ரியோ ஒலிம்பிக்கில் வெற்றி, தோல்வி மற்றும் உலக சாதனைகள் என்று விறுவிறுப்பாக இடம்பெற்றுக்கொண்டிருக்கும் நிலையில், சுவாரஷ்யமான சம்பவங்களும் அவ்வப்போது இடம்பெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. அதே போன்ற சுவாரஷ்யமான சம்பவம்  பதிவாகியுள்ளது. ரியோ ஒலிம்பிக்கின் ஜிம்னாஷ்டிக் போட்டியில் வெள்ளி பதக்கத்தை வென்ற சீன வீராங்கனை ஈ ஷிவுக்கு, அதே நாட்டை சேர்ந்த “டைவிங்” வீரர் குயின் கை  பதக்க மேடையில் வைத்து திருமண விருப்பத்தினை தெரிவித்துள்ளார். இரத்தினத்திலான மோதிரம் ஒன்றை ஈ ஷிவுக்கு அணிவித்து தனது...
இனப்படுகொலைகளை தடுக்கத் தவறும் பட்சத்தில் அவை பிற்காலத்தில் பன்மடங்கு மூர்க்கமான இனப்படுகொலைகளுக்கு வழிவகுத்திருக்கின்றன என்ற வரலாற்று உண்மையை 1977 தமிழ் இனப்படுகொலை உணர்த்துகிறது. ஈழத் தமிழ் மக்களின் வரலாற்றில் மற்றுமொரு இருண்ட நாள் 1977. முதன் முதலில் இலங்கைத் தீவில் தமிழ் மக்களுக்கு எதிராக பாரிய இன அழிப்பு கலவரம் மேற்கொள்ளப்பட்ட நாளாகும். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் வடக்குக் கிழக்குப் பகுதியில் போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கட்சியான தமிழர் விடுதலைக்...
  இந்தியாவின் 70வது சுதந்திர தினத்தை ஒட்டி, டெல்லிசெங்கோட்டையில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடிஇன்று கொடியேற்றினார். நாட்டின் 70வது சுதந்திர தினம் இன்றுஉற்சாகமாகக் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, தலைநகர்டெல்லியில் செங்கோட்டை மைதானத்தில் பிரதமர் மோடி,தேசியக் கொடியை ஏற்றி வைத்து சுதந்திர தின உரையாற்றினார்.முன்னதாக முப்படையினரின் அணிவகுப்பு மரியாதையைஅவர் ஏற்றார். இந்த விழாவில் முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அத்வானி,அமித்ஷா உள்ளிட்ட பாஜக மூத்த தலைவர்கள் உள்பட பல்வேறுஅரசியல்...
நியூயார்க் விமான நிலையத்தில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக தகவல்கள் பரவியதைத் தொடர்ந்து ஜோன் எப் கென்னடி விமான நிலையத்திலிருந்து பயணிகள் வெளியேற்றப்பட்டனர். விமான நிலையத்தின் 8வது முனையப் பகுதியில் துப்பாக்கிச் சத்தம் கேட்டதாக தகவல்கள் கூறுகின்றன. விமானங்கள் புறப்படும் பகுதியிலிருந்து சத்தம் கேட்டதாகவும் கூறப்படுகிறது. அமெரிக்க நேரப்படி ஞாயிற்றுக்கிழமை இரவு 9. 30 மணிக்கு இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
இந்த மாத இறுதியில் பான் கீ மூன் இலங்கை பயணம் செய்ய உள்ளதாக அரசாங்கத் தகவல்கள் தெரிவித்துள்ளன. கடந்த ஜூன் மாதம் பான் கீ மூன் இலங்கைக்கு விஜயம் செய்வார் என முன்னதாக அறிவிக்கப்பட்டிருந்தது. பான் கீ மூனுக்கு பாதுகாப்பு வழங்குவது குறித்து ஐக்கிய நாடுகள் அமைப்பின் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுடன் அரசாங்க அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.
கிளிநொச்சி பரவிப் பாஞ்சானில்  இராணுவத்தினரிடம் உள்ள தமதுகாணிகளை விடுவிக்கக் கோரி இரண்டாவது நாளாகவும் இரவு பகலாக தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் நடைபெற்றுக் கொண்டிருப்பதனை செய்தி சேகரிக்கச்சென்ற பிராந்திய செய்தியாளார்கள் நால்வருக்கு இராணுவத்தினரால் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிறு  இரவு எட்டு இருபது மணியளவில்   செய்திசேகரிக்கச் சென்ற கிளிநொச்சியின் நான்கு பிராந்திய செய்தியாளர்களை துப்பாக்கியுடன் வந்த இராணுவத்தினர்  தம்மை படம் எடுத்ததாக கூறி அச்சுறுத்தியதாக கிளிநொச்சிப் பொலிஸ்  நிலையத்தில் குறித்த ஊடகவியலாளர்களால் முறைப்பாடு...
அரசினால் விதிக்கப்பட்டுள்ள நிர்ணய விலையை மீறி பொருட்களை விற்பனை செய்த 12,000 வர்த்தகர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை தெரி வித்துள்ளது. கடந்த ஜனவரி மாதம் முதல் ஓகஸ்ட் மாதம் 6ஆம் திகதி வரை நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்புகள் மூலம் 12,000 வர்த்தகர்களிடம் அபராதப் பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் இதில் கொழும்பு நகரில் மாத்திரம் 50 மில்லியனுக்கு அதிகமான அபராதப்பணம் அறவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். அத்துடன்...
குமாரபுரம் படுகொலைச் சம்பவத்திற்கு எதிரான சாட்சிகள் அடையாளம் காணப்பட்டிருந்த போதும் சந்தேகநபர்களை குற்றமற்றவர்கள் என விடுதலை செய்துள்ளமை மக்கள் மத்தியில் சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில், குறித்த வழக்கை மேன்முறையீடு செய்வதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தயாராகி வருகின்றது. வவுனியாவில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் ஊடகப் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் இவ்விடயத்தைக் கூறியுள்ளார். சம்பவத்தை நேரடியாக கண்டவர்கள் சுமார் 20 வருடங்களுக்குப் பிறகு...
இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில், டெங்கு நோயினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக உயர்வடைந்துள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 34,500 பேர் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவின் விசேட சமூக வைத்திய நிபுணர் பிரஸிலா சமரவீர தெரிவித்தார். கடந்தவருடம் 29,000 டெங்கு நோயாளர்கள் பதிவாகியதாகவும், அதனுடன் ஒப்பிடும் போது இந்த வருடம் அதிகரிப்பு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.டெங்கு நோயினால் பீடிக்கபட்டவர்களின் எண்ணிக் கொழும்பு, கம்பஹா,களுத்துறை,கண்டி,மாத்தறை,காலி,குருணாகல்...
அமெரிக்கா, இலங்கை  நாடுகளுக்கிடையில் நட்புறவு ரீதியான ஒற்றுமையினை வலுப்படுத்தும் முகமாக இன்று திங்கட்கிழமை அமெரிக்கா நாட்டின் 40 பேர்கொண்ட விசேட மருத்துவ குழுவினர்கள் யாழ். குடாநாட்டிற்கு விஜயமொன்றினை மேற்கொண்டுள்ளனர். குறித்த குழுவினர் ஐந்து நாட்களுக்கு யாழ். குடாநாட்டில் தங்கியிருப்பதுடன் யாழ். பாதுகாப்புப் படைத்தலைமையகத்தின் ஒழுங்கமைப்பில் இடம்பெறும் நடமாடும் மருத்துவ சேவையிலும் கலந்து கொள்ளவுள்ளனர். கோப்பாய் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வளலாய் இடைக்காடு மகாவித்தியாலத்தில் இன்று காலை இடம்பெற்ற நடமாடும் மருத்துவ முகாமில்...