உபாலி தென்னக்கோன் தாக்குதல் சந்தேகநபரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
Thinappuyal -0
ரிவிர பத்திரிகையின் முன்னாள் பிரதம ஆசிரியர் உபாலி தென்னகோன்மீது தாக்குதல் நடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள இராணுவப் புலனாய்வு உத்தியோகத்தரின் விளக்கமறியல் காலம் எதிர்வரும் 29ஆம் திகதி வரையில் நீடிக்கப்பட்டுள்ளது.
சண்டே லீடர் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியர் லசந்த விக்ரமதுங்க படுகொலை தொடர்பிலும் குறித்த சந்தேக நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில், உபாலி தென்னக்கோன் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் குறித்து நேற்று...
மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புரோன்ஸ் வீக் சின்னதோட்டத்தைச் சேர்ந்த இளைஞர்களும், பொதுமக்களும் தோட்ட பகுதிகளில் சில குழுவினர் மது அருந்திவிட்டு திருவிழாக்களின்போதும் ஏனைய விசேட நிகழ்வுகளின்போதும் குழப்பம் விளைவிக்கின்றனர். இவ்வாறு குழப்பம் விளைவிக்கும் நபர்களுக்கெதிராக பொலிஸார் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து கடந்த 22-8-2016 திங்கட்கிழமை அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். இது தொடர்பாகத் தெரியவருகையில் மஸ்கெலியா புரோன்ஸ்வீக் சின்னதோட்டத்தில் கோவில் திருவிழாக்களோ வேறு எந்த விழாக்களோ...
மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்த நால்வர் கைது
Thinappuyal -
காலாவதியான மற்றும் பாவனைக்குதவாத உணவுப்பொருட்களை விற்பனை செய்த வர்த்தகர்கள் நால்வர் மட்டக்களப்பு-காத்தான்குடி பிரதேசத்தில் நேற்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
காத்தான்குடி பொது சுகாதார பரிசோதனை அதிகாரிகள் மற்றும் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே இவர்களை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
பாவனைக்குதவாத இனிப்பு வகைகள், போத்தல்களில் அடைக்கப்பட்ட குளிர்பானங்கள் என்பவையே காலாவதியான நிலையில் அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர்கள் இன்றைய தினம் மட்டகளப்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பகுதியில் மக்கள் நெரிசல் மிக்க பகுதியில் இன்று அதிகாலை 9 அடி நீளமான முதலையொன்று நுழைந்துள்ளது.
இதன் காரணமாக அந்த பகுதியில் உள்ள மக்கள் மத்தியில் ஒரு வித அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
வீதியில் பயணித்த ஒருவர் கிராமத்துக்குள் நுழைந்த முதலையினை கண்டு அப்பகுதி மக்களுக்கு தெரியப்படுத்தியுள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திற்கு பொலிஸார் விரைந்தனர்.
இதனையடுத்து வனவிலங்கு அதிகாரிகளுக்கு வழங்கிய தகவலையடுத்து, குறித்த பகுதிக்கு வருகைத்தந்த வெல்லாவளி வன...
நுவரெலியா மாவட்டத்தில் காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகளை வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஆக்கிரமிப்பதை எவ்விதத்திலும் அனுமதிக்க முடியாதென தொழிலாளர் தேசிய சங்கத்தின் தேசிய அமைப்பாளரும், மத்திய மாகாணசபை உறுப்பினருமான சோ.ஸ்ரீதரன் தெரிவித்தார்.
22.08.2016 நுவரெலியா மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசியபோதே இவ்வாறு அவர் தெரிவித்தார். அவர் மேலும் தோட்டத் தொழிலாளர்களுக்கு காணி மறுசீரமைப்பு ஆணைக்குழுவுக்குச் சொந்தமான காணிகள் வழங்கக்கூடாதென்று இங்கு பேசப்பட்டது. இதற்கு எனது எதிர்ப்பைத் தெரிவிக்கின்றேன். ஏழைத்...
நல்லூர் முருகன் ஆலயத்தின் வருடாந்த உற்சவம் கடந்த 8ஆம் திகதி ஆரம்பமான நிலையில் வெகு சிறப்பாக இடம்பெற்று வருக்கின்றது.
நல்லூரை நோக்கி நாட்டின் பல பாகங்களில் இருந்தும் பக்தர்கள் படையெடுத்துள்ள நிலையில், புதிய வடிவிலான ஜஸ்கிரீம் விற்பனை நிலையம் ஒன்று அங்கு அமைக்கப்பட்டுள்ளது.
புது வகையான உத்தியை கையாண்டு மக்களைக் கவரும் வகையில் விமான வடிவிலான ஜஸ்கிரீம் விற்பனை நிலையம் ஒன்று நல்லூர் ஆலய வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
மக்களை கவர்ந்திழுக்கும் அந்த விமானத்திற்குள்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் முக்கிய உறுப்பினர் உட்பட 10 பேர் வெகு விரைவில் கைது செய்யப்படவுள்ளதாக அரசியல் தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மத்திய மலைபகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகின்ற இந்த உறுப்பினருக்கு எதிராக சொத்து தொடர்பில் பல விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
அந்த விசாரணைகள் தொடர்பில் இந்த உறுப்பினரிடம் வாக்குமூலம் பெற்றுக் கொண்டுள்ள போதிலும், அவ்வளவு சொத்துக்கள் எவ்வாறு சாம்பாதித்தார் என்பதனை ஆதாரபூர்வமாக நிரூபிக்க தவறியுள்ளனர்.
ஏனைய உறுப்பினர்களில்...
வான்வெளியை உன்னிப்பாக அவதானிப்பதற்கு ஏதுவாக இரவு நேர முகாம் ஒன்றை இலங்கை கோள் மண்டலம் ஒழுங்கு செய்துள்ளது.
இதன்மூலம் நாட்டு மக்களின் வானியல் விஞ்ஞான அறிவை விருத்தி செய்வது பிரதான நோக்கமாகும். இதன்படி ஒவ்வொரு மாதமும் இறுதி வெள்ளிக்கிழமைகளில் இத்தகைய முகாமொன்றை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதன் முதலாவது நிகழ்வு எதிர்வரும் 26ம் திகதி இடம்பெறும்.
இதன்போது வானியல் விஞ்ஞான அறிவை விருத்தி செய்வதும் வானியல் தொடர்பான தகவல்களை பொதுமக்களுக்கு வழங்குவதும் நோக்கமாகும்.
இந்த முகாம்...
மஹிந்த ராஜபக்ச தலைமையிலான பத்து வருட ஆட்சிக் காலம் முடிவுக்குக் கொண்டு வரப்பட்டு, புதிய ஆட்சித் தலைமை ஏற்படுத்தப்பட்டு ஒரு வருடமும் எட்டு மாதங்களும் நிறைவு பெறப் போகின்றது.
அதேசமயம் ஜனாதிபதித் தேர்தல் மூலம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதைத் தொடர்ந்து பாராளுமன்றத் தேர்தலில் கூட்டரசாங்கம் உருவாகி ஒரு வருடம் நிறைவு பெற்று விட்டது.
ஆட்சி மாற்றத்தின் பின்னரான கடந்த இருபது மாத காலப் பகுதியில் நாட்டில் நிறையவே மாற்றங்கள் நடந்துள்ளன.
பத்து வருட...
இலங்கைத் தீவின் ஆட்சியாளர்களே, அதிகார வர்க்கத்தினரே உங்கள் அரசியல் சதுரங்கத்தின் பகடைக்காய்களாக தமிழ் அரசியல் கைதிகளை இன்னும் எத்தனை காலங்கள் பயன்படுத்த போகின்றீர்கள்.
கொடிய போர் முடிவுக்கு வந்து ஏழு ஆண்டுகள் ஆகியும் சிறைகளில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை இன்று வரை விடுதலை செய்யப்படாததன் காரணம் என்ன?
நல்லிணக்கத்திற்கு வாருங்கள் ஒருமைப்பாட்டினை பேணுங்கள் என்று வெறும் அறிக்கைகள் விடுகின்ற நீங்கள் உண்மையிலே நல்லிணக்கத்தை விரும்புகின்றவர்களாக இருந்தால் ஏன் அனைத்து தமிழ்...