வடக்கு தனியார் பேரூந்து உரிமையாளர்கள் ஒன்றியமும், ஐந்து மாவட்ட தனியார் போக்குவரத்து பேரூந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோர் கடந்த வியாழன் 12-08-2016 அன்று மாலை 3.30 மணியளவில் வடக்கு மாகாண போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களைச் சந்தித்து மன்னாரில் உள்ள அமைச்சரது உப அலுவலகத்தில் கலந்துரையாடலிலும் ஈடுபட்டனர்.
குறித்த விசேட ஒன்றுகூடலில் வடக்கில் அடுத்த மாதம் அமுலாக்கவுள்ள இணைந்த நேர அட்டவணை தொடர்பாகவும், போக்குவரத்து நியதிச்சட்டம் தொடர்பானதுமான...
மலையக இளைஞர் யுவதிகளுக்கு இயற்கை அனர்த்தத்தின் போது பாதிக்கப்பட்டவர்களை பாதுகாப்பாக மீட்டல் தொடர்பிலான விசேட பயிற்சி செயலமர்வு நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் நடைபெற்றது. பொலிஸ் திணைக்களத்தின் உயிர் பாதுகாப்பு பிரிவின் ஏற்பாட்டில் இப் பயிற்சி செயலமர்வு 15.08.2016 அன்று திங்கட்கிழமை மாலை இடம்பெற்றது.
நோர்வூட் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கமால் அபேசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற இச் செயலமர்வில் நீரில் மூழ்கிய நபரை காப்பாற்றுதல், தீ விபத்தின் போது பாதுகாப்பாக அவ்விடத்திற்கு...
லண்டன் ஈலிங் ஸ்ரீ கனகதுர்க்கை அம்மன் ஆலயத்தில் பெருந்திரளான பக்தர்களுடன் நேற்று இடம்பெற்ற வருடாந்த ரதோற்சவத்திருவிழா பிரித்தானிய ஊடகங்களில் முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.
ரதோற்சவ நிகழ்வை பிபிசி ஊடகம் நேற்று நீண்டநேரமாக ஓளிப்பதிவுசெய்திருந்த நிலையில் பிரித்தானியாவில் அதிகம் விற்பகையாகும் நாளிதழான சண் மற்றும் டெயிலி மெயில் ஊடகங்களும் இந்தநிகழ்வுக்கு முக்கியத்துவத்தை வழங்கியுள்ளன.
கண்கவர் ஓளிப்படங்களுடன் இது குறித்த செய்தியை பிரசுரித்துள்ள சண் மற்றும் டெயிலி மெயில் ஆயிரக்கணக்கான பக்தர்களின் பங்கேற்புடன் வியப்பூட்டும் வகையில்...
சவூதியில் தொழிலை இழந்துள்ள இலங்கையர்களுக்கு 5600 டொலர் நிதியை வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
Thinappuyal -
சவூதி அரேபியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியினால் அங்கு தொழில்வாய்ப்பை இழந்துள்ள இலங்கையர்களின் செலவுகளுக்காக 5600 டொலர் நிதியை வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சு தீர்மானித்துள்ளது.
இந்த நிதியானது சவூதியில் உள்ள இலங்கை தூதுவராலயம் ஊடாக வழங்கப்படவுள்ளதாக இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தின் பணிப்பாளர் உபுல் தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.
தற்போது சவூதியில் 112 இலங்கை பணியாளர்கள் தொழிலினை இழந்துள்ளதாகவும், அவர்களுக்கான தங்குமிட வசதி, உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகள் என்பவற்றுக்கான வசதிகளை இலங்கை வெளிநாட்டு...
'ரிவிர' முன்னாள் பிரதம ஆசிரியர் உபாலி தென்னகோன் தாக்குதல் சம்பவம் தொடர்பில் குற்ற விசாரணை திணைக்களத்திற்கு வாக்கு மூலம் வழங்குவதற்கு மற்றும் குறிப்பிட்ட சந்தேகநபர்களை இனங்காண்பதற்காக தென்னகோன் விரைவில் நாடு திரும்புவதற்கு தீர்மானித்துள்ளார்.
இந்த விசாரணைகளை தொடர்ந்து முன்னெடுப்பது தொடர்பில் தென்னகோனின் வாக்குமூலம் தேவை என்பதோடு நாட்டிற்கு அழைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்க தாக்குதல் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட இராணுவ புலனாய்வு பிரிவின் முன்னாள்...
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டத்தில் மேலோட்டமாக திருத்தங்களைச் செய்வதனால் அதன் ஆபத்து நீங்கிவிடாது என முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லவில் அமைந்துள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசியல் இணைப்புச் செயலகத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்தள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
காணாமல் போனோர் அலுவலகம் தொடர்பில் எழும் எதிர்ப்புக்களை சமாளிக்கும் நோக்கில் மேலோட்டமாக கொண்டு வரப்படும் திருத்தங்களினால் பயனில்லை.
இதனால் இந்த சட்டத்தின் ஆபத்து எந்த...
பிரேசில் நாட்டில் நடைபெற்று வரும் ரியோ ஒலிம்பிக் போட்டியில் அதிக பதங்களை வென்று சீனா மற்றும் அமெரிக்க நாடுகள் தொடர்ந்து முன்னிலை வகுந்து வருகின்றன.
ஆனால், ரியோ ஒலிம்பிக் போட்டியில் இதுவரை இந்தியா ஒரு பதக்கம் கூட வாங்கவில்லை.
இதன் பின்னணி காரணங்கள் என்ன? என்பதை அறிந்துகொள்ள இந்த வீடியோவை பாருங்கள்.
விடுதலைப்புலிகளின் குண்டு தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மூளை பாதிப்பு! – உதய கம்மன்பில
Thinappuyal -
விடுதலைப்புலிகளின் குண்டு தாக்குதலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் மூளை பாதிப்படைந்துள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இதனால், இலங்கையில் இடம்பெற்ற கொடிய யுத்தத்தின் நான்கில் மூன்று பகுதியை தனது ஆட்சியிலேயே முடிவுக்கு கொண்டு வந்ததாக சந்திரிக்கா கூறியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எனினும், சந்திரிகா குமாரதுங்கவின் ஆட்சிக் காலத்திலேயே இராணுவத்தினர் புலிகளிடத்தில் மூன்று முறை தோல்வியடைந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்தும்...
பிரேசிலின் ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெற்று வரும் ஒலிம்பிக் போட்டிகளில், பத்தாம் நாளான இன்று பல முக்கிய சாதனைகள் நிகழ்த்தப்பட்டுள்ளன.
உலகின் வேகமான மனிதரான உசேன் போல்ட், ஆடவர் 100 மீட்டர் ஓட்டப்போட்டியில் வென்றுள்ளார். இந்த போட்டி பிரிவில் ஒலிம்பிக்கில் தொடர்ச்சியாக மூன்று முறை தங்கப்பதக்கம் வென்ற பெருமையை உசேன் போல்ட் படைத்துள்ளார்.
வரவிருக்கும் 200 மீட்டர், 400 மீட்டர் தொடர் ஓட்டம் ஆகியவற்றிலும் பலரின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும்...
மட்டக்களப்பு வாகரை கண்டலடி அருள்மிகு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தின் வருடாந்த அலங்கார உற்சப் பெருவிழாவின் மூன்றாம் நாளாகிய இன்றைய தினம் பாற்குடப் பவனி வெகு சிறப்பாக இடம்பெற்றது.
பாற்குட பவனி புளியங்கண்டலடி முத்துமாரியம்மன் ஆலயத்தில் இருந்து ஆரம்பமாகி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்தை வந்தடைந்ததும் விஷேட அபிசேக ஆராதனைகள் இடம்பெற்றன.
பாற்குட பவனி நிகழ்வில் பெண்கள் மற்றும் ஆண்கள் என பலர் கலந்துகொண்டதுடன் நடைபெற்ற பூஜை வழிபாடுகளிலும் கலந்துகொண்டனர்.
ஆலயத்தின் வருடாந்த...