அரசாங்கம் மதுபாவனை மற்றும் சிகரட் வட்வரியை 90 வீதமாக அதிகரிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து மதுசாரம் மற்றும் புகைத்தல் விளம்பரங்களை அம்பலப்படுத்தும் இளைஞர் அணியினரின் ஏற்பாட்டில் போதைப்பொருள் எதிர்ப்பு தொடர்பான விழிப்புணர்வுடன் கூடிய ஆர்ப்பாட்டப் பேரணியொன்று நோர்வூட் பொயிஸ்டன் தோட்டத்தில் 15-8-2016 அதாவது இன்றைய தினம் திங்கட்கிழமை  முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்வில் மது ஒழிப்பு தொடர்பிலான வீதி நாடகங்களும் இடம்பெற்றன. இதில் பெரும்பாலான இளைஞர் யுவதிகள் கலந்துகொண்டனர். சுகாதார அமைச்சரும் கௌரவ ஜனாதிபதி...
மஹிந்த தலைமையிலான கூட்டு எதிர்க்கட்சியினர்அரசியலில் புது ஓட்டையை உருவாக்குவதாக ம.வி.முன்னணியின் உறுப்பினர் விமல் ரட்நாயக்க தெரிவித்தார்.கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில், மக்கள் விடுதலை முன்னணிக்கும் கூட்டு எதிர்க்கட்சியினருக்கும் இடையில் எந்த டீலும் இல்லை. ரணில் விக்ரமசிங்கவுக்கும் கூட்டு எதிர்க்கட்சிக்குமே டீல் உள்ளது. கடந்த கால கடவுச்சீட்டு விவகாரங்களில் இது தெளிவாகியுள்ளது. மக்கள் விடுதலை முன்னணியின் செயற்றிட்டமானது கூட்டு எதிர்க்கட்சிக்கும் சாதகமாக இருப்பதாக...
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஒழுக்க சட்டக்கோவை விரைவில் உருவாக்கப்படுமென ஊடக பிரதியமைச்சர் கருணாரத்ன பரணவிதாரண தெரிவித்துள்ளார். குறித்த சட்டமூலத்திற்கான ஆவணங்கள் ஏற்கனவே தயார்செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள பிரதியமைச்சர், வெகு விரைவில் அது சட்டமாக்கப்படுமென தெரிவித்தார். அண்மைய காலமாக நாடாளுமன்றில் அதன் உறுப்பினர்கள் செயற்படும் விதமானது பல விமர்சனங்களை தோற்றுவித்துள்ளதோடு, சபாநாயகர் இதற்கு கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார். ஒரு உயரிய சபையில் இவ்வாறு நடந்துகொள்வதானது, நாட்டு மக்களின் நகைப்பிற்கு உள்ளாகும் செயலென தெரிவித்துள்ள சபாநாயகர்...
மூன்றரை வயது சிறுமியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்த முயன்றார் எனத் தெரிவித்து 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டான். வடமராட்சி துன்னாலைப் பகுதியில் நேற்று இடம்பெற்ற இந்ந சம்பவம் தொடர்பில் குறித்த சிறுமியின் தாயார் நெல்லியடி பொலிஸாருக்கு செய்த   முறைப்பாட்டை அடுத்து குறித்த சிறுவன் கைது செய்யப்பட்டான்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினால், கால்டன் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமாக உரிமை கோர முடியாத மேலும் 572.8 மில்லியன் ரூபா சொத்துக்கள் இருப்பதை பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் கண்டுபிடித்துள்ளனர். ஒளிப்பரப்பு உபகரணங்களுடன் கூடிய 80 மில்லியன் ரூபா பெறுமதியான நடமாடும் ஒளிப்பரப்பு ட்ரக் வாகனம், லங்கா ஒரிக்ஸ் லீசிங் நிறுவத்தின் இலக்கம் 2200060234 என்ற கணக்கில் இருக்கும் 6 மில்லியன் ரூபா பணம், ஹம்பாந்தோட்டை சிறிபோபுர...
சமஸ்டி அடிப்படையில் இணைந்த வடக்கு கிழக்கில் எங்களுடைய இறைமையின் அடிப்படையில் பகிரப்படுகின்ற அரச அதிகாரங்களின் மூலமாக ஒரு தீர்வு ஏற்படுத்தப்படவேண்டும் என்பதே தொடர்ச்சியாக நாம் இன்றும் கொண்டுள்ள நிலைப்பாடு அது தொடர்ந்தும் இருக்கும்.முன்னாள் போராளிகளின் மரணம் பாரதூரமான விடயம் எனவும் இதனை இலகுவாக புறக்கணித்து செல்ல முடியாது எனவும் தமிழரசுக் கட்சி தெரிவித்துள்ளது. முன்னாள் போராளிகள் அதிகளவில் மரணிப்பதாக வந்த செய்திகளை மிகவும் தீர்க்கமாக ஆராய்ந்து கொண்டிருப்பதாக தமிழரசுக் கட்சியின்...
க.பொ.த உயர்தர பரீட்சையில் வெளிமாவட்டங்களில் இருந்து மாணவர்கள் குறைந்த வெட்டுப்புள்ளி அடிப்படையில் பல்கலைக்கழகத்திற்கு புள்ளிகளைப்பெரும் நோக்கில் நுவரெலியா மாவட்டம் உட்பட பல மாவட்டங்களில் பரீட்சைக்குத் தோற்றியுள்ளமை காரணமாக எழுந்துள்ள பிரச்சினைக்கும் எதிர்காலத்தில் இதற்கு முற்று புள்ளிவைக்கும் நோக்கில் பரீட்சை திணைக்களத்தின் பிரதம ஆனையாளர் நாயகம் புஸ்பகுமார, கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், அமைச்சரின் செயலாளர்கள் உடனான கலந்துரையாடல் ஒன்று கல்வி அமைச்சில் நடைபெற்றது. இந்தச் சந்திப்பில் கலந்துரையாடியமைக்கு இணங்க மேற்படி...
முல்லைத்தீவு அருள்மிகு மம்மில் பிள்ளையார் ஆலய மண்டபத்தில் 14.08.2016 அன்று ஆலய பூசகர் அ.நாதன் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் காரைதீவு திருமதி.சண்முகம் மனோன்மணி சற்சங்கம் ஏற்பாட்டில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள அறநெறிப் பாடசாலை மாணவர்களின் ஆன்மீக வழிபாட்டையும், கலை இலக்கியங்களை பேணும் நோக்கோடு இந்நிகழ்வு இடம் பெற்றுள்ளது. இதில் சிறுவர்களின் நற்பழக்கங்களை பேணுவதும் கெட்ட சிந்தனைகளிலிருந்தும் மது போதைகளிலிருந்தும் சிறுவர்களை காப்பாற்றுவது இதன் நோக்கமாகும். சிறுவர்களிடமிருந்து கலைகளையும், ஆக்கங்களையும், ஆன்மீக...
புஸ்ஸல்லாவ மெல்போட் தோட்ட கருமாரியம்மன் ஆலய வருடாந்த ஆடி மாத ஆடி வேல் திருவிழா ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ க.மகேஸ்வர குருக்கள் தலைமையில் நடைபெற்றது. இதன்போது பால்குட பவனி, வசந்த மண்டப பூஜை, சுவாமி வெளிவீதி வலம் வருதல், பறவைக்காவடி, பக்தர்களுக்கான பிரசாதம் வழங்கல் என்பன நடைபெற்றன. இந்நிகழ்வுகளில் பெருந்திரளான பக்தர்கள் கலந்துகொண்டார்கள். படங்களும் தகவல்களும் :- பா.திருஞானம்
வேதனை பெருவெளியில் நம்மை தள்ளிவிட்டு நேற்று காலை பத்து மணிக்கு பறந்துபோன நா.முத்துக்குமார் தனது மகன் ஆதவன் நாகராஜனுக்கு எழுதிய கடிதம் “அன்புள்ள மகனுக்கு அப்பா எழுதுவது இது நான் உனக்கு எழுதும்முதல் கடிதம். இதைப்படித்துப்புரிந்து கொள்ளும் வயதில் நீ இல்லை. மொழியின் விரல் பிடித்து நடக்கப்பழகிக்கொண்டு இருக்கிறாய்…. வயதின் பேராற்றாங்கரை உன்னையும் வாலிபத்தில் நிறுத்தும். சிறகு முளைத்த தேவதைகள் உன் கனவுகளை ஆசீ்ர்வாதிப்பார்கள். பெண் உடல் புதிராகும். என்தகப்பன் என்னிடமிருந்து...