அதர்வா படமொன்றில் 4 முன்னணி நாயகிகள் நடிப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளது. அவர்கள் யார்? என்பதை கீழே பார்ப்போம்… கோலிவுட்டில் வளர்ந்து வரும் இளம் கதாநாயகர்களில் அதர்வாவும் ஒருவர். இவர் சமீபத்தில் நடித்த ‘சண்டிவீரன்’, ‘ஈட்டி’, ‘கணிதன்’ ஆகிய படங்கள் தயாரிப்பாளருக்கு நஷ்டத்தை ஏற்படுத்தாத வகையில் அமைந்தது. இதனால் இனிமேல், நல்ல கதையம்சம் உள்ள படங்களில் மட்டுமே நடிப்பது என தேர்வு செய்து நடித்து வருகிறார். அந்த வரிசையில் தற்போது ‘ஜெமினி கணேசனும்...
பிரித்தானியாவின் கம்பர் சான்ட் கடலில் கடந்த 24ஆம் திகதி மூழ்கி உயிரிழந்த ஐந்து ஈழத்தமிழ் இளைஞர்களின் இறுதிக்கிரியைகள் லண்டனில் நடைபெறவுள்ளது. எதிர்வரும் நான்காம் திகதி, காலை 6 மணி முதல் பத்துமணி வரை Winn's Common Park, King's High Way, Plumstead Common, London, SE18 2LN என்னும் இடத்தில் இறுதி நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. கடலில் மூழ்கி உயிரிழந்த இளைஞர்களின் இறுதிக் கிரியை நிகழ்வானது, கடல் பாதுகாப்பின் முக்கியத்துவத்தை...
ஆயில் புல்லிங் எனப்படும் எண்ணெய் மருத்துவம் இப்பொழுது அநேக இடங்களில் பிரபலமடைந்து வருகிறது. எண்ணெயை வாயில் விட்டு சாதாரணமாக கொப்பளிப்பதுதானே என்று அலட்சியமாக இல்லாமல் தொடர்ந்து ஆயில் புல்லிங் எடுத்துக்கொள்பவர்களுக்கு அனைத்து நோய்களும் தீரும் என்பது நிரூபிக்கப்பட்டுள்ளது. இன்றைக்கு பிரபலமாகிக் கொண்டு வரும் ஆயில்புல்லிங்கை நூற்றாண்டுகளுக்கு முன்பே நம் முன்னோர்கள் கண்டுபிடித்து பின்பற்றியுள்ளனர். இது அனைத்து நோய்களுக்கும் பாதுகாப்பான எளிய மருத்துவ முறையாக இருந்துள்ளது. பல்வகையான நுண்ணுயிரிகளுக்கும், கிருமிகளுக்கும் நமது...
உலகிலேயே காரமான நூடுல்ஸை சாப்பிட்ட ஒருவர் சில நிமிடம் செவிடாகி போனது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனை சேர்ந்த பென் சுமடிவீரியா(22) என்பவர் இந்தோனேஷியாவின் ஜகார்த்தாவில் உள்ள உணவகத்திற்கு சென்றுள்ளார். அங்கு மிக காரமான நூடுல்ஸை சாப்பிட்டுள்ளார், இது சிவப்பு மிளகாயை விட பல மடங்கு காரம் வாய்ந்ததாகும். சாப்பிட ஆரம்பித்த உடனேயே பென்னுக்கு வியர்க்க ஆரம்பித்து ஒரு வித மயக்க நிலையை அடைந்தார். இரண்டு நிமிடம் அவர் காது கேட்காமல் செவிடாகி...
  ஐக்கிய நாடுகள் அமைப்பினை எதிர்த்து சிங்கள தேசியவாத அமைப்புக்கள் போராட்டம் நடத்தியுள்ளன. யுத்தம் இடம்பெற்ற  காலத்தில் ஐக்கிய நாடுகள் அமைப்பின் நடவடிக்கைகளை விமர்சனம் செய்து இந்தப் போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் பொதுச் செயலாளர் பான் கீ மூன் இலங்கை விஜயம் செய்துள்ள நிலையில் இந்தப் போராட்டம் நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. தமிழீழ விடுதலைப் புலிகளினால் மேற்கொள்ளப்பட்ட குண்டுத் தாக்குதல்கள் தொடர்பிலான புகைப்படங்களை காண்பித்து போராட்டம் நடத்தப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் அமைப்ப தமிழீழ விடுதலைப்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரம் கண்களின் விழிவெண்படலத்தை அகற்றுவதற்கான சத்திர சிகிச்சை செயற் திட்டம் யாழ். போதனா வைத்தியசாலையில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நாளை மறுதினம் 3ம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிறந்த நாள் கொண்டாடப்படவுள்ளது. இதனை ஒட்டியதாக ஜனாதிபதி செயலகத்தின் சமூக தொண்டு நிகழ்ச்சி திட்டத்தின் கீழ் இந்த செயற் திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகின்றது. இதற்கமைய மேற்படி செயற் திட்டம் இன்று யாழ் போதனா வைத்தியசாலையில் இடம்பெற்றது. யாழ்...
திருகோணமலையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கான புதிய பேருந்துசேவையினை இலங்கை போக்குவரத்து சபை இன்று முதல் ஆரம்பிக்க உள்ளது. திருகோணமலை பேருந்து நிலையத்தில் இருந்து மாலை 4.00 மணிக்கு புல்மோட்டை முல்லைத்தீவு ஊடாக யாழ்ப்பாணத்திற்கு புதிய பேருந்து சேவை ஆரம்பித்துவைக்கப்படுகின்றது. மேலும் பயணிகளின் வேண்டுகோளின் அடிப்படையில் தினமும் நள்ளிரவு 12.00 மணிக்கு யாழ்ப்பாணத்தில் இருந்து திருகோணமலைக்கு வவுனியா ஊடாக மற்றொரு சேவையும் நடத்தப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது. இதுவரை காலமும் யாழ்ப்பாணத்தில் இருந்து மாலை 7.00 மணிக்கு...
கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் இடம்பெற்ற வெள்ளை வான் கடத்தல்கள் தொடர்பில் கடற்படைத் தளபதி நிலையில் இருந்து உடன் விசாரணைகளை ஆரம்பிக்குமாறும் அதில் குற்றம் புரிந்தவர்கள் தொடர்பில் வெளிப்படுத்தப்படும் தகவல்களுக்கு அமைய தராதரம் பாராது கைதுசெய்து உடன் மன்றில் ஆஜர்செய்யுமாறும் கொழும்பு மேலதிக நீதிவான் நிஸாந்த பீரிஸ் நேற்று குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு உத்தரவு பிறப்பித்தார். கொட்டாஞ்சேனையில் கடந்த 2008ம் ஆண்டு கடத்தப்பட்டு காணாமல் போகச்செய்யப்பட்டவடிவேல் லோகநாதன், இரத்னசாமி...
  அகதிகளுக்கான ஐக்கிய நாடுகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினுடைய வசதிப்படுத்தலுடனும், ஒருங்கிணைப்புடனும் 90 இலங்கை தமிழ் அகதிகள், இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதர உள்ளனர். சுயவிருப்பின் பேரில் 20 குடும்பங்களைச் சேர்ந்த 54பேர் திருச்சியிலிருந்தும், 15 குடும்பங்களைச் சேர்ந்த 36பேர் சென்னையிலிருந்து செப்டம்பர் மாதம் 13 ஆம் திகதியன்று இலங்கைக்கு வருகைதர உள்ளனர். இவர்களில் 45 ஆண்களும் 45 பெண்களும் உள்ளடங்குகின்றனர். இவர்கள் மன்னார், திருகோணமலை, கிளிநொச்சி, அம்பாறை, கொழும்பு, யாழ்ப்பாணம் மற்றும் வவுனியா ஆகிய...
நுவரெலியாவில் தனியார் வைத்தியசாலையில் ஒரு வைத்தியரின் பொறுப்பற்ற செயற்பாடு காரணமாக பரிதாபமாக பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார். இந்த பெண் தைரோட் நோயினால் பாதிக்கப்பட்ட நிலையில் வைத்தியரின் ஆலோசனைக்கு அமைய மருந்து உட்கொண்டதன் காரணமாக இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 34 வயதான புஷ்பா என்ற இரண்டு பிள்ளைகளின் தாயொருவரே இவ்வாறு தனியார் வைத்தியசாலைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்தினை உட்கொண்டதை அடுத்து அவருக்கு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்த நிலையில் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இவரின் உயிரிழப்பை அடுத்து...