நவீன சமையல் உபகரணங்கள் வேலைப்பளுவை குறைக்க உதவினாலும், அவற்றால் ஏற்படும் உடல்நலக் கேடுகள் பற்றி அவ்வப்போது சர்ச்சைகள் எழுவதுண்டு. வாழ்க்கை முறை சார்ந்த பிரச்னைகளை அவை தரும் என புகழ்பெற்ற மருத்துவர்களே சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக, ‘குக்கரில் சமைக்கப்படும் சாதத்தை சாப்பிட்டால் நீரிழிவு நோய் வரும்’ என்கிற தகவல் வயிற்றில் புளியைக் கரைக்கிறது. ‘‘லைஃப்ஸ்டைல் காரணமாக சமையலிலும் பெரும் மாற்றங்கள். ஆபீசுக்குப் போகிற அவசரத்தில் சீக்கிரம் எப்படி சமையலை முடிப்பது என...
தமிழ் சினிமாவில் நம்பர்1 பாடலாசிரியராக இருந்தவர் நா.முத்துக்குமார். இவரின் மரணம் அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டு இருந்த இவரது மரணத்திற்கு காரணம் குடி தான் என சிலர் கூறுகின்றனர். அதேபோல மருத்துவத்திற்கு பணம் இல்லாமல் இறந்து போனார் எனவும் கூறப்படுகிறது. இது இரண்டுமே உண்மையில்லை என்று அவரின் நண்பராக இருந்த பிரபல பாடலாசிரியர் மதன் கார்க்கி கூறியுள்ளார். அவரின் சில செக்குகள் பணமில்லாமல் திரும்பி வந்தது உண்மைதான், ஆனால்...
மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்நகர் கிராமத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை திடீரென ஏற்பட்ட பலத்த காற்றில் மின்கம்பங்களின் கம்பிகள் ஒன்றோடொன்று உராய்ந்து ஏற்பட்ட தீ விபத்தின் காரணமாக மோட்டார் சைக்கிளொன்றும் பல பனைமரங்களும் எரிந்து நாசமாகியுள்ளன. தற்சமயம் மட்டக்களப்புப் பிரதேசத்தில் தென்மேல் பருவப்பெயர்ச்சிக் காற்றின் காரணமாக வீதியோரத்தில் நிறுவப்பட்டுள்ள மின்கம்பங்களின் கம்பிகள் ஒன்றோடொன்று உராய்ந்து தீப்பற்றிக் கொண்டு அறுந்து வீதியோரத்தில் வரிசையாக நின்றிருந்த பனை மரங்கள் மீது விழுந்துள்ளன. இதனால் காய்ந்து போயிருந்த பனை...
ஒற்றை இயந்திர விமானம் மூலம் உலகம் முழுவதும் தனியாக வலம் வந்த அவுஸ்திரேலிய இளைஞரான Lachlan Smart இலங்கையை வந்தடைந்துள்ளதாக கொழும்பில் உள்ள அவுஸ்திரெலியா உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது. விமான போக்குவரத்து மூலம் இவ்வாறு பயணித்தது இந்த இளைஞனுக்கு இதுவே முதல் முயற்சி என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒற்றை இயந்திர விமானம் மூலம் 18 வயதான Lachlan Smart என்பவர் கடந்த ஜூலை 4 ம் திகதி அவரது பயணத்தை அவுஸ்திரேலியாவின் கிழக்கு கடற்கரையில்...
மலேசியாவில் இருந்து எண்ணெய் ஏற்றிச் செல்லும் கப்பல் இந்தோனேஷியா கடற்பகுதிக்கு கடத்திச் செல்லப்பட்டுள்ளதாக மலேசியாவின் கடல்வழி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குறித்த கப்பல் 9 இலட்சம் லீற்றர் பெறுமதியான எண்ணெயை எற்றிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கப்பல் தற்போது இந்தோனேஷியா பகுதியில் இருக்கலாம் என தான் நம்புவதாக மலேசியாவின் கடலோர பணியகத்தின் பணிப்பாளர் குறிப்பிட்டுள்ளார். கடத்தல்காரர்கள் தொடர்பில் எந்த தகவலும் இது வரையில் கண்டறியப்பட வில்லை என அதிகாரிகள் மேலும் கூறியுள்ளனர்.
தாயகம், தேசியம், சுய ஆட்சி என்ற கோஷங்கள் இனங்களுக்கு இடையில் ஒருபோதும் நல்லிணக்கத்தை கொண்டு வரப்போவதில்லை. ஓர் நாடாக அனைவரும் ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமாகவே நல்லிணக்கத்தை ஏற்படுத்த முடியும் என ஆசிரியர் த.சிவசோதி தெரிவித்துள்ளார். நல்லிணக்க பொறிமுறை தொடர்பில் மக்கள் கருத்தறியும் அமர்வு வவுனியா பிரதேச செயலகத்தில் இன்று காலை நடைபெற்று வருகின்றது. குறித்த அமர்வில் கருத்து வெளியிடும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார். தொடர்ந்தும் அவர் அங்கு உரையாற்றுகையில், தாயகம், தேசியம்,...
இராணுவத்தினரின் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்க கோரி கடந்த சனிக்கிழமையில் இருந்து காணி உரிமையாளர்கள் ஐந்து நாட்களாக இரவு பகலாக பல சிரமங்கள் மற்றும் இராணுவத்தினரின் இடையூறுகளுக்கு மத்தியில் குறித்த இடத்திலேயே சமைத்து உணவு உண்டு கவனயீர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இவர்களது போராட்டத்தினைக் கைவிடுமாறு சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு புனர்வாழ்வளிப்பு ,மீள்குடியேற்றம் மற்றும் இந்துமத அலுவல்கள் அமைச்சர் டி .எம் . சுவாமிநாதன் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் ஊடாக கடிதம்...
விக்ரம், அஜித் இருவரும் இணைந்து உல்லாசம் படத்தில் நடித்துவிட்டனர். இதுமட்டுமின்றி அஜித்தின் ஆரம்பக்காலத்தில் ஒரு படத்திற்கு விக்ரம் தான் குரல் கொடுத்தார். இந்நிலையில் சமீபத்தில் மீண்டும் அஜித்துடன் நடிப்பீர்களா? என்று ஒரு பேட்டியில் கேட்க, கண்டிப்பாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தால் உடனே சம்மதித்துவிடுவேன் என்று கூறியுள்ளார். இச்செய்தி ரசிகர்களுக்கு செம்ம கொண்டாட்டம் தான், இயக்குனர்கள் மனது வைத்தால், பொறுத்திருந்து பார்ப்போம்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் ஆதரவாளர்கள் பலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் மற்றும் மாவட்ட அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். காமினி லொக்குகே, ரோஹித்த அபேகுணவர்தன, மகிந்த யாப்பா அபேவர்தன, கெஹெலிய ரம்புக்வெல்ல, சீ.பீ. ரத்நாயக்க, பவித்ரா வன்னியாராச்சி, உதித் லொக்குபண்டார உட்பட பலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர் பதவிகளில் இருந்து நீக்கிவிட்டு, 40 புதிய அமைப்பாளர்களை நியமிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நடவடிக்கை...
சிவகார்த்திகேயன் படங்களுக்கு தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் வியாபாரம் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. இந்நிலையில் இவரின் ரெமோ படம் அதிக பட்ஜெட்டி எடுக்கப்பட்டுள்ளது. ரெமோ தமிழகத்தில் மட்டும் ரூ 32 கோடிக்கு வியாபாரம் ஆக, கேரளாவில் ரூ 2 கோடி என மொத்தம் 34 கோடி ரூபாய்க்கு வியாபாரத்தை எட்டியுள்ளது. இதன் மூலம் சிவகார்த்திகேயன் தன் திரைப்பயணத்தில் ஒரு படி மேலே சென்றுள்ளார் என்பது உறுதி.