கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்களது சொந்த வாழ்விடத்திற்கான போராட்டம் மூன்றாவது நாளாகவும் இன்று தொடர்ந்துள்ளது. பரவிப்பாஞ்சான் மக்களது வீடுகளில் இராணுவத்தினர் உல்லாசமாக இருக்க, அந்த வீடுகளின் சொந்த மக்கள் தமது குழந்தைகளுடன் வீதியில் அவலப்படுகின்றார்கள். பரவிப்பாஞ்சானில் காலங்காலமாக வாழ்ந்த மக்களின் காணிகளை இராணுவத்தினர் கையகப்படுத்தி வைத்துள்ளனர். நாட்டில் நல்லாட்சி ஏற்பட்டுள்ள போதிலும் மக்களிடம் காணிகள் கையளிக்கப்படாத நிலையில் தமது சொந்த காணிகளை மீளவும் வழங்க வேண்டும் என கோரி பரவிபாஞ்சான் மக்கள் தொடர் போராட்டத்தில்...
இலங்கையில் திருநங்கைகள் விடயத்திலும் பாரபட்சம் காட்டப்படுவதாக அமெரிக்காவை தளமாகக்கொண்ட மனித உரிமைகள் கண்காணிப்பகம் குற்றம்சாட்டியுள்ளது. பாலின அடிப்படையிலும், பாலுணர்வின் அடிப்படையிலும் இலங்கையில் குறித்த திருநங்கைகள் பாரபட்சமாக நடத்தப்படுகின்றனர். பலவந்தம், தொழில்வாய்ப்பில் முன்னுரிமையின்மை உட்பட்ட விடயங்களில் அவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர். இந்நிலையில் இது குறித்து இலங்கை அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் என்று கண்காணிப்பகம் கோரிக்கை விடுத்துள்ளது.
கேரளாவில் இருந்து இலங்கையின் ஊடாக ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாதிகளுடன் இணைவதற்காக இளைஞர் யுவதிகளை அனுப்பிய குற்றச்சாட்டின்பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இந்திய ஊடகம் ஒன்று இதனை தெரிவித்துள்ளது.கேரளாவில் வைத்து இவரை ஐ.எஸ் ஐ.எஸ் தீவிரவாதிகள் தொடர்பான விசாரணைகளை பொறுப்பேற்றுள்ள மும்பை காவல்துறையினர் கைது செய்துள்ளனர் கேரளாவில் இருந்து 21 பேர் இலங்கையின் ஊடாக சிரியாவின் தீவிரவாதிகளுடன் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன. இந்தநிலையில் அவர்களில் 10 பேரை தீவிரவாதிகளுடன் இணைத்த குற்றச்சாட்டின் பேரிலேயே குறித்த சந்தேகநபர்...
ஊவா பரணகமை பிளேலெமன்ட் தோட்ட மக்கள் ரத்னோதாகம முருகன் ஆலய முன்றலில் உண்ணாவிரத போராட்டதில் ஈடுபட்டுள்ளதோடு பணி பகிஷ்கரிப்பிலும் ஈடுபட்டுள்ளனர். ஊவா பரணகமை ரத்னோதாகம முருகன் ஆலயத்தின் அரண் ஒன்றை அமைப்பதற்கு முற்பட்ட போது பெரும்பான்மையின பிரதேசவாசிகளுக்கும் கோயில் நிர்வாகத்தினருக்குமிடையே அமைதியின்மை ஏற்பட்டது. குறித்த அரண் அமைக்கப்படுவதால் பிரதேசவாசிகளின் வீதியொன்றுக்கு இடையூறு ஏற்படுவதாக அவர்கள் தெரிவித்த போதும், கோயில் நிர்வாகத்தினர் இதனை மறுக்கவே இந்நிலைமை ஏற்பட்டுள்ளது. பிரதேச செயலாளர், பொலிஸார் இணைந்து நிலைமையை...
சிகிச்சைக்கு பணம் இல்லாததால் நா.முத்துக்குமார் உயிரிழந்ததாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது. பிரபல பாடலாசிரியர் நா.முத்துக்குமாரின் மறைவு தமிழ் சினிமாவை மட்டுமல்லாது ஒட்டுமொத்த தமிழகத்தையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. மஞ்சள் காமாலை நோயால் கடந்த சில மாதங்களாகவே பாதிக்கப்பட்டிருந்த முத்துக்குமார், அந்த வேதனையிலும் தன்னை நம்பி வந்தவர்களுக்கு இடைவிடாது பணிகளை செய்து முடித்துக் கொடுத்து வந்துள்ளார். ஆனால், அவருடைய நேர்மை அவருக்கு கைகொடுத்ததா? என்றால் அது இல்லை என்றுதான் சொல்லவேண்டும். இவர் இதுவரை தமிழ் சினிமாவில் 1500-க்கும்...
உசேன் போல்ட் அல்லது யூசைன் போல்ட் என்கின்ற வேகமான வீரர் ஜமேக்காவில் பிறந்த தடகள ஓட்ட வீரர். இவர் பல்வேறு வகையிலும் சிறப்பான சாதனைகளை தடகளத்தில் பதித்துள்ள ஓர் சாதனை வீரர் என்றே கூற வேண்டும். மதிய உணவிற்காக ஓட்டத்தை கையிலெடுத்தவர் இவர். இவரது ஓட்டப்பாதை வரலாறு மிக மிக சுவாரசியம் மிக்கதொரு கதை. இவரது விரைவோட்ட சாதனைகள் இவருக்கு 'மின்னல் வேக போல்ட்' என்ற ஊடகப் புனைப்பெயரையும். வழங்கப்பட்டிருந்தது. இவரின்...
பொலிஸ் என்றாலே கொடூரமானவர்கள், இரக்கம் இல்லாதவர்கள் என்றே பல இடங்களில் சித்தரிக்கப்படுகிறது. அவர்களிலும் நல்லவர்களளும் இருக்கத்தான் செய்கின்றனர். அப்படிப்பட்டவர்களாலேயே இந்த உலகம் ஓடி கொண்டிருக்கிறது. தன்னுயிர் பாராது , தன் குடும்பம் பற்றி நினைக்காது , நேரம் காலம் பார்க்காமல் கடமை தவறாத பொலிஸ்காரர்களை நம் வாழ்க்கையில் கேள்விப்பட்டு கொண்டு தான் இருக்கின்றோம். அவர்களுக்குள்ளும் இளகிய மனதுண்டு என்பதற்கு சான்று இக்காட்சியாகும். வாத்து குஞ்சு ஒன்று கால்வாய் ஒன்றில் விழுந்துவிட்டதால் தாய்...
  இரண்டாம் இணைப்பு தமிழ் மக்களுடைய அரசியல் தீர்வு மற்றும் அடிப்படை பிரச்சினைகள் விடயத்தில் அமெரிக்காவின் பங்களிப்பு மிகவும் அவசியமாகும் என அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் அத்துல் கேஷாப்பிடம் தாம் சுட்டிக் காட்டியுள்ளதாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை எதிர்கட்சி தலைவருமான இரா.சம்பந்தன் கூறியிருக்கின்றார். தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற பிரதிநிதிகளுக்கும், அமெரிக்காவின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகருக்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இன்றைய தினம் மாலை 4.50 மணி தொடக்கம் 6.00 மணி...
  கிராமிய பொருளாதார அமைச்சின் கீழ் வவுனியா மாவட்டத்திற்கான பொருளாதார அபிவிருத்தி மையத்தை, வவுனியா தாண்டிக்குளத்தில் அமைப்பதா அல்லது ஓமந்தை நகரில் அமைப்பதா என்று இழுபறியில் இருந்து வந்த பிரச்சினைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.   மதகுவைத்தகுளத்தைப் பார்வையிட்ட அமைச்சர்களும், அதிகாரிகளும் இன்று வவுனியாவுக்கு விஜயம் செய்த கிராமிய பொருளாதார அமைச்சர் பி.ஹரிசன் மற்றும் கைத்தொழில் வர்த்தகத் துறை அமைச்சர் ரிசாட் பதியுதீன் ஆகியோர் வடமாகாண முதலமைச்சரின் பிரதிநிகளாக வருகை தந்திருந்த...
தமிழ் மக்களுக்கு கிடைக்கும் அபிவிருத்திகளை அரசியல் வாதிகள் குழப்.புவது என்னைப்பொருத்தமட்டில் புது விடையம். அல்ல வவுனியா பொருளாதார மத்தியமையம் அமைப்பது தொடர்பிலும் அவ்வாறே நடந்துள்ளது-சிறி டெலோ கட்சியின். செயலாலர் நாயகம் உதயராசா