விமானப்பயணம் என்பது எப்போதும் சுவாரஸ்யமான ஒன்று தான். அதிலும் முதல் முறையாக விமான பயணம் மேற்கொள்பவர்கள், அந்த  அனுபவத்தை நிச்சயம் மறந்திருக்க மாட்டார்கள். விமானம் தரையிறங்கும் போது ஜன்னல் வழியாக எட்டிப்பார்க்கிறீர்கள்.  அங்கே விமான ஓடுதளத்திற்கு பதிலாக ஒரு கடற்கரையோ, ஒரு ரயில்வே ட்ராக்கோ இருந்தால் எப்படி இருக்கும். அப்படியான கிலி ஏற்படுத்தும் டாப் 5 விமான நிலையங்களுக்கு ஒரு ட்ரிப் அடிப்போமா.. 1. பாரா ஏர்போர்ட் ( ஸ்காட்லாண்ட்) : ஸ்காட்லாந்தின்  பாரா என்ற...
அவுஸ்திரேலியாவின் அதிக்கூடிய வயதுடைய அறிவியலாளர் David Goodall - ஐ பணி நிமித்தம் பல்கலைக்கழகத்திற்கு வரவேண்டாம் என பேர்த்திலுள்ள Edith Cowan பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. 102 வயதான David Goodall தற்போதும் வாரத்தில் 4 நாட்கள் இரண்டு பஸ் மற்றும் ஒரு தொடரூந்து ஆகியவற்றில் ஏறி சுமார் 90 நிமிடங்கள் பயணம் செய்து Edith Cowan பல்கழைக்கழகத்திற்குச் செல்கிறார். இவரது பாதுகாப்பு மற்றும் உடல்நலனைக் கருத்திற்கொண்டு இனிமேல் பல்கலைக்கழக்திற்கு வரவேண்டாம் என...
  ஸ்ரீ லங்கன் விமான சேவை நிறுவனத்துக்கு சொந்தமான விமானமொன்று 15 மணித்தியாலங்கள் தாமதமாக பயணத்தை ஆரம்பிக்க காரணமாக இருந்ததாக கூறப்படும் அவ்விமானத்தின் தலைமை விமானி உடன் அமுலுக்கு வரும் வகையில் பணி இடை நிருத்தம் செய்யப்பட்டுள்ளார். ஜேர்மனியின் ஃபிராங்ஃபர்ட் விமான நிலையத்தில் UL554 எனும் விமானத்தின் தலைமை விமானி (கெப்டன்) மதுபான பரிசோதனையில் தோல்வியடைந்ததன் விளைவாக அவரால் விமானத்தை செலுத்த முடியாது போனதாகவும் இதனால் 15 மணி நேர தாமதத்தின்...
  “காய்ச்சலில் அவதிப்படும் குழந்தையையும் பார்த்துக் கொண்டு ஆபீசிலும் என்னால் வேலை செய்ய முடிகிறது, ஆனால் சட்டசபையில் அமைச்சர்கள் ஏன் தூங்குகிறார்கள்” என்று புனேயை சேர்ந்த வங்கி, பெண் ஊழியர் சுவாதி சிதால்கர் பேஸ்புக்கில் படத்தோடு கேட்ட ஒரு கேள்வி இன்று அகில இந்தியாவிலும் ஹாட் டாப்பிக்காக மாறியுள்ளது. சுவாதி சிதால்கரின் பேஸ்புக் பக்கத்திலுள்ள இந்த ஸ்டேடஸ் தகவலையும், அதோடு ஷேர் செய்திருந்த, காய்ச்சலில் அவதிப்பட்டு தரையில் படுத்திருக்கும் அவரது மகனின்...
  உவர் நீரை நன்னீராக மாற்றுவதற்குரிய கருவி ஒன்றை வடிவமைத்துள்ள திருவையாற்றை சேர்ந்த, கிளி/கிளிநொச்சி மகாவித்தியாலய மாணவன் கவியார்த்தனன் இளம் வயதில் புதிய கண்டுபிடிப்பொன்றை மேற்கொண்டு சாதனை புரிந்துள்ளார். இம்மாணவன் தேசியமட்டத்திலும் தெரிவாகி சாதிக்க சங்கமம் இணையத்தளம் வாழ்துகின்றது.
  மறுபிறப்பு பற்றி உலகில் பலரும் பல்வேறான கருத்துக்களை பரப்பி வருகின்றனர். சிலர் நம்புவார்கள், சிலரோ நம்பமாட்டார்கள். இவற்றுக்கு முற்றிப்புள்ளி வைக்க வேண்டுமானால் கருடபுராணத்தைப் பற்றி அனைவரும் தெரியவேண்டியது அவசியம். இந்த கருடபுராணத்தில் உயிர்களின் மறுபிறவி பற்றி அனைத்து விடயங்களும் கூறப்பட்டுள்ளது. முதலில் “கருட புராணம்” என்றால் என்ன என்பதை நோக்குவோம். பரம்பொருளான விஷ்ணு பகவான் தனது வாகனமான கருடாழ்வார் மீது அமர்ந்து உலகை சுற்றிப்பார்த்தார். அப்பொழுது கருடன் விஷ்ணுவை நோக்கி “சுவாமி மனிதர்களின்...
  சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தா ஒப்பந்தமாகியுள்ளார். அது எந்த படத்திற்கு என்பதை கீழே பார்ப்போம். சிவகார்த்திகேயன் நடிப்பில் தற்போது ‘ரெமோ’ படம் இறுதிக்கட்டத்தில் இருக்கிறது. இப்படம் வருகிற அக்டோபர் 7-ந் தேதி வெளியாகவிருக்கிறது. இப்படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன் மோகன்ராஜா இயக்கும் புதிய படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கு பிறகு அடுத்த வருடம் ஜனவரி மாதத்தில் பொன்ராம் இயக்கும் படம் ஒன்றில் நடிக்கவிருக்கிறார். மோகன்ராஜா படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நயன்தாரா நடிப்பது உறுதியாகியிருந்த நிலையில், தற்போது...
வவுனியா குடியிருப்பு கலாசார மண்டபத்தில் கடந்த 1994ஆம் ஆண்டில் இருந்து நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் இன்றிலிருந்து (21-08-2016)  வெளியேறியுள்ளனர். அண்மையில் வடக்குக்கான இளைஞர் அமைப்பு என்ற அமைப்பினர் இவ் இராணுவ முகாமுக்கு முன்பாக மக்களின் காணிகளிலிருந்து வெளியேறு என ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டிருந்தனர். இன்றிலிருந்து இராணுவம் வெளியேறியுள்ளதுடன் எதிர்வரும் தினங்களில் உத்தியோகபூர்வமாக இக் கட்டத்தினை மாவட்ட செயலகத்திடம் ஒப்படைக்கவும் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.
பம்பலப்பிட்டி பகுதியில் உள்ள தொழிலதிபர் ஒருவர் நேற்றிரவு காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். காணாமல் போன சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை பம்பலப்பிட்டி பொலிஸார் ஆரம்பித்துள்ளனர். குறித்த நபர் காணாமல் போயுள்ளதாக அவரது குடும்பம் பொலிஸ் நிலையத்தில் செய்த முறைபாட்டிற்கு அமையவே இந்த தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். 29 வயதான மொஹமட் சகீம் சுலைமான் என்பவர் நேற்றிரவு வெளியில் சென்றிருந்த வேளையில் காணாமல் போனதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பான விசாரணைகளை மேற்கொண்டு...
யாழ், சாவக்கச்சேரி - நாவற்குழி பிரதேசத்தில் பெண்ணொருவர் எரியூட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். பலத்த தீக்காயங்களுக்கு உள்ளான பெண், யாழ் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார். நாவற்குழி கைதடி பிரதேசத்தை சேர்ந்த 39 வயதான பெண்ணே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த பெண்ணுடன் தகாத உறவு வைத்திருந்தவரே இந்த கொலையை செய்துள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் சாவக்கச்சேரி பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.