மஹிந்த ராஜபக்சவின் மலேசிய வருகைக்கு எதிராக மலேசிய மக்கள் ஆர்ப்பாட்டம் ஒன்றினை மேற்கொண்டுள்ளனர். மேலும் மஹிந்தவின் வருகைக்கு எதிராக மலேசிய தமிழ் உணர்வாளர்கள் மலேசிய காவல்துறையில் நூற்றுக்கும் மேற்பட்ட முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. மலேசிய அரசுடனும் கலந்துரையாடவுள்ள மஹிந்த பௌத்த விகாரைகளுக்கும் செல்லவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இதேவேளை மலேசிய அரசிற்கு மஹிந்த ராஜபக்ச தமிழ் மக்களுக்கு செய்த கொடுமைகள் நன்றாக தெரியும், மலேசிய அமைச்சரவையில் இருக்கும் தமிழ் அமைச்சர்களுக்கும் இது நன்றாக தெரியும். இவை நன்றாக...
சுதந்திரக் கட்சியின் 65ஆம் ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ளாமல் தப்பிக் கொள்வதற்காகவே மஹிந்த மலேசியா சென்றுள்ளார் என அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார். இன்று ஐக்கிய தேசிய கட்சி தலைமையகத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். சுதந்திரக் கட்சியின் 65 ஆவது மாநாடு என்பது இனி மேல் நடக்காது, ஒரு தடவையே வரும் அதில் கலந்து கொள்ளாமல் தப்பிக் கொள்வதற்காகவே மஹிந்த மலேசியா சென்றுள்ளார். மலேசியாவிற்கு அவரை யாரும்...
பரவிபாஞ்சானில் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்துக் காணிகளையும் இரண்டு வாரத்தில் பெற்றுத் தருவதாக எதிர் கட்சி தலைவர் வழங்கிய உறுதிமொழி நிறைவேறாத நிலையில், பரவிபாஞ்சான் மக்கள் மீண்டும்தங்களின் கவனயீர்ப்பு போராட்டத்தை நேற்று இரவு முதல் ஆரம்பித்துள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது. பாதுகாப்புத் தரப்பினரால் சுவீகரிக்கப்பட்டிருந்த தமது காணிகளை மீள ஒப்படைக்குமாறு வலியுறுத்தி பிரதேச மக்கள் கடந்த சில வாரங்களாக தொடர் போராட்டங்களை முன்னெடுத்து வந்தனர். இதனையடுத்து கடந்த 17 ஆம் திகதி...
பாதிக்கப்பட்ட எமக்கு நீதி வழங்குங்கள் என ஐ.நா செயலாளரின் கவனத்தினை ஈர்க்கும் வகையில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றினை பொது மக்கள் முன்னெடுக்கவுள்ளதாக வடமாகாணசபை உறுப்பினர் கே.சிவாஜிலிங்கம் அறிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்று வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு அறிவித்தார். போர் நடைபெற்ற போது, தமிழ் மக்களை ஐ.நா சபை காப்பாற்ற தவறியதென்ற குற்றச்சாட்டு பலரிடமும் இருக்கின்றது. அரசியல் கைதிகள் விடுதலை, காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான விசாரணை மற்றும் காணிகள் விடுவிக்கப்படாமல் உள்ள...
மூன்று பிள்ளைகளின் தந்தையை வெட்டிக் கொலை செய்த கணவன் மனைவி உட்பட மூன்று பேருக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்துள்ளது. அம்பலாங்கொடை பிரதேசத்தில் 1993 ஆம் ஆண்டு ஜனவரி 18 ஆம் திகதி மூன்று பிள்ளைகளின் தந்தையான ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு ஹம்பாந்தோட்டை மேல் நீதிமன்றத்தில் நடந்து வந்ததுடன் சட்டமா அதிபர் குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்திருந்தார். கடந்த 23 வருடங்களாக...
இந்தியாவில் தொழில்நுட்ப கற்கைகளுக்கு புகழ் பெற்ற நிறுவனமாகிய Indian Institutes of Technology (IITs)யில் திறமை மிக்க இலங்கையைச் சேர்ந்த மாணவர்களும் கல்வி கற்பதற்கான வாய்ப்புக்களை 2017-2018 கல்வி ஆண்டிலிருந்து ஏற்படுத்திக் கொடுக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இது சம்பந்தமாக Indian Institutes of Technology (IITs) யின் விரிவுரையாளர்கள் அடங்கிய குழு ஒன்று செப்டம்பர் மாதம் முதல் வாரத்தில் யாழ்ப்பாணத்தில் மாணவர்களுடனான கலந்துரையாடலை நடாத்தவுள்ளது. இக்கலந்துரையாடல் எதிர்வரும் செப்டம்பர்...
நல்லுாரில் பலரது கவனத்தையும் ஈர்ப்பதற்காக வேட்டி கட்டி வந்துள்ளார் ஒரு பெண். இவர் யாழ் மாவட்ட பெண்கள் உரிமை செயற்பாட்டாளரான ரஜனி என தெரியவருகின்றது. நல்லுார் திருவிழாவில் பல்லாயிரம் மக்கள் வந்திருந்த நிலையில் இது பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளமை குறிப்பிடத் தக்கது. நல்லுாரில் வெளிநாட்டவர்கள் மற்றும் பல சம்பவங்கள் எல்லம் நடந்துள்ள நிலையில் வேட்டி கட்டி பெண் ஒருவர் திருவிழாவில் கலந்து கொண்டமை பலரதும் கவனத்தை ஈர்த்துள்ளது. இதைத்தான் சொல்வான்களோ ஆணுக்கு பெண்...
    தமிழீழ தேசியத் தலைவர் மற்றும் தமிழர் அடையாளங்களுடன் தாலியில் செதுக்கி திருமணம்! தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களின் உருவத்தை தாலியில் செதுக்கி திருமணம் ஒன்று கனடாவில் நடை பெற்று உள்ளது. கனடாவில் வாழந்து வரும் ஈழத்து தமிழர்களான கார்த்திக் மற்றும் மீரா ஆகியோரின் திருமணத்தில் இவ்வாறாக நடை பெற்றுள்ளது. இப்படி தமிழீழ தேசியத் தாலியில் இணைத்தமை பலராலும் வியப்பாக பேசப்பட்டாலும் தமிழர்களின் அடையாளமாக மாறி விட்டமை குறிப்பிடத் தக்கது.  
நடிகை தீபிகா படுகோனேவும் நடிகர் ரன்வீர் சிங்கும் காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ‘ ரன்வீர் சிங் ரிட்டர்ன்ஸ்’ என்ற படத்தில், ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக தமிழ் சினிமா நாயகி தமன்னா நடித்துள்ளார். இந்த படத்தின் விளம்பரத்திற்காக ஒரு நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்து. அதில் ரன்வீரும் தமன்னாவும் கலந்துக்கொண்டனர். அப்போது, ”தமன்னா, டான்ஸ் ஆடியபடி மேடைக்கு வந்தார். அவருக்கு அடுத்து வந்த ரன்வீரும் டான்ஸ் ஆடியபடி வந்தார். தமன்னா அருகில் வந்தவுடன் ரன்வீர்...
  அன்னதானக் கந்தன் எனப் பக்தர்களால் போற்றிப் புகழப்படும் வரலாற்றுப் பிரசித்தி பெற்ற யாழ். தொண்டைமானாறு செல்வச்சந்நிதி முருகன் ஆலய வருடாந்த மஹோற்சவம் இன்று வியாழக்கிழமை பிற்பகல்-3.10 மணிக்குக் கொடியேற்றத்துடன் ஆரம்பமாகவுள்ளது. தொடர்ந்து 15 தினங்கள் சிறப்பாக நடைபெறவுள்ள இவ்வாலய மஹோற்சவத்தில் எதிர்வரும்-10ம் திகதி சனிக்கிழமை காலை-07.30 மணிக்குப் பூங்காவனத் திருவிழாவும், 11ம் திகதி காலை-07 மணிக்குக் கைலாச வாகனமும், 14ம் திகதி புதன்கிழமை மாலை சப்பறத் திருவிழாவும், 15ம் திகதி...