தெற்காசிய நாடுகளுள் இந்து சமுத்திரத்தின் முத்து என வர்ணிக்கப்படும் இலங்கையானது சிங்களவர், தமிழர், முஸ்லிம், இந்தியத்தமிழர், கிறிஸ்தவர்கள் மற்றும் பறங்கியர் வாழும் அழகிய நாடாகும். இங்கு பெரும்பான்மையாக சிங்களவர்களும் ஏனைய இனத்;தவர்கள் சிறுபான்மையாகவும் வாழ்ந்து வருகின்றனர். இச் சிறுபான்மை இனத்தவர்களில் முஸ்லிம்கள் அண்மைய சனத்தொகைக் கணக்கெடுப்பின் படி 9.4% ஆக காணப்படுகின்றனர். இலங்கையில் முஸ்லிம்களின் பூர்வீகமானது மிகவும் பழமை வாய்ந்ததாகவே காணப்படுகின்றது. இலங்கைக்கு அரேபியர்கள் வணிக நோக்கத்தினடிப்படையிலும், ஆதம் மலையை...
உலகில் எங்கு போனாலும் நம் அம்மாவின் கைவண்ணம் வரவே வராது என்று சொல்பவர்கள் ஏராளம். ருசியை மட்டுமின்றி பாசத்தையும் கலந்து பரிமாறுபவர்கள் அம்மா மட்டுமே, இவர்களுக்கு சில டிப்ஸ். ரசம் அதிகமாக கொதிக்ககூடாது. காபிக்கு பால் நன்றாக காயக்கூடாது. மோர்க்குழம்பு ஆறும் வரை மூடக்கூடாது. கீரைகளை மூடிப்போட்டு சமைக்கக்கூடாது. காய்கறிகளை ரொம்பவும் பொடியாக நறுக்கக்கூடாது. சூடாக இருக்கும் போது, எலுமிச்சம்பழம் பிழியக்கூடாது. தக்காளியையும், வெங்காயத்தையும் ஒன்றாக வதக்கக்கூடாது. பிரிட்ஜில்...
விஜய்யின் அப்பா எஸ்.ஏ. சந்திரசேகர் அவர்கள் கார் விபத்தில் சிக்கியிருப்பதாகவும், அதனால் அவருக்கு தலை மற்றும் முதுகெலும்பில் காயம் ஏற்பட்டுள்ளதாகவும் நேற்று தகவல்கள் வெளியானது. ஆனால் உண்மையில் அவர் கார் விபத்தில் சிக்கவில்லை. கேரளாவில் தான் தங்கியிருந்த ஒரு ஹோட்டலில் கால் வழுக்கி கீழே விழுந்திருக்கிறார். இதனால் காயம் ஏற்பட்டதால் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். தற்போது குணமடைந்திருப்பதாகவும், இன்று சென்னை திரும்பிவிடுவார் என்றும் கூறப்படுகிறது.
தமிழ் சினிமாவில் காமெடியனாக கலக்கி வருபவர் சதீஷ். இவர் சமீபத்தில் நடந்த விருது நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நான் உங்களுக்காக அந்த படத்தை எட்டு முறை பார்த்தேன். உங்களை அவ்வளவு பிடிக்கும் என ஒரு நடிகையை பார்த்து கூறினார். இந்த விழாவில், ப்ரேமம் படத்திற்காக சிறந்த அறிமுக நடிகை விருதை வாங்கிய சாய் பல்லவியை பற்றி தான் பேசியுள்ளார் அவர். என்ன சொன்னார் என வீடியோவில் நீங்களே பாருங்கள்.. advertisement
இயக்குனர் விஜய், நடிகை அமலாபால் இருவரும் விவாகரத்து பெற பல காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. தங்களின் பிரிவிற்கு இதுதான் காரணம் என்று விஜய் கூறியிருந்தாலும் பல செய்திகள் உலாவிக் கொண்டுதான் இருக்கிறது. இந்நிலையில், இவர்களின் விவாகரத்துக்கு முழு காரணம் அமலாபாலின் அம்மா தான் என்று சொல்லப்படுகிறது. அவரின் பேச்சை கேட்டு அமலாபால் நடந்ததால் இத்தனை விளைவுகள் என்றும் கூறப்படுகிறது.
  இலங்கையில் பல வருடங்களாக ஈழ தமிழர்கள் தனி நாடு. தனி ஈழம் கேட்டு அகிம்சை முறையாகவும், ஆயுத முறையாகவும், போராடி வந்தார்கள். உண்மைலையே இலங்கை யாருக்கு சொந்தமானது. சில தமிழர்களுக்கும் வெளிநாட்டவருக்கும் ஒரு கேள்வி இருக்கிறது. சிங்களவர்கள் பெருபான்மையாக வசிக்கும் இலங்கையில். சிறுபான்மையாக வாழும் தமிழர்கள் தனி நாடு கேட்டு பல ஆண்டுகளாக சண்டை போட்டு கொண்டு இருக்கிறார்கள். வெளியில் இருந்து வந்து குடியேறியவர்கள் தானே தமிழர்கள் இவர்கள் எப்படி...
கிழக்கு பல்கலைக்கழகத்தில் சிங்கள மாணவர்கள் இன்று காலை சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். இதனால் குறித்த பகுதியில் சற்று பதற்ற நிலை காணப்படுகின்றது. மேலும் இது தொடர்பாக தெரிய வருவதாவது, கிழக்கு பல்கலைக்கழகத்தில் கடந்த தினங்களில் 28 மாணவர்கள் பல்கலைக்கழக கல்வி நடவடிக்கைகளில் இருந்து இடை நிறுத்தப்பட்டிருந்தனர். இதை கண்டிக்கும் விதமாகவே குறித்த சத்தியாக்கிரகப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்று காலை ஒன்று கூடிய மாணவர்கள் பல்கலைக்கழக வளாகத்தில் (செனட்) முன்பாக ஒன்றுகூடி ஒலிவாங்கியினூடாக...
யாழ்ப்பாணம் பலாலியில் மீள்குடியேற்றம் செய்யப்படாத பகுதியில் உள்ள புனித ஆரோக்கிய மாதா ஆயல வருடாந்த பெருநாளைக் கொண்டாட பலாலி பாதுகாப்பு படைத்தலைமையகம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 26 வருடங்களுக்கு மேலாக அப்பகுதி மக்கள் இடம்பெயர்ந்து மக்கள் பல்வேறு பகுதிகளிலும் வசித்து வருகின்றார்கள். இந்நிலையில் பலாலி வடக்கு ஜே. 254 கிராம சேவையாளர் பிரிவில் உள்ள 1500 குடும்பங்கள் புனித ஆரோக்கிய மாதா ஆலய வருடாந்த திருநாள் திருப்பலி ஆவணி மாதம் 29...
  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச்செயலர் வில்லியம் ஈ ரொட், சிறிலங்கா அரசாங்க மற்றும் சிவில் சமூகப் பிரதிநிதிகளுடன் முக்கிய பேச்சுக்களை நடத்தினார். நேற்றுக்காலை கொழும்பில் சிறிலங்காவின் முன்னாள் அதிபரும், நல்லிணக்கப் பொறிமுறைகளுக்கான செயலகத்தின் தலைவருமான சந்திரிகா குமாரதுங்கவை, வில்லியம் ரொட் மற்றும் அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் ஆகியோர் சந்தித்துப் பேசினர். இதன் பின்னர், சிறிலங்காவின் ஜனநாயக மறுசீரமைப்புகளை...
'முன்னாள் போராளிகளுக்குத் தேவையான அடிப்படை மற்றும் சிறப்புப் பரிசோதனைகள் ஆய்வுகள் என்பன வடக்கின் ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள பொது வைத்தியசாலைகளிலும், தெரிவுசெய்யப்பட்ட ஆதார வைத்தியசாலைகளிலும் முன்னெடுக்கப்படவுள்ளன. இதனைச் சிறப்பாக பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவர்கள் மேற்கொள்ளவுள்ளனர். 'இவ்வாறு அறிவித்த வடக்கு மாகாண சுகாதார அமைச்சு, அனுப்பிவைக்கப்பட்ட செய்திக் குறிப்பிலேயே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டது.அந்தச் செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:- 'புனர்வாழ்வளிக்கப்பட்ட போராளிகளின் ஆரோக்கியம் தொடர்பில் எழுந்திருக்கும் அக்கறைகளையும் கரிசனைகளையும் கருத்திற்கொண்டு, அவர்களுக்கான சிறப்புமருத்துவக் கவனிப்பு நடைமுறையொன்றை...