விஜய்யின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய ஹிட் தெறி. இப்படத்தை தொடர்ந்து இவர் பரதன் இயக்கத்தில் நடித்து வருகிறார்.
இப்படத்திற்கு பிறகு சிவாஜி நிறுவத்திற்காக ஒரு படத்தில் நடிக்க, இதை அட்லீ இயக்கவிருப்பதாக ஒரு செய்தி உலா வருகின்றது.
இதை நிரூபிக்கும் பொருட்டு தற்போது அட்லீ இப்படத்தின் திரைக்கதை அமைக்கும் வேலையில் பிஸியாகவுள்ளாராம், ஆனால், இந்த படம் தெறி பாகம் இரண்டா? அல்லது வேறு ஒரு களமா? என்பது தெரியவில்லை.
சின்னத்திரை தொகுப்பாளர்களுக்கு விருது என்பது மிகவும் அரிது. சமீப காலமாக தான் தொலைக்காட்சிகள் தொகுப்பாளர்களுக்கு என விருதுகளை வழங்கி வருகின்றனர்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு விருது விழா மிகவும் வித்தியாசமாக விளம்பரங்களுக்கு விருது கொடுத்துள்ளது, இதில் டிடிக்கும் விருது கிடைத்துள்ளது.
ஆம், டிடி கடந்த வருடம் நடித்த ஒரு எண்ணென்ய் விளம்பரத்திற்காக விருது பெற்றுள்ளார். வரவர எல்லாத்திற்கும் விருது தான் போல, என சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பேசி வருகின்றனர்.
பாலிமர் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகும் இனி எல்லாம் வசந்தமே சீரியல் ரசிகர்களை வெகுவாக கவர்ந்திருக்கிறது. தற்போது இந்த சீரியலில் கலக்கி வரும் நாயகன், நாயகி பற்றிய சில விஷயங்கள்
நாயகன் ஷாஹிர் ஷேக்
திலீப் என்ற பெயரில் அறிமுகமான இவர் சட்டம் படித்தவர். ஜம்முவில் பிறந்த ஷாஹிர் டிஸ்னி சேனல் நிகழ்ச்சிகளில் எல்லாம் கலக்கி இருக்கிறார்.
சட்டம் படித்த இவர் நடிப்பை ஒருபக்கம் வைத்துக்கொண்டு, ஈவென்ட் மேனேஜ்மென்ட் கம்பெனி ஒன்றையும் நடத்திக் கொண்டு...
வருகிற ஆகஸ்ட் 19ம் தேதி ஸ்ரீகாந்த், சந்தானம் நடிப்பில் வெளிவரவிருக்கும் படம் நம்பியார்.
இப்படம் கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் வெளிவர முடியாமல், கடைசியில் எப்படியோ முயற்சி செய்து வெளியீடுகிறார் ஸ்ரீகாந்த். இப்படத்தில் விஜய் ஆண்டனி , ஆர்யா போன்றவர்கள் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனி அவரது பாடலுக்கு நடனம் ஆடுவது போல் வருவார், ஆர்யா எனது நண்பனாக நடித்துள்ளார்.
நான் படப்பிடிப்பு முடித்து பிறகு மச்சி உனக்கு எவ்ளோ பேமெண்ட்...
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர்+ஒளிப்பதிவாளர் தங்கர் பச்சான் . இவர் இன்றும் தமிழ் கலாச்சாரத்தை போற்றும்படியான படங்களை தான் இயக்கி வருகிறார்.
இவர் சமீபத்தில் நா.முத்துக்குமார் இழப்பிற்கு ‘நா.முத்துக்குமார் இறந்தவுடன் தான் அவர் அருமை தெரிகிறதா?, எத்தனையோ பாடல்களை இரவு-பகல் பாராமல் பணத்தை எதிர்ப்பார்க்காமல் எழுதியவன் என் தம்பி.
தற்போது அவனை புகழ்ந்து அத்தனை கட்டுரைகள் வருகிறது, எதற்கு அது? இனி அவன் குடும்பத்தை பார்ப்பது யார்? அதற்கு பதில் கூறுங்கள்’...
நா. முத்துக்குமார் அவர்களின் திடீர் மரணம் திரைப்பிரபலங்களை மிகவும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மஞ்சள் காமாலையால் அவதிப்பட்டு வந்த இவர் மருத்துவ செலவுக்கு பணம் இல்லாமல் இறந்துவிட்டதாகவும், சில பழக்கவழக்கங்களே அவரின் உயிர் பிரிய காரணம் என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து விஷால் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில், நா. முத்துக்குமாரின் மரணம் வேதனையாக உள்ளது. திறமையான பாடல் ஆசிரியர், மருத்துவ முகாம்கள் நடத்த இதுவே சரியான நேரம் என தெரிவித்துள்ளார்.
நிதிச் சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவிற்கு விசேட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
கொழும்பு ரிமான்ட் சிறைச்சாலையின் எம்-2 சிறைப் பகுதியில் நாமல் ராஜபக்ச தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நாமல் ராஜபக்சவுடன் சுதர்சன கனோகொட என்ற மற்றுமொரு நபரும் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.
நாமல் ராஜபக்சவின் நிறுவனத்தில் இந்த நபர் முகாமையாளராக கடமையாற்றியுள்ளார்.
நேற்று மாலை சிறையில் அடைக்கப்பட்ட நாமல் ராஜபக்சவை பார்வையிட அவரது தந்தை முன்னாள் ஜனாதிபதி...
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்களுக்கு இதுவரை காலமும் என்ன நடந்துள்ளது? மற்றும் விஷ ஊசி விவகாரங்கள் பற்றி இன்றைய மக்கள் பிரதிநிதி நிகழ்ச்சியில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை சக்திவேல் கருத்துக்களை தெரிவித்தார்.
கடந்த காலங்களில் மேற்கொண்ட போராட்டங்களின் மூலம் தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை செய்யப்பட்டார்களா? கைதிகளுக்காக குரல் கொடுப்பவர்களுக்கு அச்சுறுத்தல்கள் உள்ளதா? என்ற பல்வேறு கேள்விகளுக்கு அருட்தந்தை சக்திவேல் விளக்கமளித்துள்ளார்.
முச்சக்கரவண்டி கடத்தப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவம் லிந்துலை பிரதேசப்பகுதியில் இடம் பெற்றுள்ளது.
லிந்துலை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தலாங்கந்தை தோட்டத்திற்கு அருகில் காணப்படும் குடியிருப்பு பகுதியிலேயே இந்த சம்பவம் இடம் பெற்றுள்ளது.
குறித்த பிரதேசத்தில் பாதையோர குடியிருப்பின் முன்னால் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கர வண்டியினை நேற்று இரவு இனம் தெரியாத நபர்கள் கடத்தி சென்றுள்ளனர்.
இதன் காரணமாக இன்று காலைமுதல் முச்சக்கரவண்டியின் உரிமையாளர் உட்பட பிரதேசவாசிகள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுப்பட்டபோது அப்பகுதியில் உள்ள பள்ளம் ஒன்றில்...
பொருளாதார மத்திய நிலைய இடத்தேர்வு ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்க வேண்டும்! சிவசக்தி ஆனந்தன்
Thinappuyal -
பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கான இடத்தேர்வு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டத்தில் தீர்மானிக்கப்பட வேண்டும் என்று வன்னிப் பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
கடந்த 2016ம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தில் 200 மில்லியன் ரூபா வவுனியா மாவட்டத்திற்கு பொருளாதார மத்திய நிலையம் அமைப்பதற்கு கௌரவ நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்டது.
இதற்கான இடத்தை தெரிவு செய்வதில் நீண்ட இழுபறிகள் நடைபெற்று...