ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கை வந்துள்ளார். இந்நிலையில் அவர் நேற்றையதினம் காலிக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார். இளைஞர்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான வேலைத்திட்டத்தில் கலந்து கொள்வதற்காகவே அவர் காலிக்கு சென்றிருந்தார். இந்த பயணத்தின் போது செயலாளர் தனது மனைவியுடன் காலியின் அழகு தெரியும் வரையில் செல்பி புகைப்படங்களை எடுத்துள்ளார்.
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சுலைமானின் படுகொலை சம்பவம் தொடர்பில் மேலும் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த ஐவரையும் இன்று பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் அதிரடியாக கைது செய்துள்ளனர். மேலும் இந்தக் கொலைக்கு பயன்படுத்தப்பட்ட வான் ஒன்றும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். இந்த கொலை தொடர்பில் நேற்று கிரேன்ட்பாஸ் மற்றும் ஆட்டுப்பட்டித் தெருவைச் சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டதுடன், இவர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் பலர் கைது செய்யப்படலாம் என பொலிஸார் தெரிவித்திருந்தனர். இதன்படி இன்று மேலும்...
குருணாகல் - தம்புள்ளை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் மூவர் பலியானதுடன் ஏழு பேர் காயமடைந்துள்ளனர். கலேவெல என்ற பகுதில் இன்று காலை இடம்பெற்ற விபத்தின் காரணமாக உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளது. பஸ் ஒன்றும் வேன் ஒன்றும் மோதியதாலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கொழும்பு நகருக்குள் குப்பைகளை ஒழுங்குமுறையின்றி வீசி எறிபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி இதனை தெரிவித்துள்ளார். குறிப்பாக வாகனங்களில் செல்லும்போது வீதிகளில் குப்பைகளை வீசுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படுமென அவர் வலியுறுத்தியுள்ளார். குப்பைகளை ஒழுங்குமுறையின்றி வீசுவதால் தொற்று நோய்கள் பரவக்கூடிய சாத்தியம் காணப்படுவதால் இந்த நடவடிக்கை எடுக்கவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
  இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இன்றைய தினம் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்யவுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகள் வடக்கு ஆளுநர் வடக்கு முதல்வர் ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். கொழும்பிலிருந்து விமானம் மூலம் பலாலி நோக்கி செல்லும் ஐ.நா. செயலாளர் பான் கீ மூன் 11.30 மணியளவில் யாழ்ப்பாணத்தை சென்றடையவுள்ளார். அதனைத்தொடர்ந்து நண்பகல் 12 மணிக்கு யாழ்.பொது நூலகத்தில் பிரதான எதிர்க்கட்சியான...
தற்போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாடு குருநாகலில் நடைபெறவுள்ளது. இந்த சந்தர்ப்பத்தில் முன்னாள் ஜனாதிபதியும் சுதந்திரக் கட்சியின் முன்னாள் தலைவருமான மஹிந்த ராஜபக்ஷ மலேஷியாவிற்கு சென்று தலைமறைவாகியுள்ளார். இது மிகவும் வெட்கத்துக்குரிய நடவடிக்கையாகும். மஹிந்த ராஜபக்ஷ இராஜதந்திர விஜயத்தை மேற்கொள்ளவில்லை. கட்சி மாநாட்டை புறந்தள்ளிவிட்டு ஏன் மலேஷியா செல்ல வேண்டும். எனவே சுதந்திரக் கட்சியினர் மஹிந்த ராஜபக்ஷவின் குணங்களை புரிந்து கொள்ள வேண்டும். அத்துடன் மைத்திரிபால சிறிசேன...
திருச்சி அருகே காதலித்து திருமணம் செய்து கொண்டதால் ஆணவக் கொலை செய்ய ஊர் கூட்டத்தில் முடிவு செய்து கொலை செய்ய போவதாக மிரட்டல் விட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் பூலாங்குலத்துப்பட்டி செட்டியூரணிப்பட்டி கிழக்கு தெருவை சேர்ந்த முருகன் என்பவரது மகள் உமா(23). இவர் நேற்று திருச்சி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் குறிப்பிட்டிருந்ததாவது, நான் சத்திரம் பகுதியில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில்...
சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலையில் வழி தெரியாமல் சிக்கித் தவித்த ஹங்கேரி சுற்றுலா பயணியை, பூனை ஒன்று வழிகாட்டி பாதுகாப்பாக விடுதிக்கு கொண்டு வந்து சேர்த்துள்ள சம்பவம் பிரமிப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் குறித்து ஹங்கேரி சுற்றுலா பயணி கூறுகையில், Gimmelwald கிராமத்திற்கு அருகே உள்ள மலையில் பயணித்தேன். பின்னர், அங்கிருந்து கீழே இறங்கும் வழியை மறந்துவிட்டேன். விடுதிக்கு செல்லும் வழியை வரைப்படத்தில் சரிபார்த்துக் கொண்டிருந்தேன். மலையில் இருந்து கீழே இறங்கும் அதிகாரப்பூர்வ வழி...
முட்களுடன் கூடிய ரோஜா செடி மிகுந்த அழகுடன் காணப்படும். மணம் நிறைந்த ரோஜா பூக்களை பெண்கள் விரும்பி கூந்தலில் வைத்துக்கொள்வார்கள். மலர்களும் மருந்தாகும் என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக ரோஜா காணப்படுகிறது. அந்த மருத்துவ குணங்களை பற்றி இப்போது நோக்குவோம்.
பீகாரின் Jehanabad பகுதியில் 10 வயது சிறுவன் தன் உயிரை பணயம் வைத்து நீரில் மூழ்கிய நான்கு பள்ளி மாணவிகளை காப்பாற்றியுள்ளான். கோபால்பூர் கிராமத்தை சேர்ந்த மாணவிகள் பள்ளியில் இருந்து வீடு திரும்பும் வழியில் ஆற்றைக் கடந்தபோது எதிர்பாராத விதமாக தடுமாறி ஆற்றில் விழுந்துள்ளனர். ஆற்றில் நீரின் ஓட்டம் வேகமாக இருந்ததால், அவர்கள் உயிருக்கு போராடியுள்ளனர். அசம்பாவிதத்தை கண்ட அங்கிருந்த 10 வயது சிறுவன் தன் உயிரை பற்றி கவலைப்படாமல் ஆற்றில்...