தெலுங்கு சினிமாவில் முன்னணி நடிகர்களில் மாஸ் ஹீரோ அல்லு அர்ஜுன். இவருக்கு ஆந்திராவை போல கேரளாவிலும் அதிக ரசிகர்கள் உள்ளனர். அண்மையில் கேரளாவில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அல்லு அர்ஜுன், சல்மான் கான் மற்றும் இளையதளபதி விஜய் ஆகியோரின் தீவிர ரசிகர் என்று கூறியுள்ளார். விஜய்யின் துப்பாக்கி, கத்தி போன்ற படங்கள் அவருக்கு பிடிக்குமாம். தற்போது அல்லு அர்ஜுன், ஹரி ஷங்கர் இயக்கத்தில் ஒரு புது படம் நடிக்க இருக்கிறார்.
கமல்ஹாசன் அவர்களுக்கு காலில் அடிப்பட்டு சிகிச்சை எடுத்து வந்தது அனைவரும் அறிந்ததே. இந்நிலையில் இவரின் சபாஷ் நாயுடு படம் பாதியிலேயே நின்றதாகவும் ஒரு வந்ததி உலா வந்தது. ஆனால், நமக்கு கிடைத்த தகவலின்படி அவர் மெல்ல குணமாகி வருகிறார், இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் அமெரிக்காவில் தொடங்கும் என கூறப்பட்டுள்ளது. மேலு, விஸ்வரூபம்-2 ரிலிஸ் குறித்தும் விரைவில் அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் மூன்று முக்கியமான விஷயங்கள் பேசப்பட்டன. எதிர்வரும் காலங்களில் திரைப்படத்தின் சாட்டிலைட் உரிமை விற்பனை ஆகாத காரணத்தினால் இனிவரும் காலங்களில் சாட்டிலைட் ஒளிபரப்பை டெலிகாஸ்ட் அடிப்படையில் ஒளிபரப்பப்படும். தயாரிப்பு செலவுகளை கட்டுப்படுத்தும் வகையில் 50 லட்சத்துக்கு மேல் சம்பளம் வாங்கும் நடிகர், நடிகைகள் மற்றும் தொழிநுட்ப கலைஞர்கள் ஆகியோர் 30 சதவீதம் அவர்களது சம்பளத்தினை குறைத்துக் கொள்ள வேண்டும் என்று...
இலங்கை வீரர் கருணரத்னேவை தனது புத்திசாலி தனத்தால் வீழ்த்திய அவுஸ்திரேலியா அணியின் விக்கெட் கீப்பர் பீட்டர் நிவில் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது. அவுஸ்திரேலியா அணி இலங்கையில் சுற்று பயணம் மேற்கொண்டு 3 டெஸ்ட்போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடியது. இத்தொடரில் அவுஸ்திரேலியா அணி தொடரை இழந்தது. இந்நிலையில் அவுஸ்திரேலியா மற்றும் இலங்கை அணிகள் மோதிய மூன்றாவது டெஸ்ட் போட்டி கொழும்புவில் நடைபெற்றது. அப்போட்டியின் 14 வது ஓவரை அவுஸ்திரேலியா சுழற்பந்து வீச்சாளர் நாதன் லயன்...
ரியோ ஒலிம்பிக் போட்டியில் பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து அரையிறுதிக்கு முன்னேறி இந்தியாவிற்கு பதக்கம் கிடைக்கும் என்ற நம்பிக்கையை அளித்துள்ளார். பிரேசில் நாட்டில் நடந்து வரும் விறுவிறுப்பான ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிற்கு இதுவரை பதக்கம் கிடைக்காத நிலையில் தற்போது லீக் சுற்றில் ஹங்கேரியின் லாரா சரோசியையும், கனடாவின் மிச்செல் லீ-யையும் தோற்கடித்து நாக்அவுட் சுற்றுக்கு முன்னேறிய சிந்து, முதல் சுற்றில் சீனத் தைபேயின் டாய் சு யிங்கை வீழ்த்தி இன்று நடந்த...
ரியோவில் பெண்களுக்கான 5000 மீட்டர் தூர ஓட்டப் பந்தயத்தின்போது தான் இந்த நெகிழ வைக்கும் சம்பவம் நிகழ்ந்துள்ளது. போட்டியின் 2-வது அரையிறுதியில் அமெரிக்காவின் அப்பே டி'அகோஷ்டினோ, நியூசிலாந்தின் நிக்கி ஹம்ப்ளின் ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் மும்முரமாக ஓடிக்கொண்டிருக்கும் போது இருவரும் திடீரென எதிர்பாராத விதமாக மோதிக் கொண்டார்கள். இதில் அமெரிக்க வீராங்கனையின் கணுக்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் மனமுடைந்த நியூசிலாந்து வீராங்கனை அவரை அருகில் சென்று நலம் விசாரித்தார். போட்டியில் கலந்து...
ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தய போட்டியில் அரையிறுதி மற்றும் இறுதி போட்டிக்கான அட்டவணை முட்டாள்தனமாக இருந்தது என போல்ட் தெரிவித்துள்ளார். ரியோ ஒலிம்பிக்கில் ஆண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்பந்தய இறுதி போட்டி கடந்த ஞாயிற்று கிழமை நடைபெற்றது. இதில் ஜமைக்காவை சேர்ந்த உசைன் போல்ட் தங்கம் வென்று ஹாட்ரிக் சாதனை படைத்தார். ஆனால் இவருடைய முந்தைய சாதனையான 9.58 வினாடிகளின் சாதனையை இம்முறை முறியடிப்பார் என ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்...
அமெரிக்க நீச்சல் வீரரான பெல்ப்ஸ் இனி நீச்சல் குளம் பக்கம் திரும்பி கூட பார்க்கமாட்டேன் என திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். பிரபல நீச்சல் வீரரான பெல்ப்ஸ் ஒலிம்பிக் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ளார். 2002 ஆம் ஆண்டு 15 வயதில் இருந்து ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்று வரும் பெல்ப்ஸ், இது வரை 23 தங்கம் உட்பட 28 பதக்கங்கள் பெற்று சாதனை படைத்துள்ளார். கடந்த 2012 ஆம் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தான்...
வரலாற்றுச் சிறப்பு மிக்க நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், பக்தர்களின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு கண்காணிப்பு நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆலய வளாகத்தில் 500க்கும் மேற்பட்ட பொலிஸார் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ள நிலையில் 25 பாதுகாப்புக் கண்காணிப்பு கமெராக்களும் பொருத்தப்பட்டுள்ளன. யாழ். சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இதனை தெரிவித்துள்ளார். இது தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாளை இடம்பெறவுள்ள மஞ்சள் திருவிழாவிலிருந்து விஷேட திருவிழாக்கள் ஆரம்பமாகவுள்ளன....
நமது உடலில் அமைந்திருக்கும் மிகப் பெரிய உடல் உறுப்பு நமது சருமம் தான். நமது சருமத்தில் உண்டாகும் மாற்றங்களை வைத்து நமது உடலில் உண்டாகும் கோளாறுகள் என்னவென்று நம்மால் அறிய முடியும். இது குறித்து ஓர் சீனா உடல்நல மேப் ஒன்றும் இருக்கிறது. சீனர்கள் உடலில் இருக்கும் பல்வேறு உடல் உறுப்புகளின் இயக்கத்திற்கும், முக சருமத்தின் பல்வேறு பகுதிகளில் உண்டாகும் மாற்றத்திற்கும் தொடர்பு உடையதாக நம்புகிறார்கள். முகத்தில் ஒரு சில...