கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 போரையும் எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலாபிட்டிய இன்று நோடீஸ் அனுப்பியுள்ளார்.
Thinappuyal -0
எவன் காட் மோசடி தொடர்பில் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 8 போரையும் எதிர்வரும் 30ஆம் திகதி நீதிமன்றில் ஆஜராகுமாறு கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலாபிட்டிய இன்று நோடீஸ் அனுப்பியுள்ளார்.
எவன் காட் நிறுவனத்துடன் இணைந்து முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ உட்பட எட்டுப்பேர் அரசுக்கு 1140 கோடி நட்டம் ஏற்படுயத்தியதாகத் தெரிவித்து நேற்று இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கொழும்பு பிரதம...
பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவின் சகோதரர் ஒருவரான சரத் வீரவன்ச பொலிஸ் நிதி மோசடி விசாரனைப் பிரிவினரால் (FCID) கைது செய்யப்பட்டுள்ளார்.
அரசுக்கு சொந்தமான வாகனங்களை முறைகேடாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
வாக்குமூலம் வழங்க அவர் பொலிஸ் நிதி மோசடி விசாரனைப் பிரிவுக்கு வருகை தந்த வேளை இவர் கைது செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திஸ்ஸமஹாராம – பிரபோதகம பிரதேசத்தில் தனது மார்பு பகுதியில் மறைத்து வைத்து, கேரள கஞ்சாவை விற்பனை செய்து வந்த பெண்ணொருவர் அண்மையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண் திஸ்ஸமஹாராம நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக வீரவில காவற்துறை மேலதிக விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
கிரிக்கெட் இல்லாத விளையாட்டு போட்டியை இந்திய ரசிகர்கள் அதிகம் பேர் பார்த்தது, ரியோ ஒலிம்பிக்கின் இறுதிப்போட்டியில் விளையாடிய சிந்துவின் ஆட்டமே தான் என பிரபல தனியார் விளையாட்டு தொலைக்காட்சி நிறுவனம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்தியாவில் உள்ள ரசிகர்கள் பெரும்பாலும் கிரிக்கெட்டைத்தான் அதிகம் விரும்பி பார்ப்பார்கள்.
தற்போது நடைபெற்று முடிந்த ரியோ ஒலிம்பிக்கின் பேட்மிண்டன் இறுதிப்போட்டியில் ஸ்பெயினின் கரோலினாவும், இந்தியா சார்பில் சிந்துவும் மோதினர்.
இப்போட்டியில் கரோலினா வெற்றிபெற்று தங்கப்பதக்கம் வென்றார். சிந்து வெள்ளிப்பதக்கம்...
அவுஸ்திரேலியாவில் நடைபெற்ற பிக்பாஷ் லீக் போட்டியில் ஒரு பந்தில் 20 ஓட்டங்கள் குவித்த வீடியோ தற்போது சமூகவலைதளங்களில் வைரலாக பரவிவருகிறது.
கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு, ஏனெனில் அதில் சில எதிர்பாரத நிகழ்வுகள் நடைபெறும். இந்திய கிரிக்கெட் வீரரான யுவராஜ்சிங் 6 பந்தில் 6 சிக்ஸ்ர் அடித்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினார்.
அது போல 2 பந்தில் 15 ஓட்டங்கள் எடுத்தது எல்லாம் உண்டு. அது ஏன் ஒரு பந்துக்கு ஒரு...
நிஷான் நினைவகச் சுற்றுக்கிண்ணத்தொடர்வெற்றிக்கேடயத்தை தட்டிச்சென்றது யங்ஸ்டார்ஸ்(Youngstars CC)
Thinappuyal -
மார்க்கம் ரொறொன்டோ கிரிக்கெட் லீக்(MTCL) அமைப்பின் இந்த வருட நட்சத்திர வீரர்களின்(All Star Game) துடுப்பாட்டப்போட்டிகள் வரும் செப்டெம்பர் மாதம் 18ம்(September 18th) திகதி ஞாயிற்றுக்கிழமை ஐடியல் டெவெலொப்மெண்ட் பார்க்(Ideal Development Park) மைதானத்தில் நடைபெறவுள்ளமை யாவரும் அறிந்ததே.
அத்தொடருக்கான வீரர்கள் தெரிவு கடந்த வெள்ளிக்கிழமை மாலை 6 மணியளவில் Scarborough Civic Centerஇல் நடைபெற்றது. கடந்த வருடங்களைப் போல் இம்முறையும் 27 நட்சத்திர வீரர்கள் 9 பேர் கொண்ட...
டோனி, கோஹ்லி இருவர்களில் இந்திய அணியின் சிறந்த அணித்தலைவர் யார்? என்ற கேள்விக்கு அவுஸ்திரேலிய ஜாம்பவான் கிளென் மெக்ராத் பதிலளித்துள்ளார்.
இந்திய பத்திரிக்கை ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போதே, அவரிடம் இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளது.
இதற்கு பதிலளித்த மெக்ராத், இருவர்களில் ஒருவரை சிறந்தவராக தெரிவு செய்ய மறுத்துவிட்டார்.
மேலும் அவர் கூறியதாவது, இருவருக்கும் தனித்திறமை வேறுபாடுகள் உள்ளது. டோனி, கோஹ்லி இருவரும் களத்தில் முற்றிலும் வேறுபட்ட வீரர்கள். டோனி, மிஸ்டர் கூல் அமைதியானவர்....
ஒவ்வொரு நாட்டு வீரர் -வீராங்கனைகளும் எவ்வளவோ கஷ்டத்திற்கும் கடினஉழைப்பிற்க்கும் அப்பாற்பட்டுதான் ஒலிம்பிக்கில் பதக்கங்களை வெல்கின்றனர்.
ரியோ ஒலிம்பிக்கில் கென்யா 6 தங்கம் 6 வெள்ளி மற்றும் ஒரு வெண்கலத்தை வெற்றிகொண்டிருந்தது.
ஆப்பிரிக்காவில் வறுமைத் தாண்டவமாடும் நாடுகளில் கென்யாவும் ஒன்று. குறைந்தது 20 ஊர்களுக்கு ஒரு பள்ளிதான் இருக்கும்.
பல கிலோ மீட்டர் தூரம் நடந்துதான் குழந்தைகள் பள்ளிக்கு செல்ல வேண்டி நிலை காணபடும்.
காடு, மலை, வனவிலங்குகள் இவற்றையெல்லாம் கடந்துதான் கென்ய குழந்தைகள் பள்ளிக்கு...
நமக்கு தேவையான ஏராளமான விட்டமின்களையும், பலவகையான சத்துகளையும், ஊட்டச்சத்துகளையும் கொண்டது ஸ்ட்ராபெர்ரி பழம்.
ஸ்ட்ராபெரி பழத்தில் உள்ள பிலேவனாய்டு என்ற பொருள், நோய் எதிர்ப்பு சக்தி மருந்துக்கு இணையாக செயல்படுவது ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஸ்ட்ராபெரியில் விட்டமின் C, A, K , தையமின், ரிபோபேளேவின், நியாசின், பேன்டோதெனிக் அமிலம், போலிக் அமிலம், சையனோகோபாலமின், டோக்கோபெரால் செம்பு, மாங்கனிஸ், அயோடின், பாஸ்பரஸ், மெக்னீசியம், கால்சியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் செலினியம் போன்ற...
வட்டுவாகலில் பொதுமக்களினுடைய காணிகளை கடற்படைக்கு வழங்குவதற்காக அளவீடு செய்யும் நடவடிக்கைகள் முனைப்புடன் மேற்கொள்ளப்படுகின்றன. இந்தச் செயற்பாடா நல்லிணக்கம்? இது இன நல்லிணக்கத்தின் அடையாளம் அல்ல எனதமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ்கந்தராஜா தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,
"முல்லைத்தீவு மாவட்டத்தின் முள்ளிவாய்க்கால் வட்டுவாகல் பகுதியில் மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி மீண்டும் கடற்படையினரின் தேவைக்காக 617 ஏக்கர் பொது மக்களின் காணியை சுவீகரிப்பதற்காக காணி அளவீடு...