காதுப்பகுதியில் இரும்புக் கம்பியால் தாக்கி, கைகளையும் கால்களையும் கட்டிவிட்டு, வாயில் பிளாஸ்டர் ஒன்றையும் ஒட்டியுள்ள கடத்தல்காரர்கள், அவரை மாவனெல்ல பகுதிக்கு அழைத்துச் சென்று, கப்பம் கேட்பதற்காக சொத்து விவரங்களை அறிந்துகொள்ள, வாயிலிருந்த பிளாஸ்டரைக் கழற்றிய போது, அவருடைய நாக்கு தொங்கியுள்ளது.அதனையடுத்தே அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என்ற விடயத்தை, கடத்தல்காரர்கள் அறிந்துகொண்டுள்ளனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு, பம்பலப்பிட்டியைச் சேர்ந்த கோடீஸ்வர வர்த்தகரான சுலைமான், பம்பலப்பிட்டி –...
புதுக்கோட்டை அருகே விபத்தில் தான் உயிரிழந்துவிட்டதாகப் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள்
Thinappuyal -
புதுக்கோட்டை அருகே விபத்தில் தான் உயிரிழந்துவிட்டதாகப் சமூக வலைதளங்களில் பொய்யான தகவல்கள் பரப்பப்படுவதாக பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் தெரிவித்துள்ளார். பிரபல பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் லியோனி குறித்து வதந்தி ஒன்று இணையங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் இவர் சாலை விபத்து ஒன்றில் உயிரிழந்தவிட்டதாக ஒரு செய்தி உலா வந்தது.
இது லியோனி...
சுவாதி கொலை வழக்கில் சிலரை தமிழக போலீஸார் திட்டமிட்டு தப்பிக்க வைப்பதாகவும் தன்னிடம் ஆதாரங்கள் இருப்பதாகவும் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் எழுதி வந்தவர் திலீபன் மகேந்திரன்.
கடந்த சில மாதங்களுக்கு முன், தேசியக் கொடியை எரித்த சர்ச்சையில் சிக்கிய திலீபன், போலீஸாரால் கைது செய்யப்பட்டு சிறையிலிருந்து ஜாமீனில் வெளியே வந்தார்.
இந்த நிலையில், சென்னை துறைமுகப் பொறுப்புக் கழக இயக்குனரும், பி.ஜே.பி-யின் மாநிலத் துணைத் தலைவருமான கருப்பு முருகானந்தம் மீது பேஸ்புக்...
முன்னாள் போராளிகளின் மறு வாழ்வு பற்றி அவர்களது கருத்துக்கள் கவனிக்கப்படுமா? அவ்வப்போது காணும் பிரச்சினைக்கு தீர்வு தேடும் முறைமை சரியானதா?
நல்லிணக்க பொறிமுறை தொடர்பான முன்னெடுப்புக்கள் பலவும் பேசப்படுகின்றன, முன்னெடுக்கப்படுகின்றன. அவற்றில் காணாமல் போனவர்கள் தொடர்பாக சில நகர்வுகளை அரசு சட்ட ரீதியான ஆயத்தங்களையும் செய்து வருகின்றன.
ஐ.நாவின் மனித உரிமைக்கூட்டங்களில் ஏற்றுக் கொள்ளப்பட்ட அவற்றின் சிபாரிசிற்கு இணங்க நல்லிணங்க பொறிமுறைக்காக அரசு ஏற்படுத்தவுள்ள கட்டமைப்புக்கள் பற்றிய கருத்தறியும் செயலணி நியமிக்கப்பட்டு...
கினிகத்தனையில் தங்க நகை பட்டரையில் 40 இலட்சம் ரூபாய் பெறுமதியான தங்கத்தை கொள்ளையடித்துக்கொண்டு தப்பி சென்ற மூவரை பொலிஸார் நேற்று (01) கைது செய்துள்ளனர்.
குறித்த சந்தேக நபர்கள் இராணுவத்திலிருந்து தப்பி வந்த மூவர் என தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர்.
மேலும், சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,
கினிகத்தனை கண்டி வீதியில் பகதுலுவ பகுதியில் உள்ள தங்க நகை விற்பனை நிலையத்துடன் நகை பட்டறையாக இயங்கி வந்த நகையகத்திற்கு நேற்று (01) மாலை...
சீனா நோக்கி பயணித்த தென்னாபிரிக்க விமானம் ஒன்று அவசரமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கியுள்ளது.
தென்னாபிரிக்க ஜனாதிபதி ஜாகொப் சூமா பயணித்த விசேட விமானமே இவ்வாறு தரையிறங்கியுள்ளது.
குறித்த விமானம் இன்று அதிகாலை தரையிறங்கியுள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தென்னாபிரிக்க ஜனாதிபதி சீனா நோக்கி பயணித்த நிலையில், விமானத்திற்கு எரிபொருள் பெற்றுக் கொள்வதற்காக இவ்வாறு கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசரமாக விமானம் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
விமானத்திற்கு எரிபொருள் பெற்றுக் கொள்ளும் போது...