கொக்கிளாயில் பிரதேச செயலகத்தின் அனுமதியுடனேயே விகாரை அமைக்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திபிலேயே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், குறித்த பகுதியில் விகாரை அமைக்கப்படுவதில் என்ன தவறு இருக்கின்றது. இந்த விகாரை அமைக்கப்படுவது தொடர்பில் தனக்கு நன்றாகவே தெரியும், அது தொடர்பில் நான் தேடி பார்த்தேன். மேலும், பிரதேச செயலகத்தின் அனுமதியுடனேயே குறித்த விகாரை அமைக்கப்படுகிறது....
மனைவியுடன் ஏற்பட்ட தகராறு காரணமாக தன் 3 குழந்தைகளையும் துடிக்க துடிக்க கொலை செய்த தந்தையின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நெல்லையை சேர்ந்த ராஜசேகர் என்பவருக்கு மேகலா என்ற மனைவியும், முத்துசெல்வி, காவியா, ஆர்த்தி என்ற மூன்று பெண்குழந்தைகளும் இருந்தனர். ராஜசேகருக்கு குடிப்பழக்கம் மற்றும் கஞ்சா பாவித்தல் போன்ற பழக்கம் இருந்துள்ளது. இதனால் அவரது மனைவி அவரை பலமுறை கண்டித்துள்ளார். ஆனால் அவரோ அதை கண்டு கொள்ளவே இல்லை. இந்நிலையில் நேற்றிரவு ராஜசேகர்...
முன்னாள் போராளிகளின் வைத்திய பரிசோதனைகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்க வைத்தியர்களை விட புலம்பெயர் தமிழர்களே மிகவும் நம்பிக்கைக்குரியவர்கள். இந்நிலையில், வெள்ளையர்களைப் பார்க்கிலும் தமிழர்களுக்கு தமிழர்களே மிகவும் நம்பிக்கையானவர்கள் என வட மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே கூறியுள்ளார். சர்வதேசத்தில் பணிபுரியும் புலம்பெயர் தமிழ் வைத்தியர்கள் இருக்கும் நிலையில் நாம் அமெரிக்கர்களை நாட வேண்டிய தேவை கிடையாது என அவர் கூறியுள்ளார். வட மாகாணத்தில் இடம்பெறவுள்ள முதலீட்டாளர்களுக்கான மாநாடு தொடர்பில் விளக்கமளிக்கும் செய்தியாளர் சந்திப்பு அரச...
புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிப் போராளிகளுக்கு விஷ ஊசிகள் ஏற்றப்பட்டு நூற்றுக்கும் மேற்பட்ட போராளிகள் மரணமடைந்தது தெரிந்ததே. இந்த அதிர்ச்சி தரும் சம்பவத்தினை மூடிமறைக்க இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு மருத்துவ நிபுணர்களை கொண்டுவந்து சோதனை என்ற பெயரில் சில பரிசோதனைகளை நடத்தி விஷ ஊசிகள் போடவில்லை என்று கூறி மூடிமறைக்க நடவடிக்கை எடுத்து வருவதாக ஒபாமாவுக்கான தமிழர்கள் குற்றம் சாட்டியுள்ளது . இதன் முதன் நடவடிக்கையாக இலங்கை அமைச்சர்கள் சிலர் முழுமூச்சாக...
நுவரெலியா மாவட்டத்தில் 17 பாடசாலைகளில் 185 மாணவர்கள் மோசடியான முறையில் இம்முறை நடைபெற்று வரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தோற்றியுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டள்ளது. போலியான முறையில் அடையாள அட்டைகளை தயாரித்து இவ்வாறு பரீட்சைக்கு தோற்றியுள்ளதாக மாணவர்களின் உரிமைகளை பாதுகாக்கும் அமைப்பின் உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். பத்தரமுல்லவில் அமைந்துள்ள ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தலைமையக் காரியாலத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உறுப்பினர்கள் இதனைக் குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் மேலும் கூறுகையில், இவ்வாறு பரீட்சைக்குத் தோற்றிய...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஆண்டு நிறைவு நிகழ்வுகளில் பங்கேற்பதா இல்லையா என்பது குறித்து தீர்மானிக்கப்படவில்லை என கூட்டு எதிர்க்கட்சியினர் அறிவித்துள்ளனர். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 4ம் திகதி ஸ்ரீலங்கா சுத்நதிரக் கட்சியின் 65ம் ஆண்டு நிறைவு நிகழ்வு, குருணாகலில் நடைபெறவுள்ளது. இந்த நிகழ்வில் பங்கேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் சுதந்திரக் கட்சியின் அழைப்பினை ஏற்று நிகழ்வில் பங்கேற்பதா இல்லையா என்பது இன்னமும்...
சபாநாயகர் கரு ஜயசூரிய அரசியல் அமைப்பிற்கு முரணாக செயற்பட்டு வருகின்றார் என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இலங்கையின் சட்ட திட்டங்களுக்கு அமைய காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டத்தில் கையொப்பமிட சபாநாயகருக்கு முடியாது. அரசியல் அமைப்பின் நியதிகள் மற்றும் நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் அடிப்படையிலேயே சட்டமொன்றை நிறைவேற்றிக்கொள்ள முடியும். இந்த சட்டம் உரிய முறையில் சமர்ப்பிக்கப்படவில்லை.இந்த விடயம் குறித்து நாடாளுமன்றின்...
மலையகத் தோட்டத் தொழிலாளர்களுக்கான நேரடி அபிவிருத்திகளை முன்னெடுக்கும் நோக்கில் முதல் தடவையாக தமிழர் ஒருவருக்கு அமைப்பாளர் பதவியை வழங்கியவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களே என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் பெரியசாமி பிரதீபன் அவர்கள் தெரிவித்தார். வருகின்ற பிரதேச சபை மற்றும் மாகாண சபை தேர்தல்களில் கடந்த காலத்தை விட நுவரெலியா மாவட்டத்தில் பெருவாரியான வாக்குகளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அமோக வெற்றியைப்பெறும் எனத் தெரிவித்தார். 19.08.2016 அதாவது...
உப்பு மற்றும் கொழுப்பு உணவுகள் குறித்தும் எச்சரிக்கை விடுக்கும் வகையில் சட்டம் இயற்றப்படவுள்ளது. மென்பானங்களில் சேர்க்கப்பட்டுள்ள சீனியின் அளவை காட்டும் சட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. நிற அடையாளங்களின் ஊடாக மென் பானங்களில் உள்ளடக்கப்பட்டுள்ள சீனியின் அளவு அடையாளப்படுத்தப்படவுள்ளது. இதேவேளை, உடலுக்கு தீங்கு இழைக்கக் கூடிய உப்பு மற்றும் கொழுப்பு வகைகள் உணவில் எந்தளவிற்கு சேர்க்கப்பட்டுள்ளது என்பதனை காண்பிக்கக்கூடிய வகையில் சட்டம் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது. தற்போது சந்தையில் விற்பனை செய்யப்படும் உருளைக்...
வடக்கில் அமைக்கப்பட்டுவரும் பௌத்த விகாரைகளை அகற்ற முடியாது என்று புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் டி.எம்.சுவாமிநாதன் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். பௌத்த விகாரைகளை அமைப்பதற்கு பிக்குகள் உட்பட சிங்கள மக்களுக்கு சகல உரிமைகளும் இருப்பதாகத் தெரிவித்துள்ள அமைச்சர் சுவாமிநாதன், நிர்மாணிக்கப்பட்டுள்ள பௌத்த விகாரைகளையோ, புத்தர் சிலைகளையோ அகற்ற முடியாது என்று குறிப்பிட்டதுடன், அவ்வாறு செய்ய தான் தயாரில்லை என்றும் தெரிவித்துள்ளார். தமிழர் தாயகப் பிரதேசங்களில் சைவ ஆலயங்களுக்கான காணிகளையும், தமிழ் மக்களுக்கு சொந்தமான...