நாட்டைச் சுற்றியுள்ள கடற்பகுதியில் இன்று (16) கடும் காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
கடும் காற்றுடன் கூடிய வானிலை தொடர்பில் கடலில் சஞ்சரிக்கும் கடற்படையினர் மற்றும் மீனவர்கள் கடும் அவதானத்துடன் இருக்குமாறு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தரைப்பிரதேசத்தில் திடீரென கடும் காற்று வீசக்கூடும் என்றும் அந்த திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
இது குறித்து இன்று விடுக்கப்பட்ட அறிக்கையில் இந்த தகவல்கள் காணப்படுகின்றன.
குளிப்பதற்காக கடற்கறைகளுக்கு செல்லும் மக்களும் அவதானமாக இருக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜப்பான் நாட்டு முன்னாள் பிரதமர் யஷோ புக்குடா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
Thinappuyal -
ஸ்ரீலங்காவிற்கு விஜயம் செய்துள்ள ஜப்பான் நாட்டு முன்னாள் பிரதமர் யஷோ புக்குடா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்காவின் தற்போதைய பொருளாதார நிலைமை, ஜப்பான் – ஸ்ரீலங்காவிற்கு இடையே உள்ள நட்புறவு தொடர்பில் நீண்டநேரம் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இந்தக் கலந்துரையாடலுக்கு வெளிவிவகார அமைச்சின் செயலாளர் எசல வீரகோன், ஜப்பானிற்கான ஸ்ரீலங்கா தூதுவர் தம்மிக்க கங்காநாத் திஸாநாயக்க, கொழும்பிலுள்ள...
பிரான்ஸ்சின் கடற்படை கப்பலான ரெவி நல்லெண்ண பயணமாக ஸ்ரீலங்காவின் திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
Thinappuyal -
பிரான்ஸ்சின் கடற்படை கப்பலான ரெவி நல்லெண்ண பயணமாக ஸ்ரீலங்காவின் திருகோணமலை துறைமுகத்தை சென்றடைந்துள்ளது.
கடற்படையின் பாரம்பரியங்களுடன் குறித்த கப்பலுக்கு வரவேற்பு அளிக்கப்பட்டதாக ஸ்ரீலங்கா கடற்படை தெரிவித்துள்ளது.
இதனையடுத்து கிழக்கு மாகாண கடற்படை தளபதி ரியர் அட்மிரல் ட்ராவிஸ் சின்னய்யாவிற்கும் பிரான்ஸ் கடற்படை கப்பலின் கட்டளையிடும் அதிகாரிக்கும் இடையில் கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது.
கிழக்கு மாகாண கடற்படை கட்டளைக்கான தலைமையத்தில் நடைபெற்ற இந்த கலந்துரையாடலில் மாகாண பிரதி கட்டளை தளபதி மெரில் சுதர்சன உள்ளிட்ட ஏனைய...
நவுறு தடுப்பு முகாமிலுள்ள ஈரானிய பெண் புகலிடக்கோரிக்கையாளர் ஒருவர் தன்னை ஆஸ்திரேலியாவுக்கு அழைத்துச் செல்லுமாறு உருக்கமாக கோரிக்கை விடுத்துள்ளார்.
தான் அங்குள்ள பாதுகாப்பு அதிகாரி ஒருவரால் பாலியல் ரீதியாக துஷ்பிரயோகப்படுத்தப்பட்ட அதேநேரம் காவல்துறையினராலும் தாக்கப்பட்டதாகவும் இவ்விடயம் தொடர்பில் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை எனவும் இவர் குறிப்பிட்டுள்ளார்.
உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்தும் அங்கு இருந்தால் தான் இறந்து போகக்கூடுமென இப்பெண் தெரிவித்துள்ளார். மேலும் இப்பெண் பாதிக்கப்பட்டுள்ளமைக்கான பல ஆதாரங்களும்...
பிணம் எரிக்கும் பணியில் மன நிறைவு கிடைக்கிறது என்று கல்பனாசாவ்லா விருது பெற்ற நாமக்கல் ஜெயந்தி அளித்த பேட்டியில் கூறினார்.
பிணம் எரிக்கும் பணியில் மன நிறைவு கிடைக்கிறது. கல்பனாசாவ்லா விருது பெற்ற நாமக்கல் ஜெயந்தி பேட்டி
நாமக்கல்.
நாமக்கல் நகரில் உள்ள நகராட்சி எரிவாயு தகன மேடையை யுனைடெட் வெல்பர் டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனம் பராமரிப்பு வருகிறது. இங்கு பிணம் எரிக்கும் பணியில் நாமக்கல்லை அடுத்த கூலிப்பட்டியை சேர்ந்த எம்.ஏ....
வெலிக்கடை சிறைச்சாலையை ஹொரணை பகுதியில் அமைப்பது தொடர்பில் அமைச்சரவை அனுமதி கோரப்பட்டுள்ளது.
அமைச்சரவை அனுமதிக்கிடைக்கபெற்றதன் பின்னர் நிர்மாணப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் மீள்குடியேற்ற மற்றும் புனர்வாழ்வு அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்துள்ளது.
ஹொரணை சொரணவத்தை பிரதேசத்தில் 20 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த சிறைச்சாலை அமைக்கப்படவுள்ளது.
இதேவேளை புதுக்கடை நீதிமன்றத்திற்கு அண்மையில் 4 ஏக்கர் நிலப்பரப்பில் தற்காலிகமாக கைதிகளை தடுத்து வைப்பதற்கு தடுப்பு நிலையம் ஒன்று அமைக்கவுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்தார்.
நா.முத்துக்குமாரை மஞ்சள் காமாலை நோய் தாக்கி நீண்ட நாட்களாக சிகிச்சை பெற்று உடல் நிலை ஓரளவு தேறியிருந்த நிலையில் மாரடைப்பு ஏற்பட்டு , அதனை தாங்குவதற்குரிய உடல் வலிமை இல்லாமையால் உடனடியாக மரணம் நிகழ்ந்துள்ளது. அதனால் இந்த மாபெரும் கலைஞனை நாம் இழந்து நிற்கின்றோம். அவரது ஆற்றல்களை பெற முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .
மஞ்சள் காமாலை நோய் தாக்கம் அவ்வளவு கொடியதா? மாற்ற முடியாத – சிகிச்சை அளிக்க...
வாழும் காலம் முடிந்துவிட்டால் சாவு எப்படியெல்லாம் வரும் என்று எதிர்பார்க்கவே முடியாது. இதனை பல சம்பவங்கள் எடுத்துக்காட்டிக்கொண்டிருக்கின்றன.
அவ்வாறே இங்கும் ஒருவர் சற்றும் எதிர்பாராத விதமாக தனது உயிரைப் பறிகொடுத்துள்ளார். தொழிற்சாலை ஒன்றிற்கு சொந்தமான வாகனம் கட்டுப்பாட்டை இழந்து அங்கிருந்த கேட்டுடன் பலமாக மோதியுள்ளது.
இதன்போது கேட் உடைந்து குறித்த நபரின் தலை மீது விழ அவரது தலையும் தரையில் பலமாக அடிபட்டுள்ளது. உடனே அங்கிருந்தவர்கள் ஓடிவந்து அவரை மீட்ட போதிலும்...
விண்ணை முட்டும் கட்டிடக் கலைக்கும், உலகம் வியக்கும் கட்டிடக் கலைக்கும் பெயர் பெற்ற இடமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் டுபாய் திகழ்கின்றது.
இக்கட்டிடக் கலையின் மற்றுமொரு புரட்சியாக நீரில் மிதக்கக்கூடிய அதிசொகுசு வீடுகளை அமைக்க திட்டமிட்டுள்ளனர்.
இதன்படி ஒவ்வொரு வீடும் 50 மீற்றர்கள் நீளமும், 30 மீற்றர்கள் அகலத்தினையும் கொண்டதாக அமைக்கப்படவுள்ளது. இவ் வீடானது 3 மட்டங்களைக் கொண்டதாகவும், அடிப் பகுதி கொங்கிரீட் மூலமே அமைக்கப்படவுள்ளது.
அதற்கு மேலுள்ள பகுதியில் 4...
102 நீர் தேங்கும் பகுதிகளில் 3ல் இரண்டு பிரதேசங்கள் மக்களால் அத்துமீறி சட்டவிரோதமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன – மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார்
Thinappuyal -
மட்டக்களப்பு மாநகர சபை பிரதேசத்தில் இருந்த 102 நீர் தேங்கும் பகுதிகளில் 3ல் இரண்டு பிரதேசங்கள் மக்களால் அத்துமீறி சட்டவிரோதமான கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன என்று மட்டக்களப்பு மாநகர சபை ஆணையாளர் எம்.உதயகுமார் தெரிவித்தார்.
இன்றையதினம் (16) மட்டக்களப்பு பார் வீதி தோணாவை துப்பரவு செய்யும் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் ஆரம்ப நிகழ்வில் தலைமையுரையாற்றும் பொதே அவர் இதனைத் தெரிவித்தார்.
உள்ளுராட்சி மன்றங்களின் கொத்தணி முறையிலான சுத்திகரிப்பு வேலைத்திட்டத்தின் மூன்றாவது கட்டம்...