நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த ராஜபக்ச நல்லாட்சியை எதிர்க்கும் செயற்பாடுகளில் தான் முன்னிலை வகிக்காமல் இன்னொருவரை சார்ந்து நிற்கப்போகின்றார் என்பது அவரின் உரைமூலமாக தெளிவுபடுகின்றது. இது வரைக்காலமும் மஹிந்த ராஜபக்ச தற்போதைய ஆட்சிபற்றி குறை கூறிக்கொண்டு வந்தார். நேரடியாகவே நல்லாட்சியை எதிர்க்கும் செயற்பாடுகளை செயற்படுத்தி வந்தவர். இறுதியில் சுதந்திர கட்சியில் அல்லது கூட்டு எதிர்கட்சியின் மூலம் நல்லாட்சியினை எதிர்க்க முடியாது என்ற காரணத்தினால் புதிய கட்சி ஆரம்பிக்கும் செயற்பாடுகளை தொடர்ந்தும் மேற்கொண்டு வந்தார். இதற்காக...
கர்நாடகாவில் ரயில்வே பிளாட்பாரத்தில் பெற்றோர்கள் மர்மமான முறையில் இறந்து கிடப்பதை அறியாமல் அவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த 3 வயது சிறுவனின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடகாவின் கதக் மாவட்த்தை சேர்ந்த ஈரன்ன தல்வர், அவரது மனைவி மஞ்சுளா மற்றும் 3 வயது சிறுவன் தேவராஜ் ஆகியோர் முனிராபாத்தில் உள்ள ஹுளிகம்மா கோவிலுக்கு சென்றுள்ளனர். அங்கு தரிசனம் முடித்துவிட்டு வீடு திரும்புவதற்காக முனிராபத் ரெயில் நிலையத்தில் தூங்கியுள்ளனர். மறுநாள் காலையில் சிறுவன் எழுந்தும்...
ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள அமெரிக்க பல்கலைகழகம் ஒன்றில் குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தாக்குதலில் பல்கலைகழத்தின் கட்டிடத்தை தாக்கியதாகவும், துப்பாக்கி ஏந்திய நபர் சுடும் சப்தமும் கேட்டதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன. குண்டுவெடிப்பு மற்றும் துப்பாக்கித் தாக்குதலால், பல்கலைகழகத்தின் மதில் சுவர், வெடிச் சத்தத்தில் அதிர்ந்தது, தாக்குதல்தாரி அதிரடியாக உள்ளே நுழைந்து தாக்குதல் நடத்தியபோது பல மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் உள்ளே இருந்தனர். சம்பவ இடத்தில் சில...
வடக்கின் சில பௌத்த மத வழிபாட்டுத் தளங்களை அகற்றுவதற்கு வட மாகாண சபை எடுத்துள்ள தீர்மானம் அநீதியானது என வட, கிழக்கு மாகாணங்களுக்கான பிரதான மாநாயக்கர் சியம்பலகஸ்வௌ விமலசார தேரர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அரசாங்கத்திற்கும், பௌத்த மாநாயக்க தேரர்களுக்கும் எழுத்து மூலம் அவர் அறிவித்துள்ளார். வடமாகாணசபையின் இந்த தீர்மானம் நாட்டில் தேவையற்ற பிரச்சினைகளை உருவாக்கும் என அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமருக்கும் அறிவித்துள்ளார். வடக்கில் 13 பௌத்த விஹாரைகள் காணப்படுவதாக வட...
நீதிமன்றம் மிகவும் மரியாதைக்கு உரிய இடமாகவே கருதப்படுகின்றது. இந்த நிலையில் இரண்டு பெண்கள் நீதிமன்றத்திற்கு உள்ளேயே ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டுள்ளனர். இவ்வாறு தாக்கிக் கொண்ட இரண்டு பெண்களையும் கைது செய்து விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொழும்பு நீதிமன்றில் இந்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளது. கொழும்பு நீதிமன்ற நீதவான் ஒகஸ்டா அதபத்து, குறித்த பெண்களுக்கான விளக்க மறியல் உத்தரவினை பிறப்பித்துள்ளார். குறித்த இரண்டு சந்தேகநபர்களையும் நாளை வரை...
வவுனியா, குடியிருப்பு, கலாசார மண்டபத்தில் கடந்த 26 வருடங்களுக்கு மேலாக இயங்கி வந்த இராணுவ முகாம் இன்று உத்தியோக பூர்வமாக வவுனியா மாவட்ட அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்டது. இது குறித்த நிகழ்வு இன்று மாலை 3 மணிக்கு இடம்பெற்றது. இதன்போது செய்தி சேகரிக்க சென்ற ஊடகவியலாளர்களுக்கு இராணுவத்தினர் அனுமதி மறுத்துள்ளனர். இது தொடர்பாக வவுனியா மாவட்ட பிரதேச செயலாளருடன் தொடர்பு கொண்டு ஊடகவியலாளர்களுக்கு அனுமதி பெற்றுத்தருமாறு கோரிக்கை விடுக்கப்பட்ட கோதும், அனுமதி...
  ஒடிசாவில் கணவர் ஒருவர், நோயால் உயிரிழந்த மனைவியின் உடலை மருத்துவமனையிலிருந்து வீட்டிற்கு சுமந்தே சென்ற சம்பவம் நடந்துள்ளது. Kalahandi பகுதியை சேர்ந்தவர் மஜ்கி, காசநோயால் பாதிக்கப்பட்ட அவரது மனைவி Amang Dei (42-வயது) மாவட்ட அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். வறுமையில் இருந்த மஜ்யிடம் மருத்துவமனை ஊழியர்கள் இலவச அமரர் ஊர்திக்கு கட்டணம் கேட்டுள்ளனர். இதனையடுத்து அவர் தனது 12 வயது மகளுடன், மனைவி உடலை சுமந்த படியே 60 கி.மீ தொலைவில் உள்ள...
யாழ். சாவகச்சேரி பேரூந்து நிலையத்துக்கு முன்பாக இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் அதிஷ்டவசமாக உயிர்தப்பியுள்ளார். இந்த விபத்து இன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மோட்டார் சைக்கிள் ஒன்றும் தனியார் பேரூந்து ஒன்றும் நேருக்கு நேர் மோதிக்கொண்டமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இந்த விபத்தின் போது மோட்டார் சைக்கிள் பாரியளவு சேதமடைந்துள்ள போதிலும், அதில் பயணித்தவர் அதிஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார். சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.  
கிளிநொச்சி மாவட்டம், வன்னேரிகுளமானது இயற்கை அம்சங்களை கொண்ட ஒரு அழகிய கிராமமாகும். விவசாய கிராமமான இந்த கிராமத்தில் அழகிய மரங்கள், பறவைகள், யானைகள், மலைகள் என பல இயற்கை அம்சங்கள் நிறைந்து காணப்படுகின்றது. எனவே, இந்த கிராமத்தில் பௌதீகதளமொன்றை அமைக்க வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தா கோரிக்கை விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இவ்வாறு சுற்றுலா தளமொன்றை அமைக்கும்போது...
பயங்கரவாத தடைச் சட்டத்தினை நீக்க கோரி எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் முன்வைத்துள்ள பிரேரணைக்கு தமிழ்த் தேசியக் கூட்மைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இது குறித்த பாராளுமன்றத்தில் கருத்து தெரிவித்த கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் இவ்வாறு கூறியுள்ளார். பயங்கரவாத தடைச் சட்டமானது எமது நாட்டில் என்ன செய்துள்ளது என்பதை நாம் சற்று பின்நோக்கி சென்று பார்க்க வேண்டிய தேவையுள்ளது. பயங்கரவாத தடைச் சட்டம் இலங்கையில் கொண்டு வரப்பட்ட பின்னர் இந்த நாடு...