சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் மன்னார் கட்டையடம்பன் பகுதியில் வைத்து சந்தேக நபர் ஒருவரை நேற்று(24) புதன் கிழமை மாலை கைது செய்துள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதயகுமாரசிங்கம் கௌசிகன் தெரிவித்தார். மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலையடுத்து,மன்னார் மாவட்ட பதில் பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் அவர்களின் வழிகாட்டலின்...
  உலகின் மிகப் பழமையான நாடுகளான இந்தியாவும் சீனாவும் தான் அடுத்த வல்லரசுகள் என்று அடித்து சொல்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள். அதிலும் ஆசியாவின் நோயாளி என்று ஒரு காலத்தில் வர்ணிக்கப்பட்ட சீனா தன்னுடைய உள்நாட்டு சந்தையை எழுபதுகளில் வெளிநாடுகளுக்கு திறந்து விட்டதன்மூலம் பிரமிக்கத்தக்க பொருளாதார வளர்ச்சியை அடைந்துள்ளது. சீனா மேலை நாடுகளுக்குத் தன்னுடைய சந்தையைத் திறந்து விட்டதுமல்லாமல் தன்னுடைய தொழிற் வளங்களை இந்த உலகமயமாக்கலின் மூலம் பெருக்கிக் கொண்டு உள்ளது. இன்று...
  மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் நோயாளி ஒருவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திர சிகிச்சையின் போது நாக்கின் கீழ்ப்பகுதி உமிழ்நீர்ச் சுரப்பியிலிருந்து 5 சென்ரி மீற்றர் நீளமும் 25 கிராம் எடையும் கொண்ட கல் ஒன்று அகற்றப்பட்டுள்ளது. உபாதை காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட காத்தான்குடி 5ஆம் குறிச்சி குபா பள்ளி வீதியைச் சேர்ந்த 47 வயதான கச்சி முஹம்மது முபாறக் என்பவருக்கு மேற்கொள்ளப்பட்ட சத்திரசிகிச்சையின் போதே, அவரது நாக்கின் கீழ்ப்பகுதியிலிருந்து குறித்த கல் அகற்றப்பட்டது. மட்டக்களப்பு...
கொழும்பு – பம்பலப்பிட்டியில் வசித்துவந்த செல்வந்தரான மொஹமட் சுலைமானின் படுகொலை தொடர்பில் சேதாவக்க மற்றும் கிராண்ட்பாஸ் பிரதேசஙங்களில் வசிக்கும் இருவர் தொடர்பில் முக்கிய தகவல்கள் கிடைத்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். சுலைமானை படுகொலை செய்து சடலத்தை மாவனெல்லைக்கு கொண்டுச் செல்வதற்கு இவர்கள் இருவரும் உதவியிருக்கலாம் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர். அவர்களிடம் பொலிஸார் பல தடவைகள் வாக்குமூலங்களை பதிவு செய்துள்ளதாகவும் எனினும் மேலும் பல சந்தேகநபர்கள் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் கூறியுள்ளனர். இதேவேளை, மொஹமட்...
சூரியக் குடும்பத்தில் உள்ள பெரும்பாலான கோள்கள் தொடர்பான ஆராய்ச்சிகளை மேற்கொள்வதில் நாசா நிறுவனம் பெரும் முனைப்பு காட்டி வருகின்றது. சம காலத்தில் செவ்வாய் கிரகம் தொடர்பான ஆராய்ச்சிகளை முடுக்கிவிட்டுள்ள அந் நிறுவனம் தற்போது மற்றுமொரு முயற்சியில் இறங்கியுள்ளது. இதன்படி சனிக் கிரகத்தின் துணைக் கோளான டைட்டனில் காணப்படும் சமுத்திரத்தில் தானியங்கி நீர் மூழ்கிக் கப்பல் ஒன்றினை நிறுத்துவதற்கு திட்டமிட்டுள்ளது. இதன் ஊடாக டைட்டனில் காணப்படும் சமுத்திரம் தொடர்பான விரிவான ஆராய்ச்சியில் ஈடுபடவுள்ளது. பூமியிலிருந்து சுமார்...
சென்னை ஈக்காட்டுத்தாங்கல் கிறிஸ்டியன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியைச் சேர்ந்த பதினொன்றாம் வகுப்பு மாணவர் டெல்லி பாபு என்பவர் கண் பார்வையற்றவர்களுக்கு கண் போல இருந்து பயன்படக் கூடிய கருவியை கண்டுபிடித்துள்ளார். தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை மற்றும் தமிழ்நாடு அறிவியல் வளர்ச்சிக் கழகம் இணைந்து மாநில அளவிலான பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் கண்காட்சியை நடத்தியது. அந்த கண் காட்சியின் போது மாணவர் டெல்லி பாபு கண் பார்வையற்றவர்களுக்கு கண் போல இருந்து பயன்படக்கூடிய...
முடி கொட்டுபவர்களுக்கு என்னதான் முடிக்கு பராமரிப்பு செய்தாலும் உள்ளே உட்கொள்ளும் சத்தான முக்கியமாக இரும்பு சத்துள்ள உணவுகள் மூலமாகவே நல்ல பலன்கள் கிடைக்கும். என்னதான் முடி வளர பரம்பரை ஒரு காரணம் என்றாலும், நாம் முயன்றால் கொஞ்சம் வளர்ச்சியை கொண்டு வரலாம் அல்லது இருப்பதையாவது காப்பாத்தலாம். பிரச்சனைகளில்லாத கூந்தல் யாருக்கும் அமைவதில்லை. முடி உதிர்தல், இளநரை, பொடுகு அரிப்பு, பேன் தொல்லை, சொட்டை எனக் கூந்தலைப் பாதிக்கும் பிரச்சனைகள் ஏராளம். இரும்பு...
மருத்துவத்தில் மூலிகைகளின் பங்கு முக்கியமானது. மூலிகைகளை மட்டுமே மருத்துவத்திற்கு நம்பியிருந்த காலத்தில் மூலிகைப் பற்றிய தனிநபர் ஆராய்ச்சிகள் அதிகம் இருந்தன. சில அரிய மூலிகைகளும் அவைகளை பயன்படுத்திய விதத்தில், பெரிய நோய்களை எல்லாம் மிக சாதாரணமாக குணப்படுத்திய அதிசயங்களும் நிறைய நடந்தன. இப்போது மூலிகை வைத்தியம் தரமில்லாமல் போனதற்கு அவை தயாரிக்கும் முறை உட்பட மூன்று காரணங்கள் சொல்லப்படுகிறது. அஷ்டகர்ம முறைப்படி தயாரித்தல் இம்முறைப்படி மருந்து தயாரித்தல் என்றால், எட்டுவிதமான குணங்களை கொண்ட எட்டுவிதமான...
உருளைக்கிழங்கு உயர்தரமான சத்துணவு கொண்ட காய்கறி ஆகும். 100 கிராம் கிழங்கில் கிடைக்கும் கலோரி 97 ஆகும். மேலும் 100 கிராம் கிழங்கில் 22.6% கார்போஹைட்ரேட்டுகள் உள்ளன. எனவே உடலுக்கு உடனே சக்தி கிடைத்து விடுகிறது. புரதம் 1.6% உள்ளது. பாஸ்பரஸ், இரும்பு, விட்டமின் ஏ, பி, சி முதலியவையும் போதிய அளவில் உள்ளன. வயதானவர்களுக்கும், குழந்தைகளுக்கும் தேவையான சுண்ணாம்புச் சத்து இதில் ஏராளமாக உள்ளன. உங்கள் உடலில் அதிகமாகப் புளிப்பு அமிலங்கள்...
கொலஸ்ட்ரால் என்பது கொழுப்பு வகைக் குழுமத்தைச் சார்ந்த மென்மையான மெழுகு போன்ற பொருள். உடல் நலம் காக்கவும், உடலின் சில முக்கிய பணிகளைச் செய்யவும் நமது உடலில் உள்ள கல்லீரல் 80% அளவுக்கு கொலஸ்ட்ராலை உற்பத்தி செய்கிறது. மீதமுள்ளவை நம் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் கொலஸ்ட்ரால், இது நாம் சாப்பிடும் அசைவ உணவுகளினால் உற்பத்தி ஆகின்றது. எனவே நம் உடலில் கொலஸ்ட்ரால் அதிகமானால் பல பிரச்சனைக்கு ஆளாகின்றோம். இந்த பிரச்சனைகளில் இருந்து தன்னைக் காப்பாற்றிக்...