மட்டக்களப்பு சிறைச்சாலையில் நிர்மாணிக்கப்பட்டுள்ள ஓவியங்கள் வியாழக்கிழமை நீதிபதிகளினால் திறந்து வைக்கப்பட்டன. மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் கே.எம்.யு.அக்பர் மற்றும் மட்டக்களப்பு சிறைச்சாலையின் பிரதம ஜெயிலர் என்.பிரபாகரன் ஆகியோரின் வழிகாட்டலிலும் ஆலோசனையிலும், மட்டக்களப்பு சிறைச்சாலையிலுள்ள இரண்டு கைதிகளினால் மட்டக்களப்பு சிறைச்சாலை சுவரில் வரையப்பட்ட ஓவியங்களை மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் எம்.கணேசராஜா மற்றும் களுவாஞ்சிகுடி மற்றும் ஏறாவூர் சுற்றுலா நீதிமன்றங்களின் நீதிபதி எம்.ஐ.றிஸ்வி ஆகியோர் திறந்து வைத்து திரை நீக்கம் செய்து வைத்தனர். இந்த...
யாழ்ப்பாணத்தில் அரிய வகை வெள்ளை நாகப்பாம்பு ஒன்று நேற்று கண்டு பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நாகமானது சுமார் ஆறு அடி நீளமானது எனவும் கூறப்படுகின்றது. யாழ். பொலிகண்டி பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில் அமைந்துள்ள கிணற்றில் இருந்தே இந்த அதிசய நாகம் பிடிக்கப்பட்டுள்ளது. குறித்த நாகத்தினை அப்பகுதி மக்கள் யாழ். வள்ளிபுர ஆழ்வார் ஆலயப்பகுதியில் கொண்டு சென்று விட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
  இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலர் பான் கீ மூன் மனித உரிமைகள் மற்றும் அபிவிருத்தி விவகாரங்களில் கவனம் செலுத்தவுள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், அவர் தனது வியஜத்தின் போது யாழ்ப்பாணத்துக்கும் சென்று பார்வையிடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய நாடுகள் சபை பொதுச் செயலரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை தெரிவித்துள்ளார். நியூயோர்க்கில் வைத்து நேற்று இந்த தகவலை அவர் வெளியிட்டுள்ளார். ஆசிய நாடுகளுக்கான விஜயத்தினை ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்...
சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க கொலையை நேரில் பார்த்த நபர் சாட்சியமளிக்கும் மனநிலையில் இல்லை என சட்ட வைத்திய அதிகாரி நீதிமன்றில் அறிவித்துள்ளார். அறிக்கை ஒன்றின் மூலம் இந்த விடயம் நேற்று கல்கிஸ்ஸ நீதிமன்றிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது. கொலையை நேரில் பார்த்ததாகக் கூறப்படும் நபர் நீதிமன்றில் சாட்சியமளிக்கக்கூடிய மனோ நிலையில் இருக்கின்றாரா என பரிசோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் அண்மையில் சட்ட வைத்திய அதிகாரிக்கு உத்தரவிட்டிருந்தது. இதேவேளை இந்த கொலை...
எந்த காரணத்திற்காகவும் இராணுவ முகாம்கள் அகற்றப்படாது என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். கொழும்பு பாதுகாப்பு மாநாடு தொடர்பில் ஊடகங்களுக்கு விளக்கம் அளிக்கும் செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில், தேசிய பாதுகாப்பினை உறுதி செய்யும் நோக்கில் வடக்கு கிழக்கில் இராணுவ முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு தேசியப் பாதுகாப்பினை உறுதி செய்வதற்காக வடக்கு கிழக்கில் நிறுவப்பட்டுள்ள முகாம்களை அகற்ற முடியாது. போர் இடம்பெற்ற பகுதிகளில் அமைதிச்...
காணாமல் போன பாடசாலை மாணவியை விடுதலை செய்வதாக கோரி தாயாரிடம் 75 லட்சம் ரூபா கப்பம் கோரியுள்ளதாக மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் தாயார் முறைப்பாடு பதிவுசெய்துள்ளார். யாழ். உடுவில் மானிப்பாய் வீதியைச் சேர்ந்த பரமரத்தினம் தவமலர் (வயது 50) என்பவரே நேற்று வியாழக்கிழமை மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் இவ்வாறு முறைப்பாடு பதிவு செய்துள்ளார். சம்பவம் தொடர்பாக தெரியவருவதாவது, பம்பலப்பிட்டி சென் கிளியர் பெண்கள் பாடசாலையில் உயர்தரம் பரீட்சைக்குத் தோற்றிய பரமரத்தினம் றொகாண்...
இரண்டு நாய்கள் மோதிக்கொண்டபோது அதனை சமரசம் செய்ய பலர் பிரயாசப்பட்டும் முடியவில்லை கடைசியில் நடந்நது என்ன?
பகுதியில் வசித்து வந்த ஒரு பிள்ளையின் தந்தையான டிசாந்த் என்பவர் BRIGHTON பகுதியில் உள்ள மலை ஒன்றில் குதித்து தற்கொலை புரிந்துள்ளார் . வவுனியா கூமாங்குளம் சிவன்கோவிலடியை சேர்ந்த இவர் பிரித்தானியாவிற்கு சென்று 06 வருடங்கள் என்பது குறைப்பிடத்தக்கது மேலும் இவர் உளைச்சலில் சிக்கி தவித்த நிலையில் இந்த தற்கொலையினை புரிந்துள்ளாராம் . சிதைந்த நிலையில் மீட்க பட்ட உடல் மரண பரிசோதனைக்காக மருத்துவமனையில் வைக்க பட்டுள்ளது குறித்த வாலிபனின் தற்கொலை தொடர்பாக பொலிசார் விசாரணைளை முடுக்கி...
  நடிகை கனிகா தன் கணவர் ஷ்யாமை விவாகரத்து செய்கிறார் என்று சமீபத்தில் செய்திகள் வெளிவந்தன. இந்த வதந்தியை கனிகா மறுத்துள்ளார். பேஸ்புக்கில் அவர் எழுதியுள்ளதாவது: 8 வருடங்களுக்கு முன்பு எந்தளவுக்குக் காதலுடன் இருந்தோமோ அதே அளவு காதலுடன் இப்போதும் உள்ளோம். 5 வயது மகன் கொண்ட சந்தோஷமான குடும்பம் எங்களுடையது. எனவே வதந்திகளைப் பரப்பவேண்டாம். காதல் மீது நம்பிக்கை கொண்டவள் நான். ஆமாம், என் கணவர் ஷ்யாமைக் காதலிக்கிறேன் என்று கூறியுள்ளார்.
  இத்தாலியில் ஏற்பட்ட நில அதிர்வின் காரணமாக பலியானவர்களின் எண்ணிக்கை 250 ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் 368 பேர் காயமடைந்துள்ளனர். இத்தாலியின் மத்திய பகுதியில் உள்ள மலைப்பாங்கான பிரதேசங்களில் இந்த நில அதிர்வு ஏற்பட்டிருந்தது. 6.2 மெக்னிரியுட் அளவில் இது பதிவாகி இருந்தது. அங்குள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க நகரான அமாட்ரைஸ் பகுதியிலேயே அதிக மரணங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் பலர் இடிபாடுகளுக்கு இடையில் சிக்கி இருக்கலாம் என்று அஞ்சப்படுகிறது. இதேவேளை இடிபாடுகளுக்குள் இருந்து குழந்தையொன்று மீட்கப்படும் காணொளியொன்றும் வெளியாகியுள்ளது.