காணாமல் போனவர்களை கண்டறியும் செயலகம் ஒன்றை ஸ்தாபிப்பதற்காக சட்டமூலத்தை கொண்டு வர சர்வதேசம் அழுத்தம் கொடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் கெஹெலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார். சட்டமூலத்தை கொண்டு வர சர்வதேசம் அழுத்தங்களை கொடுக்கவில்லை. இப்படியான சட்டமூலத்தை கொண்டு வர வேண்டும் என்று இலங்கை அரசே சர்வதேசத்திற்கு அழுத்தம் கொடுத்தது. போருக்குப் பின்னர் சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களுக்கு அரசு என்ற வகையில் தனித்து பதில்களை...
விடுதலைப்புலிகள் அமைப்பினரின் யுத்தம் ஆரம்பிக்கப்பட்டபோது இலங்கை அரசானது அமெரிக்க ஏகாதிபத்திய வல்லரசோடும் ஏனைய உலக வல்லாதிக்க சக்திகளோடும் இணைந்து அவ்வமைப்பைப் பயங்கரவாத அமைப்பென முத்திரைகுத்தி நின்றதோடு அதை நசுக்குவதற்குப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தையும் அமுல்படுத்தியது. யுத்தத்தின் முற்கூற்றில் விடுதலைப் புலிகளின் பலம் மேலோங்கி நின்றதில் இத்தடைச்சட்டத்தின் மூலம் இலங்கையரசினால் எண்ணிக்கொண்ட தற்கியைபாகப் பெரிதாக எதையும் சாதிக்க முடியவில்லை. இவ்வாறே யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதிக்குள் இத்தடைச் சட்டத்தைப் பயன்படுத்தி விடுதலைப்புலி உறுப்பினர்களை இலங்கையரசினால்...
தமிழ் மக்களுடைய தீர்வுத் திட்டத்தைப் பொறுத்தவரையில் 03தசாப்த காலங்களாக ஏமாற்றப்பட்டுவந்தமை ஒருபுறமிருக்க, தமிழ்த் தரப்புகளுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தும் வகையிலேயே அரசாங்கங்கள் செயற்பட்டு வந்திருந்தமை வரலாறு. போராட்டத்தின் ஆரம்ப காலகட்டத்தில் ஒரே குறிக்கோளோடு புறப்பட்ட தமிழ் ஆயுதக்குழுக்கள் தமி ழீழம் என்கிற கோரிக்கையினையே முன்வைத்தனர். ஆனால் அது கைகூடவில்லை. தமிழ் மக்களுக்கு ஏற்படுத்தப்பட்ட அநீதிகளின் அடிப்படையிலேயே போர் உச்சக்கட்டத்தினை அடைந்தது. 1987 காலப்பகுதியில் தமிழ் மக்களுக்கானத் தீர்வுகள் கிடைக்கும் என...
உண்ணாவிரதமிருத்தல் என்று கூறுவது வெறுமனே வார்த்தையல்ல. ஒரு நாட்டின் அல்லது சமூகத்தின் விடுதலைக்காக, ஏதோவொரு காரணத்தை நோக்காகக்கொண்டு உயிரைக்கூட துச்சமாகக்கருதி உணவு, ஆகாரம் ஏதுமின்றி தான்கொண்ட இலட்சியத்தில் உறுதி தளராமல் மேற்கொள்ளப்படுவதே உண்ணாவிரதமாகும். இவ்வாறான உண்ணாவிரதங்களை மேற்கொண்ட வர்களின் வரிசையில் உலக அளவில் இன்றும் பேசப்படுபவர்கள் ஒருசிலரே. அவ்வரிசையில் ஒரு நாட்டின் விடுதலைக்காக வெள்ளையர்களை எதிர்த்து உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்ட மகாத்மா காந்தியடிகளை இன்றும் உலகம் போற்றுகின்றது. அதேபோல ஈழத்திலே இந்திய...
ஜேர்மனி நாட்டில் அரசாங்க அதிகாரிகளுக்கு தெரிந்து ஆயிரத்திற்கும் அதிகமான குழந்தை திருமணங்கள் நடந்துள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜேர்மனி நாட்டு நீதித்துறை அமைச்சரான Heiko Maas  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதிலும் ‘கடந்த 18 மாதங்களில் ஜேர்மனி நாட்டிற்குள் புலம்பெயர்ந்து வந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் வயது மூத்தவர்களை திருமணம் செய்துள்ள சம்பவம் அதிகரித்துள்ளது. அரசு அதிகாரிகளுக்கு தெரிந்து இந்த எண்ணிக்கை பதிவு செய்யப்பட்டிருந்தாலும், பதியப்படாத எண்ணிக்கை இதனைவிட கூடுதலாக இருக்கும். 11 வயது...
காணாமல் போனோர் தொடர்­பான பிரச்­சினை உட­ன­டி­யாகத் தீர்க்­கப்­ப­ட­வேண்­டிய மனி­தா­பி­மானப் பிரச்­சி­னை­யா­க­வுள்­ளது. எனினும் இப்­பி­ரச்­சினை இது பல­ருக்கு பல­வி­த­மான வடி­வங்­களில் தென்­ப­டு­கின்­றது. பாதிக்­கப்­பட்ட மக்­களைப் பொறுத்­த­ளவில் அவர்­க­ளது உற­வுகள் மீள­வேண்டும், காணாமல் செய்­யப்­பட்­டோரின் நிலை என்ன என்ற கேள்­விகள் கொண்­ட­தாக உள்­ளன. இதனை அண்­மையில் வெளி­யா­கிய சர்­வ­தேச செஞ்­சி­லுவைச் சங்­கத்தின் அறிக்கை கூட மீளவும் நினை­வு­றுத்­தி­யி­ருந்­தது. இதே­வேளை மஹிந்த ராஜ­பக் ஷ தலை­மை­யி­லான அணி­யி­னரைப் பொறுத்­த­ளவில் படை­யி­னரைக் காட்­டிக்­கொ­டுக்கும் முயற்­சி­யினை அர­சாங்கம்...
இலங்கையுடன் மிக முக்கியமான உறவு காணப்படுவதாக பாகிஸ்தான் பிரதம நீதியரசர் அன்வர் சாஹிர் ஜமாலி தெரிவித்துள்ளார். இரு தரப்பு மற்றும் பிராந்திய அடிப்படையில் இலங்கையுடனான உறவுகளுக்கு பாகிஸ்தான் கூடுதல் முக்கியத்துவம் வழங்கி வருவதாகத் தெரிவித்துள்ளார். இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக் கொள்ள ஆர்வம் காட்டி வருவதாகத் தெரிவித்துள்ளார். நல்லிணக்கம், இனங்களுக்கு இடையில் சகவாழ்வு மற்றும் தேசிய ஐக்கியம் ஆகியனவற்றை ஏற்படுத்துவதில் அரசாங்கம் காட்டி வரும் சிரத்தை வரவேற்கப்பட வேண்டியது என அவர்...
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் உருவப்படம் பொறிக்கப்பட்ட ரீசர்ட்கள் மீட்கப்பட்டுள்ளன. கண்டி சிட்டி சென்டர் கடைத் தொகுதியில் இவ்வாறு ரீசர்ட்கள் மீட்கப்பட்டுள்ளன. இந்த சம்பவம் தொடர்பில் கண்டி காவல்துறையினர் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். விற்பனை செய்வதற்காக கொண்டு வரப்பட்ட ஆடைத் தொகுதியில் பிரபாகரனின் உருவப் படம் பொறிக்கப்பட்ட ரீசர்ட்களும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த துணி வகைகளை அனுப்பி வைத்த நபரிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட உள்ளது.
ஐக்கிய தேசியக்கட்சியின் கிளைக் காரியாலயமாகவே நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு இயங்கி வருவதாக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு ஓர் காவல்துறைப் பிரிவு அல்ல எனவும் அது சிறிகொத்தவின் ஓர் கிளை எனவும் அவர் தெரிவித்துள்ளார். கினிகத்தேனவில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் சபைக் கூட்டத்தின் பிரதம விருந்தினராக ஜனாதிபதி பங்கேற்பதாகத் தெரிவித்துள்ளார். காவல்துறை மா அதிபரும் ஐக்கிய தேசியக்...
அடுத்த ஆண்டு உள்ளுராட்சி மன்றங்கள் மற்றும் மாகாணசபைகள் தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் மட்டுமன்றி சில மாகாண சபைகளின் தேர்தல்களும் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுடன் நடத்தப்பட்ட சந்திப்பின் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். உள்ளுராட்சி மன்றத் தேர்தல்கள் எதிர்வரும் ஆண்டு ஆரம்பத்தில் நடைபெறும் என அவர் குறிப்பிட்டுள்ளார். கிழக்கு, சபரகமுவ மற்றும் வடமத்திய மாகாண சபைகளின் தேர்தல்கள்...