லண்டனில் கடலில் குளிக்கச்சென்ற முல்லைத்தீவு புதுக்குடியிருப்பை சேர்ந்த இளைஞர்கள் 2பேர் கடலில் மூழ்கி பலியாகியுள்ளார்கள்.நேற்று குறித்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.மேலும் 3பேர் காணாமல் போயிருப்பதாகவும் அறியமுடிகின்றது.
இந்த சம்பவம் பிரித்தானியா வாழ் தமிழ் மக்களிடத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறித்த சம்பவத்தில் இந்துசன், கோபி எனப்படும் இரு இளைஞர்களே பலியாகியுள்ளார்.மேலும் மூன்றுபேரை காணவில்லை என்றும் அவர்களை தேடும் பணிகள் இடம்பெற்றுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது…
கொஞ்ச நாட்களுக்கு முன்பு கொப்பியோடு நாமல் அண்ணா வந்தார். அவரது படத்தைப் பொறித்த கொப்பிகளைத்தந்தார். இப்பொழுது சிறையிருக்கிறார். காரணம் என்ன?
Thinappuyal -
கொஞ்ச நாட்களுக்கு முன்பு கொப்பியோடு நாமல் அண்ணா வந்தார். அவரது படத்தைப் பொறித்த கொப்பிகளைத்தந்தார். இப்பொழுது சிறையிருக்கிறார். அவர் சிறையிருக்க காரணம் என்ன? பொதுச் சொத்துக்களை சூறையாடியமையே என வடக்கு மாகாண கல்வியமைச்சர் குருகுலராஜா தெரிவித்துள்ளார்.
கிளிநொச்சி பளைப்பிரதேசத்தில் அமைந்துள்ள இத்தாவில் கிராமத்து பள்ளிப்பிள்ளைகளுக்கு கற்றல் உபகரணங்களை வழங்குகின்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பிரித்தானியாவில் இருந்து விடுமுறைக்காக தாயகத்திற்கு வந்திருந்த கஜேந்திரன் என்பவரது திருமண நினைவு நாளை...
சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட கைதியொருவர் தப்பியோடியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
யாழ். சிறைச்சாலையிலிருந்து நேற்று முன்தினம் யாழ்.போதனா வைத்தியசாலையில் மருத்துவச் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த கைதியொருவரே இவ்வாறு தப்பியோடியுள்ளார்.
நேற்றிரவு 07ஆம் விடுதியிலிருந்து தப்பியோடியுள்ளார். வைத்தியசாலையின் பணிப்பாளர் தெரிவித்ததையடுத்து பொலிஸார் அவரை தேடிவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பான மேலதிக விசாரணையினை யாழ்.பொலிஸார் மற்றும் சிறைச்சாலைஉயரதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.
மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 ஆம் பிட்டி கிராமத்திற்குச் செல்லும் பிரதான வீதிக்கு அருகில் இராணுவ முகாம் அமைப்பதற்கான காணியினை மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் வழங்கியுள்ள நிலையில் குறித்த காணி நில அளவீடு செய்யும் நடவடிக்கைகள் செவ்வாய்க்கிழமை இடம் பெற்றுள்ளது.
எனினும் நில அளவை செய்யப்பட்ட குறித்த காணி இராணுவத்திற்கு வழங்க வேண்டாம் எனவும்,குறித்த நடவடிக்கையினை உடனடியாக நிறுத்தக்கோரியும் தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற...
நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்
நுவரெலியாவிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ள பெருந்தோட்ட அபிவிருத்தி அமைச்சர் நவீன் திசாநாயக்க மற்றும் வீடமைப்பு அமைச்சர் சஜீத்பிரோமதாச ஆகியோர் பயணித்த உலங்கு வானூர்தி அனர்த்தத்தினால் மரக்கரி தோட்டத்தில் அவசரமாக தரையிரக்கப்பட்டது.
வருமானம் குறைந்த 850 குடும்பங்களுக்கு வீடமைப்பு திட்டத்திற்கான 1100 மில்லியன் ரூபாய் நிதியொதுக்கீட்டில் காசோலைகள் பகிர்ந்தளிக்கும் நிகழ்வில் கலந்துகொள்வதற்காக இன்று நுவரெலியா சினிசிட்டா மண்டபத்திற்கு வருகை தந்தபோதே குறித்த சம்பவம் நடந்துள்ளது.
கொழும்பிலிருந்து நுவரெலியாவிற்கு வருகை...
மாணவர்களை இலக்கு வைத்து இராணுவத்தினரும் பொலிசாரும் நடாத்திய அராஜகம் வன்முறைகளை மக்கள் வன்மையாக கண்டிக்கிறார்கள். இத்தாக்குதல்கள் மாணவர்கள் மீதான தாக்குதல்கள் மட்டுமன்றி அனைத்து தமிழ் மக்களையும் அச்சுறுத்தி அடக்கி வைத்திருப்பதற்கான கொடூரத் தாக்குதல்களாகும். தமிழ் மக்கள் மீதான பேரினவாத இராணுவ ஒடுக்குமுறை நீடிக்கப்பட்டு வருவதையே இது எடுத்துக் காட்டுகின்றது. மேலும் இலங்கையில் வெளியார் தலையீடுகள் ஏற்பட வழிதிறந்து விடுகின்றது.
முள்ளிவாய்க்காலில் இலங்கை அரசு தமிழ் மக்களை இனப்படுகொலை செய்து இன்று...
அமெரிக்காவின் நீயூ ஜெர்சி நகருக்கு செல்ல வேண்டிய எயார் இந்தியா விமானம் இன்று கஜகஸ்தானில் வைத்து அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.
எயார் இந்திய விமான நிறுவனத்திற்கு சொந்தமான ஏ.ஐ. 191 பயணிகள் விமானம், பயணிகளுடன் மும்பையில் இருந்து இன்று அதிகாலை 2.25 மணிக்கு அமெரிக்காவில் உள்ள நியூ ஜெர்சி நகருக்கு புறப்பட்டது.
நடுவானில் பறந்து கொண்டிருந்த போது விமானத்தில் இருந்து தீ எச்சரிக்கை சமிக்ஞை திடீர் என ஒலித்ததால் முன்னெச்சரிக்கையாக விமானம் கஜகஸ்தான்...
மன்னாரில் சுமார் ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெரோயின் போதைப்பொருளுடன் நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மன்னார் கட்டையடம்பன் பகுதியில் வைத்து சந்தேகநபர் நேற்று மாலை கைது செய்யப்பட்டதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு அதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதயகுமாரசிங்கம் கௌசிகன் தெரிவித்தார்.
மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் மூலம் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரிடமிருந்து முதலில் 723...
கொழும்பு - பேலியகொட பாலத்திற்கு கீழே சுமார் ஒரு மணி நேரமாக சடலம் ஒன்று மிதந்து கொண்டு இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
பேலியகொட பாலத்தின் வழியே கடந்து செல்லும் பலர் இன்று காலையிலிருந்து குறித்த சடலத்தை பார்வையிட்டுச் செல்வதுடன், புகைப்படங்களையும் எடுக்கின்றனர்.
ஆனால் மேற்கொண்டு எடுக்க வேண்டிய எந்த நடவடிக்கைகளையும் எடுத்ததாக தெரியவில்லை.
இது குறித்து பேலியகொட பொலிஸாரிடம் வினவியபோது,
“குறித்த சம்பவம் பற்றி எங்களுக்கு எதும் தெரியாது என்றும், எந்தத் தகவல்களும் இதுவரை எமக்கு...
கொழும்பு - ஆமர் வீதியில் விடுதி ஒன்றில் இருந்து இனந்தெரியாத நபர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
ஐந்து நாட்கள் கடந்த நிலையிலும் சடலம் உள்ளே இருப்பதை யாரும் அறிந்திருக்கவில்லை. எனினும் இன்று காலை குறித்த இடத்தில் துர்நாற்றம் வீசுவதாக பொலிஸாருக்கு தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து குறித்த இடத்திற்கு விரைந்த ஆமர்வீதி பொலிஸார் மேலதிக நடவடிக்கைகளை எடுத்துள்ளனர்.
குறித்த நபரை அடையாளம் காண்பதற்காக அவருடைய அடையாள அட்டையைின் பிரதியை ஊடகங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாக...