அரசாங்கத்தினால் வற் வரி அதிகரிப்பு குறித்த சட்டமூலம் நாடாளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது. இந்த சட்டத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சட்டத்தை ரத்து செய்வதாக உச்ச நீதிமன்றம் அறிவித்திருந்தது. இதனைத் தொடர்ந்து, நேற்று குறித்த வற் வரி அதிகரிப்பு குறித்த சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்வதாக அவைத் தலைவர் லக்ஷ்மன் கிரியல்ல அறிவித்துள்ளார். இந்த சட்டம் எதிர்வரும் நாட்களில் விவாதம் செய்வதற்காக நாடாளுமன்ற நிகழ்ச்சி நிரலில் உள்ளடக்கப்பட்டிருந்தது. உச்ச நீதிமன்றில் ரத்து செய்யப்பட்ட...
தபால் திணைக்களத்துக்கு சொந்தமான பெறுமதியான ஆறு வாகனங்கள் கைவிடப்பட்ட நிலையில் இருப்பதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டியுள்ளன இலங்கை தபால் திணைக்கள ஊழியர் சங்கம் நேற்று இது தொடர்பில் செய்தியாளர் சந்திப்பொன்றை நடத்தி விளக்கமளித்துள்ளது. தற்போதைய நிலையில் குறித்த ஆறு வாகனங்களும் தபால் திணைக்களத்தின் தலைமை அலுவலகத்தில் கைவிடப்பட்ட நிலையில் சேதமடையத் தொடங்கியுள்ளன. இவற்றின் பெறுமதி ஒன்றரைக் கோடி ரூபாவுக்கும் அதிகம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது. குறித்த வாகனங்களின் பெறுமதியான உதிரிப்பாகங்களை பல்வேறு நபர்கள் திருட்டுத்தனமாக...
பம்பலப்பிட்டியில் 29 வயதான இளம் வர்த்தகர் ஒருவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் 15 வர்த்தகர்களிடம் பொலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர். காணாமல் போன வர்த்தகருடன் கொடுக்கல் வாங்கல் செய்தவர்கள் மற்றும் நண்பர்களிடம் இவ்வாறு விசாரணை நடத்தப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இடம்பெற்ற கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாடுகள், வழக்குகள் குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. வர்த்தகருடன் முரண்பாட்டை ஏற்படுத்திக் கொண்ட நபர்களிடம் இன்று விசாரணை நடத்தப்பட உள்ளது. வர்த்தகர் கடத்தப்பட்ட இடத்தில் காணப்படும் சீ.சீ.ரீ.வி...
காணாமல் போனோர் தொடர்பான அலுவலக அமைப்பு சட்டத்தில் மேலும் திருத்தங்களை உள்வாங்குவது குறித்து அரசாங்கம் பரிசீலிக்கவேண்டும் என்று சபாநாயகர் கரு ஜெயசூரிய கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று (23) இந்தக்கோரிக்கையை அவர் விடுத்துள்ளார். இந்த சட்டத்தில் மேலும் சில திருத்தங்களை கொண்டுவரவேண்டும் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு, ஜே.வி.பி உட்பட்ட கட்சிகள் கோரியுள்ளன. எனவே அவற்றுக்கு இடம்தரும்வகையில் அரசாங்கம் இதனை பரிசீலிக்கவேண்டும் என்று சபாநாயகர் கோரியுள்ளார். எனினும் குறித்த சட்டம் உரியவகையில் நடைமுறைக்கு வந்துள்ளது என்பதில் மாற்றுக்கருத்தில்லை...
புனர்வாழ்வுப் பெற்ற முன்னாள் விடுதலைப்புலி போராளிகளுக்கு விஷ ஊசி போடப்பட்டுள்ளதா என்பது தொடர்பில் பரிசோதனை செய்ய அமெரிக்க வைத்திய குழுவை வடக்கிற்கு செல்ல அனுமதிப்பதானது இலங்கையின் நெறிமுறைகள் மற்றும் விதிகளை மீறும் செயல் என்று தேசிய பல்கலைக்கழக பேராசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது. உள்நாட்டு விடயங்களில் அனுமதியில்லாமல் மற்றுமொரு நாட்டு வைத்திய குழு தலையிடுவதற்கு இடமளிக்கக் கூடாது என்றும் இந்த சங்கத்தின் செயலாளர் கலாநிதி சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார். மேலும், சுகாதார அமைச்சானது...
நல்லூர் ஆலய சூழலில் செருப்புடன் நடமாடிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில்  பத்தாயிரம் ரூபா பெறுமதியான சொந்தப் பிணையில் செல்ல நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 8ஆம் திகதி நல்லூர் ஆலய உற்சவம் ஆரம்பமாகி வெகு சிறப்பாக இடம்பெற்று வருக்கின்றது. இந்நிலையில் ஆலய சூழலில் காலணிகளுடன் நடமாட வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. எனினும், நேற்று இரவு செருப்புடன் இருவர் ஆலய சூழலில் நடமாடியுள்ளனர். இதன் போது சிவில் உடையில் இருந்த...
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸவின் கொழும்பு 07, விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள ஆடம்பரமான உத்தியோகப்பூர்வ இல்லத்தில் மின்உயர்த்தி (lift) வாங்குவதற்காக இரண்டு நாடுகளில் உள்ள நலன் விரும்பிகள் உதவி செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. குறித்த அந்த வீட்டில் மைத்திரிபால சிறிசேன 6 மாதங்களுக்கு மேலாக வசித்து வந்தார். பின்னர் ரூபா 40 மில்லியன் செலவில் குறித்த வீடு புதுப்பிக்கப்பட்டு மகிந்தவிடம் வழங்கப்பட்டது. எவ்வாறாயினும்,அண்மையில் மகிந்த ஜப்பானுக்கு விஜயம் செய்திருந்த போது தன்னுடைய உத்தியோகப்பூர்வ...
எந்த நேரத்திலும் நாடு பூராகவும் உள்ள அரச வைத்தியர்கள் வேலைநிறுத்தத்திற்கு தயாராக இருப்பதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதற்கான அனுமதியை தமது சங்கத்தின் மத்திய குழு வழங்கியுள்ளதாக சங்கம் குறிப்பிட்டுள்ளது. சுகாதார திணைக்களத்துக்கு புதிய பணிப்பாளரை நியமித்தல், தேசிய வைத்தியசாலைக்கு பிரதி பணிப்பாளரை நியமித்தல் உள்ளிட்ட சுகாதார அமைச்சின் பல திட்டங்களுக்கு எதிராகவே இந்த அறிவிப்பை அரச வைத்தியர் சங்கம் வெளியிட்டுள்ளது. அதற்கமைய சங்கத்தின் செயற்குழுவினால் குறிப்பிடப்படும் திகதியில் வேலைநிறுத்தத்தில்...
கடத்தப்பட்ட வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் தொடர்பில் தகவல் வழங்குவோருக்கு 5 மில்லியன் வழங்குவதாக அவரது தந்தை அறிவித்துள்ளார். பம்பலப்பிட்டியில் நேற்று முன்தினம் வர்த்தகர் மொஹமட் சாகீப் சுலைமான் கடத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் இவரின் தந்தை சுலைமான் ஈசா இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தால் அறிவிக்குமாறும் வேண்டுகோள்விடுத்துள்ளார். மேலும், இவர் தொடர்பான தகவல்கள் தெரிந்தவர்கள் 0770101971 என்ற இலக்கத்தக்கு தொடர்பு கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் கோப்புகளை எடுத்து சென்ற ”பைல் அக்கா” என்ற அழைக்கப்பட்ட பெண் ஒருவர் அந்த காலப்பகுதிகளில் அதிகமாக பேசப்பட்ட ஒருவராவார். பைல் அக்கா என்று அழைக்கப்பட்டதற்கு அவரது பெயர் அயேஷா மதுஷானியாகும். அவர் இலங்கையின் இளம் தலைமுறையின் புகைப்பட கலைஞராகும். அந்த நாட்களில் அவரை மஹிந்த மாத்திரம் அல்ல நாமல் ராஜபக்ஷவையும் தெரியாதென அயேஷா தெரிவித்திருந்தார். தொழிலுக்காக தான் மேடையில் ஏறியதாக...