இலங்கை தர நிர்ணயம் கொண்ட மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் இன்று முதல் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகன விபத்துக்களால் ஏற்படும் மரணங்களை குறைக்கும் நோக்குடன் இந்த சட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக நுகர்வோர் சேவை அதிகாரிகளின் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.
இந்த சட்டமானது பல வருடங்களுக்கு முதலே வர்த்தமானி மூலம் வெளியிடப்பட்டதாகவும், தலைக்கவசம் அணியாமல் நாளொன்றிட்கு 7 அல்லது 8 மரணங்கள் சம்பவிப்பதாகவும் தெரிவித்துள்ள அவர், இதன் காரணமாகவே தர நிர்ணயம் கொண்ட தலைக்கவசங்களை...
ஜனாதிபதியின் இணையத்தை முடக்கிய இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்கவுள்ளதாக BOUNTY LAB INTERNATIONAL PVT LTD அறிவித்துள்ளது.
ஐக்கிய இராச்சியத்தில் தலைமையகத்தை கொண்டுள்ள குறித்த நிறுவனம் தற்பொழுது இலங்கையிலும் செயற்பட்டு வருகின்றது. இந்நிறுவனம் ஜனாதிபதியின் இணையத்ததை ஹேக் செய்த இளைஞனுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதற்காக முன்வந்துள்ளது.
"இப்படியான இளைஞர்கள் உலக அளவில் குறைவாகவே இருக்கின்றனர், இவர்களை நம் நாட்டிற்கு சாதகமாக பயன்படுத்த வேண்டும், இவர்களை பண்படுத்தவும் வேண்டும். நெறிமுறைகளை சொல்லிக் கொடுத்து வளப்படுத்த வேண்டும்.
ஜனாதிபதியின்...
வெளிநாட்டு கோடீஸ்வரர் ஒருவருக்கு இந்தியாவில் வசிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகமான வெளிநாட்டு முதலீட்டாளர்களை இந்தியாவிற்கு ஈர்க்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, ஒருவர் 1.5 மில்லியன் அமெரிக்க டொலர்களை 18 மாதங்களிலோ அல்லது 3.75 மில்லியன் யூரோக்களை மூன்று வருடங்களினுள் இந்தியாவில் முதலீடு செய்ய வேண்டும்.
இதுபோல் அவர் ஒவ்வொரு நிதியாண்டிலும் 20 இந்தியர்களுக்கு தொழில் முயற்சிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எனவே குறித்த இலாபத்திற்காக இந்த வெளிநாட்டு கோடீஸ்வரருக்கு...
லண்டன் சென்ற ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் ஒன்று தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, மீண்டும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு திரும்பியதாக தெரிவிக்கப்படுகின்றது.
அன்றைய தினம் மாலை மற்றுமொரு விமானத்தின் மூலம் பயணிகள் பயணத்தை தொடர்ந்ததாக ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் பேச்சாளர் டீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
கடந்த திங்கட்கிழமை 1.30 மணியளவில் பயணத்தை ஆரம்பித்த விமானம் 3 மணித்தியாலங்களின் பின்னர் மீண்டும் நாடு திரும்பியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதனை தொடர்ந்து மேலும் ஒரு மணித்தியாலங்களின் பின்னர் மற்றைய...
இனவாத செயற்பாடுகளினால் பௌத்த மதத்தினை எழுச்சிபெற, மேன்மையடையச் செய்ய முடியாது என்பதை சிங்கள பேரினவாத சக்திகள் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும்.
Thinappuyal News -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது ஆட்சிக்காலம் மிகவும் மோசமான அனுபவங்களைத் தந்தது. சிறுபான்மை மக்கள் இனவாதத்தின் அகோர முகங்களைக் கண்டு நடுங்கினர். பொது பலசேனா, ராவண பலய போன்ற கடும்போக்கு அமைப்புக்களில் அங்கம் வகித்த சில பௌத்த துறவிகள், சிறுபான்மையினர் மத்தியில் காவியுடைக்கு இருந்த மரியாதையைக் கட்டம் கட்டமாகக் கெடுத்துக் கொண்டனர். சிங்கள ஆட்சியாளர்களால் தமிழர்கள் ஒடுக்கப்பட்டு விட்டனர் என்று கடும்போக்கு சக்திகள் கருதினர். புலிகள் அழிக்கப்பட்டு...
இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் செய்துக்கொள்ளப்படவுள்ள பொருளாதார உடன்படிக்கையின் விளைவுகள் குறித்து ஆராயப்படவேண்டும் என்று சர்வதேச வர்த்தகத்துறை நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
வர்த்தகத்துறை முன்னாள் பணிப்பாளரான பி டி பெர்ணான்டோ இந்தக்கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
குறித்த உடன்படிக்கை பாதகமான விளைவுகளை ஏற்படுத்தி நாட்டின் ஏற்றுமதியை பாதிக்கக்கூடுமா என்பது குறித்தும் ஆராயப்படவேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனவே அது குறித்த தெளிவாக ஆராயப்படவேண்டும் என்று பெர்ணான்டோ தெரிவித்துள்ளார்.
இலங்கையை பொறுத்தவரை, உத்தேச இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையானது, முதல்முறையாக...
விஷ ஊசி விவகாரம் தொடர்பில் இவ்வாரம் முதல் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக வட மாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது, குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
புனர்வாழ்வு பெற்று சமூகத்துடன் இணைக்கப்பட்ட முன்னாள் போராளிகள் மத்தியில் தமது உடல் நலம் தொடர்பில் நிலவுகின்ற கவலைகளைக் கருத்திற்கொண்டு, வட மாகாணசபையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு அமைவாக அவர்களது நலன்கள் தொடர்பாக எமது...
கிளிநொச்சியில் புத்தர் சிலையை உடைத்தவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுல்படுத்த வேண்டுமேன ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மதப் பிரிவான ஹெல பொது சவிய அமைப்பு கோரியுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அந்த அமைப்பு நேற்று அனுப்பி வைத்த கடிதத்தில் இந்தவிடயங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.
ஹெல பொது சவிய அமைப்பின் தலைவர் புதகல ஜினவன்ச தேரரின் கையொப்பத்துடன் கூடிய இந்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது
இலங்கை இராணுவத்தினால் கிளிநொச்சி, கனகராயன்குளத்தில் நிர்மாணிக்கப்பட்ட புத்தர் சிலை ஒரு...
மலேசிய சுதந்திர தின நிகழ்வை சீர்குலைக்கும் நோக்கில், அங்குள்ள உலகப் புகழ்பெற்ற பத்துமலை முருகன் கோவில் உள்ளிட்ட இடங்களில் தாக்குதல் நடத்த திட்டமிட்டிருந்த ஐ.எஸ் தீவரவாதிகள் என சந்தேகிக்கப்படும் மூவரை அந்நாட்டு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அந்நாட்டு பொலிஸ் துறை அதிகாரி காலித் அபு பக்கர், மலேசியாவில் கடந்த ஞாயிற்றுக்கிழமை சுதந்திர தினம் அமைதியாகக் கொண்டாடப்பட்டது.
சுதந்திர தினக் கொண்டாட்டத்தின்போது, பத்துமலை முருகன் கோவில் உள்ளிட்ட...
கனடாவை சேர்ந்த தம்பதியினர் Joshua Boyle மற்றும் Caitlin Coleman ஆகிய இருவரையும் கடந்த 2012ம் ஆண்டு ஆப்கான் தலிபான் தீவிரவாதிகள் கடத்தி சென்றனர்.
அப்போது Caitlin Coleman கர்ப்பமாக இருந்தார், இந்நிலையில் நான்கு ஆண்டுகள் கடந்த நிலையில் தற்போது தலிபான்கள் புதிய வீடியோவை வெளியிட்டுள்ளனர்.
அதில் தோன்றும் தம்பதிகள், தலிபான் தீவிரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றுவதை நிறுத்துமாறு ஆப்கன் அரசை அமெரிக்க- கனடா நாட்டு அரசுகள் நிர்பந்திக்காவிட்டால் தாங்கள் படுகொலை...