நெடுங்கேணி தெற்கு கிராம சேவகர் பிரிவிலும், சூடுவிழுந்தான் கிராமத்திலும் இரவு வேளைகளில் காட்டு யானைகள் புகுந்து விவசாயச் செய்கையான வாழை, தென்னை, கத்தரி, சோளம், கச்சான், மரவள்ளி, பப்பாசி போன்ற பயிர்ச்செய்கைகளை காட்டு யானைகள் இரவு வேளைகளில் தொடர்ச்சியாகச் சேதப்படுத்தி வருகின்றன. இதனைக் கட்டுப்படுத்த முடியாமல் விவசாயிகள் பெரும் இன்னல்களுக்கு முகங்கொடுத்துவரும் நிலையில்; அதிகாரிகள் மட்டத்தில் எடுக்கப்பட்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிவடைந்ததாகக் குற்றஞ்சுமத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. கோபிகா, புளியங்குளம்.
மட்டக்களப்பின் சித்தாண்டியில் கடத்தப்பட்டு காணாமல்போனவர்களை நினைவு கூரும் நிகழ்வு இன்று புதன்கிழமை காலை சித்தாண்டியில் நடைபெற்றது. சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை இந்த நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றது. இதனையொட்டி சித்தாண்டி சந்தியில் இருந்து காணாமல்போனவர்களின் உறவினர்களின் ஊர்வலம் சித்தாண்டி சித்திரவேலாயுதர் ஆலயம் வரையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களான கோவிந்தன் கருணாகரம்,மா.நடராஜா மற்றும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன்,காந்திசேவா சங்க தலைவர் க.செல்வேந்திரன் ஆகியோர் கலந்துகொண்டனர். 1990 ஆண்டு...
வவுனியாவில் கடந்த 25.07.2016 தொடக்கம் தேசிய உணவு பாதுகாப்பு வாரம் இடம்பெற்று வருவதாகவும் உணவு கையாளும் நிலையங்களிலுள்ள சுகாதார சீர்கேடுகளை இனங்கண்டு அவர்களுக்கு அறிவுறுத்துவதும் சீர்கேடான உணவகங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் வவுனியா பொது சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர். அந்தவகையில் கடந்தவாரம் வவுனியாவில் பட்டாணிச்சூர் பகுதியிலுள்ள சீர்கேடான முறையில் இயங்கிவந்த மூன்று உணவகங்கள் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வவுனியா மாவட்ட நீதவான்...
 ஆண்களுக்கான மாரத்தான் ஒலிம்பிக் போட்டியில் எத்தியோப்பியாவைச் சேர்ந்த ஃபெயிசா லிலேசா வெள்ளிப் பதக்கம் வென்றார். எல்லைக் கோட்டைத் தொடுவதற்குச் சில அடிகள் தூரத்திலிருந்து தன் இரு கைகளையும் தலைக்கு மேல் குறுக்காக வைத்தபடி ஓடினார். பதக்கம் வாங்கும்போதும் அதே சைகையைச் செய்தார். எத்தியோப்பியாவில் நடைபெற்றுவரும் அரசியல் சூழ்நிலைகளுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாகவும் மக்களின் போராட்டம் உலகின் கவனத்துக்கு வரவும் இந்த நடவடிக்கையை மேற்கொண்டார் ஃபெயிசா. ‘‘எங்கள் நாட்டில் மிக...
சிறுவயதில் நாம் வானில் உள்ள நட்சத்திரங்களை எண்ண முயற்சி செய்து தோற்றுப் போயிருப்போம்? அவை தோன்றி தோன்றி மறைந்துவிடும், இது ஏன் என்று உங்களுக்கு தெரியுமா? சாதாரணமாக நாம் நெருப்பு புகையின் ஊடே பார்த்தால், எதிர்ப்பக்கத்தில் நடக்கும் காட்சிகள் அசைவது போன்று நமக்குத் தென்படும் அல்லவா? நெருப்புப் புகை உள்ள பகுதியில் காற்று அமளிதுமளியாக இருக்கும். இதனால் ஒளியானது நெருப்பு புகையின் ஊடே, அமளிதுமளியான காற்றில் கடந்து செல்லும் போது, ஒளியின்...
ஐரோப்பாவில் காணப்படும் மிகவும் வயதான அல்லது முதிய மரம் என்று கருதப்படும் மரம் ஒன்றினை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். Bosnian pine (Pinus heldreichii) எனும் இம் மரம் கிறிஸ்துக்கு பின் 941ம் ஆண்டளவில் இருந்து காணப்படுகின்றதாக அவர்கள் கருதுகின்றனர். இதன்படி தற்போது குறித்த மரத்தின் வயது 1,075 ஆண்டுகள் என தெரிவிக்கப்படுகின்றது. ஸ்வீடன் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இம் மரம் ஏறத்தாழ 1 மீற்றர்கள் விட்டம் கொண்டதாக காணப்படுகின்றது.
சோலார் படலங்களிலிருந்து நேரடியாக மின்சக்தியை பெறும் முறை பற்றி அதிகம் கேள்விப்பட்டிருப்பீர்கள். ஆனால் அதே சோலார் படலங்களைப் பயன்படுத்தி சூரிய ஒளியை நீராவியாக்கி அதிலிருந்து மின் உற்பத்தி செய்யும் பிறிதொரு முறையும் காணப்படுகின்றது. எனினும் இம்முறையானது வினைத்திறன் குறைந்த முறையாகவே இத்தனை காலமும் இருந்து வந்துள்ளது. ஆனால் தற்போது இதன் வினைத்திறனை 97 சதவீதம் வரை அதிகரித்து அவுஸ்திரேலிய தேசிய பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உலக சாதனை படைத்துள்ளனர். சூரிய படலத்தைக் கொண்ட மிகப் பிரம்மாண்டமான...
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுத் திரும்பியவர்களுக்கும் மத்திய அரசின் விருதுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. ' இந்த ஆண்டாவது அர்ஜுனா விருது கிடைக்கும் என நம்பிக்கையோடு இருந்தேன். 16 ஆண்டுகளாக நாட்டுக்காக விளையாடியும் எங்களை அங்கீகரிக்க மறுப்பது ஏன்?' எனக் கொதிக்கிறார் இந்திய கூடைப்பந்து பெண்கள் அணியின் கேப்டன் அனிதா பால்துரை. சென்னையைப் பூர்வீகமாகக் கொண்ட அனிதா பால்துரை, இந்திய கூடைப்பந்து பெண்கள் அணியின் தவிர்க்க முடியாத வீராங்கனை. உலகின் மிகச்சிறந்த பத்து...
கண்டியில் அமைந்துள்ள கொழும்பு சர்வதேச கல்லூரியில் கல்வி பயிலும் வைஷின்யா பிரேமானந் தனது 9 வது வயதில் இணையத்தளம் ஒன்றை வடிவமைத்தது இந்நாட்டின் இளம் இணையத்தள வடிவமைப்பாளராக சாதனை புரிந்துள்ளதுடன் தகவல் தொழில்நுட்பம் தொடர்பான BCS (Bachelor of Computer Science) பட்டத்தை தனது 11வது வயதில் பூர்த்தி செய்துள்ளார். வைஷின்யா பிரேமானந் தனது பெற்றோர்களுடன் இன்று முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்களை சந்தித்தார்....
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூதீனின் உடற்பாகங்கள் காணாமல் போனமைக்கு தான் எந்த விதத்திலும் பொறுப்பில்லையென முன்னாள் பிரதான சட்ட மருத்துவ அதிகாரி ஆனந்த சமரசேகர தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தன்னை கைது செய்ய எடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு எதிராக அவர் முன் பிணை கோரியுள்ளார். இவரின் இந்த முன் பிணை மனுவை எதிர்வரும் 30ம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ள கொழும்பு நீதிமன்றம் முடிவு செய்துள்ளது. தாஜுதீனின் சடலத்தின் உடல் பாகங்கள் காணாமல்...