யார் போரை முடிவுக்குக் கொண்டு வந்தார்கள் என்பதனை மக்கள் நன்கு அறிவார்கள் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார். விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவை பார்வையிட்டு திரும்பிய போது அவர் ஊடகங்களிடம் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… வடக்கின் போரை முடிவுறுத்தியதில் தமக்கும் பங்கு உண்டு என சிலர் கூறுகின்றார்கள். இவ்வாறான கூற்றுக்களை ஏற்றுக்கொள்ளும் அளவிற்கு மக்கள் முட்டாள்கள் இல்லை. வடக்கில் எப்போது போர் முடிவுக்குக் கொண்டு...
முன்னாள் போராளிகளை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்த அமெரிக்க மருத்துவர்கள் இலங்கை வந்துள்ளதாக சிங்கள ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை விசேட மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்தும் நோக்கில் ஐந்து அமெரிக்க விசேட நிபுணத்துவ மருத்துவர்கள் இலங்கை வந்துள்ளனர். வட மாகாணசபையின் கோரிக்கைக்கு அமைய இவர்கள் இலங்கைக்கு விஜயம் செய்துள்ளனர். இந்த அமெரிக்க மருத்துவர்களின் இலங்கை விஜயத்திற்கான செலவுகளை வெளிநாட்டு அரச சார்பற்ற நிறுவனமொன்று ஏற்றுக்கொண்டுள்ளது. புனர்வாழ்வு அளிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப்புலி...
சுஜானி போகொல்லாகம மற்றும் நித்யா சேனானி ஆகியோருக்கு எதிர்வரும் ஓகஸ்ட் 22ம் திகதி வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டுள்ளது. கவனர்ஸ் நிறுவனம் மற்றும் என்.ஆர். கன்சல்டன் ஆகிய நிறுவனங்கள் தொடர்பில், நாமல் ராஜபக்‌ச மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல் காரணமாக, அரசாங்கத்திற்கு ரூபா 45 மில்லியன் நஷ்டத்தை ஏற்படுத்தியமை தொடர்பிலேயே அவர்களை நேற்று நீதிமன்றில் ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருந்தது. சுஜானி போகொல்லாகம மற்றும் நித்யா சேனானி ஆகியோருக்கே , கொழும்பு அளுத்கடை நீதிமன்றினால் இவ்வாறு அழைப்பாணை...
இலங்கையில் கொடூரமான, மிக மோசமான இராணுவ ஆட்சியே கடந்த காலங்களில் இருந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டைமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். புலம்பெயர்ந்து லண்டனில் வாழும் எழுத்தாளர் தா. தேச இலங்கை மன்னன் எழுதிய சர்வதேச மனிதஉரிமைச் சாசனம் நூல் வெளியீட்டு விழா இன்று இடம்பெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், இலங்கைத் தமிழர்களின் விடுதலைப் போராட்ட காலகட்டத்தின் இறுதியில்...
சுவிஸ் தமிழர் இல்லம் அனைத்துலக ரீதியில் 15வது தடவையாக நடாத்திய தமிழீழக் கிண்ணத்திற்கான தமிழர் விளையாட்டு விழா கடந்த 13ஆம், 14ஆம் திகதிகளில் சூரிச் வின்ரத்தூர்நகரில் அமைந்துள்ள SportanlageDeuttweg மைதானத்தில் வெகுசிறப்பாக நடைபெற்று முடிந்தது. புலம் பெயர்ந்து வாழும் எமது இளம் தலைமுறையினரிடம் தாயகம் நோக்கிய தேடலை ஏற்படுத்தும் நோக்கில் தமிழர் இல்லம் இச்சுற்றுப் போட்டியினை நடாத்திவருகின்றது. நடைபெற்று முடிந்த இந்நிகழ்வில் பங்கேற்பதற்காக ஐரோப்பாவின் பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான அணிகள் வருகைதந்திருந்தன.   இருதினங்களும்...
சுவிட்சர்லாந்து நாட்டில் இந்துக் கடவுளான சிவன் சிலைக்கு முன்னால் நரபலி கொடுப்பது போன்று வெளியாகியுள்ள வீடியோ அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிஸில் உள்ள ஜெனிவா நகரில் அணு ஆராய்ச்சிக்கான ஐரோப்பிய அமைப்பின் (CERN) அலுவலகம் ஒன்று அமைந்துள்ளது. இந்த கட்டிடத்திற்கு அருகில் அமைந்துள்ள சிவன் சிலை முன்னால் தான் இந்த காட்சிகள் இடம் பெற்றுள்ளன. சில தினங்களுக்கு முன்னால் யூடியூபில் பதிவேற்றப்பட்ட வீடியோ ஒன்றில் இந்த பயங்கர காட்சிகள் பதிவாகியுள்ளன. சிவன் சிலைக்கு முன்னால் சிலர்...
  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனை தான் தாக்கவில்லை என்று வடமாகாணசபையின் பிரதி அவைத்தலைவர் அன்ரனி ஜெகநாதன் தெரிவித்தார். வட மாகாண சபையின் மாதாந்த அமர்வு இன்று நடைபெற்ற போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “வவுனியாவில் நடைபெற்ற தமிழ் அரசுக் கட்சியின் மத்திய குழு கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய பட்டியல் ஆசனத்தை சாந்தி சிறிஸ்கந்தராசாவுக்கு வழங்கியமை தொடர்பாக நான் கடுமையான வாதத்தை முன் வைத்தேன். இதனால் கடுமையான கருத்து...
தாய்லாந்து நாட்டின் இராணுவ ஹெலிகொப்டர் விபத்துக்குள்ளானதில் அதில் இருந்த 5 இராணுவ வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். கடந்த ஞாயிற்றுக் கிழமை மியான்மர் எல்லைப் பகுதி அருகே வெள்ள மீட்பு பணிகளை முடித்துக்கொண்டு தாய்லாந்து நாட்டின் UH-72 ரக இராணுவ ஹெலிகொப்டர் பிசனுலோக் பகுதிக்கு வந்து கொண்டிருந்தது. அப்போது தாய்லாந்தின் மிகப் பெரிய மலைப்பகுதியான chiang mai பகுதியில் ஹெலிகொப்டர் மாயமானது. இதனையடுத்து மாயமான ஹெலிகொப்டரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வந்தது. இந்நிலையில்...
ரியோ ஒலிம்பிக் போட்டியில் ஏற்பட்ட தோல்வியை தாங்க முடியாமல் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கண்ணீர் விட்டு அழுதார். ரியோ ஒலிம்பிக்கில் டென்னிஸ் கலப்பு இரட்டையர் பிரிவில் சானியா மிர்சா- ரோகன் போபண்ணா ஜோடி, செக்குடியரசு ஜோடியிடம் தோற்றது. இதனால் வெண்கல பதக்கம் வெல்லும் வாய்ப்பு பறிபோனது. இந்த நிலையில் தோல்வியை தாங்கிக்கொள்ள முடியாத சானியா மிர்சா, தோல்வி தந்த வேதனையில் கண்ணீர் விட்டு அழுதார். கண்ணீரை அடக்குவதற்கு பெரும்பாடு...