சட்டவிரோதமான முறையில் மிதக்கும் ஆயுதக்களஞ்சியங்களை வைத்திருந்து இயக்கினார்கள் என்ற குற்றச்சாட்டில், சிறிலங்காவின் முன்னாள் கடற்படைத் தளபதிகள் மூவர் மீதும், வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவன்ட் கார்ட் பாதுகாப்பு நிறுவனத்தினால் மிதக்கும் ஆயுதக் களஞ்சியங்களை சட்டவிரோதமாக இயக்கியதாக, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழு, நேற்று கொழும்பு பிரதம நீதிவான் நீதிமன்றத்தில், சிறிலங்காவின் முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோத்தாபய ராஜபக்ச உள்ளிட்ட 8 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்தது. இவ்வாறு வழக்குத் தாக்கல்...
கொழும்பு நிதி நகரத் திட்டத்தைப் பயன்படுத்தி சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையிலான உறவுகளை கெடுப்பதற்கு எவரையும் சீனா அனுமதிக்காது என்று, சிறிலங்காவுக்கான சீனத் தூதுவர் யி ஷியான்லியாங் தெரிவித்துள்ளார். ‘சீன நிறுவனங்களால் கட்டப்படவுள்ள நிதி நகரத்தை, உலகின் எந்தப் பகுதியில் உள்ள நிறுவனங்களும் தமது வெளிப்படையான வர்த்தக நோக்கங்களுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த திட்டத்தில் ஏற்கனவே சில இந்திய நிறுவனங்களும் தொடர்புபட்டுள்ளன. இந்தியாவின் பங்களிப்பு அவசியமானது. எந்த மூன்றாவது தரப்பினதும் பங்களிப்பை நாம்...
முன்னாள் ஜனாதிபதியும் குருணாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜபக்ஷ இன்று அதிகாலை 12.10 மணியளவில் மலேசியா நாட்டிற்கான விஜயம் ஒன்றினை மேற்கொண்டுள்ளார். இதேவேளை, மஹிந்த ராஜபக்ஷவுடன் 6 பாராளுமன்ற உறுப்பினர்கள் உடன் பயணித்துள்ளதாக விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மேலும், மலேசியாவில் ஐந்து நாள் தங்கியிருப்பார் எனவும், அங்கு நடைபெறவுள்ள ஆசிய அரசியல் கட்சி சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வார் எனவும், முன்னாள் ஜனாதிபதியின் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கட்சி சம்மேளனத்திற்கான...
மஹிந்த ராஜ­பக் ஷ தனக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுக்­களை மறைப்­ப­தற்கே பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக இருக்­கின்றார். இல்­லா­விட்டால் ஜனா­தி­ப­தி­யாக இருந்த ஒருவர் உலகில் எந்த நாட்­டி­லா­வது பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ராக மீண்டும் வரு­வாரா என்று தேசிய ஐக்­கிய முன்­ன­ணியின் தலைவர் அஸாத் சாலி கேள்­வி­யெ­ழுப்­பினார். அதி­கா­ரத்தை பகிர்ந்து ஐக்­கி­யப்­ப­டுத்தும் இயக்கம் நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்து கூறு­கையில், நாட்டில் நல்­லி­ணக்கம் இனங்­க­ளுக்­கி­டை­யி­லான ஒற்­றுமை...
பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சகீப் சுலைமானின் கடத்தலை அவருக்கு மிக நெருக்கமாக இருந்த ஒருவரே அவரின் சகாக்களுடன் திட்டமிட்டுள்ளதாக பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது. கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கடத்தப்பட்டுள்ள சகீப் சுலைமான் தொடர்பான தகவல்களை நன்கு அறிந்த அவருக்கு மிக நெருக்கமான ஒருவர் மூலம் கடத்தல் திட்டமிடப்பட்டுள்ள அதேவேளை அவரின் நம்பிக்கைக்குரியவராக செயற்பட்டுவந்த அவரது ஊழியர் மீதே பலத்த சந்தேகம் திரும்பியுள்ளது. வர்த்தகர் சகீபிற்கு நெருங்கியவர் மூலம் திட்டமிட்ட...
பசிபிக் பெருங்கடலில் உருவாகியுள்ள சக்திவாய்ந்த ‘லயன்ராக்’ புயல் ஜப்பான் நாட்டின் வடகிழக்கில் உள்ள டோஹோக்கு மாகாணத்தில் மணிக்கு 120 முதல் 176 கிலோ மீட்டர் வேகத்தில் இன்று கரையை கடக்கும் என அந்நாட்டின் வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்த புயலினால் அடுத்த 24 மணிநேரத்தில் 35 சென்டிமீட்டர் அளவிலான பலத்த மழையும் பெய்யக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 110 உள்நாட்டு விமானச் சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன....
ஐந்து மணி நேரத்திற்கு குறைவாகத் தூங்குபவர்களுக்கு ஞபாகமறதி ஏற்படும் வாய்ப்பு அதிகமாக உள்ளது என சமீபத்தில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது. தூக்கம் நமது நினைவுத் திறனில் முக்கியப் பங்கு வகிக்கிறது. எவ்வளவு மனக்குழப்பத்துடன் வீடு திரும்பினாலும், இரவு நன்கு தூங்கி அதிகாலை எழுந்தவுடன் நினைவுத்திறன் அதிகரிப்பதை நம்மால் அனுபவப்பூர்வமாக உணர முடியும். நினைவுத்திறன், கற்றுக்கொள்ளும் திறன் ஆகியவற்றை இயக்குவது மூளையின் ஹிப்போ கேம்பஸ் (Hippocampus) என்னும் பகுதி. 15 வருடங்களுக்கு முன்னால் நடந்த...
எல்லோரும் நினைப்பது பழங்கள் சாப்பிடுவது என்றால், அவற்றை விலைக்கு வாங்கி, வெட்டி, வாயிலிட்டு சாப்பிடுதல் என்று. நீங்கள் நினைப்பது போல் எளிதானதல்ல அது. பழங்களை எப்படி அதுவும் எப்போது சாப்பிடவேண்டும் என்பது மிகவும் முக்கியம். பழங்களைச் சாப்பிடுவதென்றால், சாப்பிட்ட பிறகு பழங்களை எடுத்துக் கொள்வது அல்ல. பழங்களை வெறும் வயிற்றிலேயே சாப்பிட வேண்டும். பழங்களை வெறும் வயிற்றில் எடுத்துக் கொண்டால், அது நம் உடலின் நச்சுக்களை வெளியேற்றுவதிலும், எடை குறைப்பு,...
மாஸ்டர் கேம்ஸ் எங்கு நடக்கிறதோ அங்கெல்லாம் பங்கெடுத்து பதக்கங்களை தனதாக்கி வருகிறார் 100 வயது பெண்மணி மன் கவுர். 100 மீ ஓட்டத்தில் 1 நிமிடம் 21 விநாடிகளில் இலக்கை எட்டி தங்கம் வென்றார். வயதில் சதம் அடித்துள்ள மன் கவுர் திங்கட்கிழமை அமெரிக்காவில் நடைபெற்ற மாஸ்டர் கேமில் தங்க பதக்கத்தை தனதாக்கி கொண்டிருக்கிறார். இதில் சுவரசியமான தகவல் என்னவென்றால் மன் கவுர்தான் இந்தபோட்டியில் கலந்து கொண்ட ஒரே ஒரு பெண்...
புனிதமாக கருதப்படும் விடயங்களில் துளசிக்கு ஒரு முக்கிய இடம் உண்டு. இந்துக்கள் பெரும்பாலும் தங்களது வீட்டில் ”துளசி மாடம்” வைத்திருப்பார்கள், அதிகாலையில் எழுந்து துளசி மாடத்தில் விளக்கேற்றி, மாடத்தை சுற்றிவந்து மனமுருகி வேண்டுவது வழக்கம். இதேபோன்று கோவில்களுக்கு சென்றாலும் துளசி தீர்த்தம், துளசி இலைகளை பிரசாதமாக கொடுப்பார்கள். இது ஏன் என்று என்றாவது சிந்தததுண்டா? துளசிக்கு மட்டும் ஏன் இவ்வளவு முக்கியத்துவம் என்று யோசித்து பார்த்ததுண்டா?.