இம்முறை ஹஜ் கடமைகளுக்காக சவுதி அரேபியா செல்ல இலங்கையிலிருந்து 2240 பேர் தகுதி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் முதலாவது குழுவினர் சவுதியின் ஜெடா நகரை நோக்கி புறப்பட்டு சென்றுள்ளதாகவும், இலங்கைக்கான சவுதியின் தூதுவர் உள்ளிட்ட 62 அதிகாரிகளால் குறித்த குழு சவுதியில் வைத்து வரவேற்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை மக்காவில் இடம்பெற்று வரும் அபிவிருத்தி நடவடிக்கைகளினால் ஹஜ் யாத்திரிகர்களின் எண்ணிக்கை இம்முறை வெகுவாக குறைவடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டதாக வெளி வரும் தகவல்களை மறுப்பதாக புனர்வாழ்வு ஆணையாளர் மேஜர் ஜெனரல் ஜானக ரத்னாயக்க தெரிவித்து ள்ளார். மேலும் ஒரு தரப்பினரால் மாத்திரம் முன்வைக்கப்படும் குறித்த குற்றச்சாட்டானது உண்மையில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.சிங்கள ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த குற்றச்சாட்டை முன்வைக்கும் நபர்கள் அதனை நிரூபிக்குமாறும் தான் சவால் விடுவ தாக ஆணையாளர்...
மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் தற்போது கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மாணவர்க ளுக்கு நட்டஈடு  வழங்குவதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும் நட்டஈடு பணத்தைக் கொண்டு மாணவர்கள் தமது வைத்திய பட்டப்படிப்பை வெளிநாடுகளில் கற்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என அகில இலங்கை வைத்தியர் சங்கம் சுட்டி க்காட்டியுள்ளது. அத்துடன் குறித்த நட்டஈட்டு பணம் வழங்கப்பட்டதன் பின்பு மாலபே வைத்திய...
மன்னார் மடு மாதா தேவாலயத்தின் ஆவணி மாதத் திருவிழா இன்று கொழும்பு மறைமாவட்ட பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தலைமையில் நடைபெற்றது. மன்னார் மறைமாவட்ட அப்போஸ்தலிக்க பரிபாலகர் ஜோசப் கிங்சிலி சுவாமிப்பிள்ளை ஆண்டகை உட்பட கண்டி மறைமாவட்ட ஆயர் வியானி பெர்ணாண்டோ ஆண்டகை, காலி மறைமாவட்ட ஆயர் றேமன் விக்கிரமசிங்க ஆண்டகை, அனுராதபுரம் மறைமாவட்ட ஆயர் நோபட் ஆண்டகை போன்றோர் இணைந்து திருவிழா கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றியுள்ளனர். இம்முறை திருவிழாவில்...
பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணைப்பிரிவினரால் சற்றுமுன்னர் கைது செய்யப்பட்டுள்ளார் நாமல் ராஜபக்சவுக்கு சொந்தமான நிறுவனம் ஊடாக முறைகேடாக கிடைத்த பணத்தில் ஹேலோகோப் நிறுவனத்தின் பங்குகளை கொள்வனவு செய்தமை சம்பந்தமாக நடத்தப்படும் விசாரணைகளுக்கு அமையவே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் நிறுவனம் ஒன்றின் 125 மில்லியன் ரூபா பெறுமதியான பங்குகளை கொள்வனவு செய்தமை தொடர்பான விசாரணைகளுக்காக நாமல் ராஜபக்ச இன்று நிதி மோசடி விசாரணைப் பிரிவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவிற்கு எதிராக, சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்ப நடவடிக்கை எடுத்து வருவதாக, பாராளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்து ள்ளார். யுத்தத்திற்காக தாக்குதல் விமானங்களை கொள்வனவு செய்ததில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ நிதி மோசடி செய்துள்ளதாக, நேற்று சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க கருத்து வௌியிட்டிருந்தார். இந்த அபகீர்த்தியான கருத்துக்கு எதிராகவே இவ்வாறு கடிதம் அனுப்பவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், இது குறித்து தான் கோட்டாபயவுடன்...
யாழ். இராமநாதன் அக்கடமியின் 2016ஆம் ஆண்டிற்கான புதிய மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்று காலை 9 மணியளவில்  நடைபெற்றது.  சங்கீதம், சித்திரம், நடனம் போன்ற பாடங்களை உள்ளடக்கிய கலைத்துறையில் 2014ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சையில் தோற்றி இராமநாதன் அக்கடமிக்கு தெரிவானவர்களுக்கான நிகழ்ச்சி திட்டமாக இது அமைந்திருந்தது. இவர்களுக்கான பாட விரிவுரைகள் எதிவரும் 22 ஆம் திகதி ஆரம்பி க்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
யாழில் இந்திய துணை துதரகத்தின் எற்பாட்டில் இந்தியாவின் சுதந்திர தின விழா யாழ் றக்கா வீதியில் அமைந்துள்ள இந்தியன் ஹவுஸ்சில் இன்று காலை இடம்பெற்றது. இந்திய துணைத்தூதுவர் ஆ.நடராஜன் தலைமையில் இந்தியாவின் 70 ஆவது சுதந்திரதினம் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. குறித்த நிகழ்வில் உயர் அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
இலங்கை இந்திய வர்த்தக பொருளாதார ஒப்பந்தம் தொடர்பான முதற்கட்ட பேச்சுவார்த்தைகள் இரு நாடுகளுக்கிடையிலான இணக்கப்பாட்டின் மூலம் வெற்றியடைந்துள்ளதாகவும் விரைவில் குறித்த ஒப்பந்தத்திற்கான இறுதிக்கட்ட நகர்வுகளும் மேற்கொள்ளப்படும் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் வை.கே சின்ஹா தெரிவித்தார். இந்தியாவின் 70 ஆவது சுதந்திரதினம் இன்று கொழும்பில் அமைந்துள்ள இந்திய உயர்ஸ்தானிகரகத்தில் விசேட நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. குறித்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  உலக பொருளாதாரத்தில்...
உச்ச நீதிமன்ற முன்னாள் நீதியரசர் சரத் டி ஆப்ரூ, இன்று (திங்கட்கிழமை) காலை தமது வீட்டிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார். ரத்மலானையில் உள்ள அவரது வீட்டின் மேல்மாடியிலிருந்து அவர் தவறி விழுந்த நிலையில், களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக களுபோவில வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.