தற்போது மக்களின் பொழுது போக்கு அம்சங்களில் ஒன்றாக திகழ்வது சினிமாவே. இதில் வரும் கதைகள், கொமடிகள், கதாபாத்திரங்களின் நடிப்புகள் என ஒவ்வொருவரின் ரசனைக்கேற்ப காணப்படுகிறது. அதுமட்டுமின்றி இவ்வாறு சினிமாக்களில் நடிக்கும் நடிகர், நடிகைகளுக்கு என்றே ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உண்டு. சிலருக்கு ரசிகர் மன்றமும் காணப்படுகிறது. அந்த அளவிற்கு அவர்களின் நடிப்பு அனைவரையும் கவர்ந்துள்ளது. சரி தற்போது நடிகர், நடிகைகளில் சிலர் நடிப்பதற்கு முன்னர் என்ன வேலையில் இருந்துள்ளனர் என்பதின் தொகுப்பே...
குபேர பொம்மையை அழகுக்கு பயன்படுத்துவது மட்டுமல்லாமல் அதை கடவுளாக மதிக்கின்றனர். அதன் மகத்துவம் என்ன என்பதை தெரிந்து கொள்வோம். * வீட்டின் கிழக்கு திசை தான் குடும்பத்தின் அதிர்ஷ்ட புள்ளியாக கருதப்படுகிறது. அதனால் உங்கள் குடும்பத்தில் ஒற்றுமையும் சந்தோஷமும் நிலவ வேண்டும் என்றால் சிரிக்கும் குபேர பொம்மையை வீட்டின் கிழக்கு திசையில் வைத்திடவும். * குடும்பத்திற்குள் ஏற்படும் சண்டைகள், சச்சரவு, வாக்குவாதம், வீட்டில் இருப்பதற்கே உங்களுக்கு பிடிக்காமல் இருக்கும் நிலை அப்படிப்பட்ட...
எதுவும் முழுமையாக கற்றோர் இல்லை எனலாம், சிறிய விஷயமானாலும் அவைகளில் தெரியாத அம்சங்கள் ஒன்றேனும் இருக்க தான் செய்கின்றது. அந்த வகையில் வாட்ஸ்ஆப் செயலியை நீங்கள் தினமும் பயன்படுத்தினாலும் அவைகளில் உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்களை தான் இங்கு தொகுத்திருக்கின்றோம். வாட்ஸ்ஆப் செயலியில் உங்களுக்கு தெரிந்திராத சில அம்சங்களை பாருங்கள்.. இந்த அம்சம் குறிப்பிட்ட ஏதேனும் ஒரு சாட்டினை தற்காலிகமாக மூடி வைத்து அதனினை பின்னர் பயன்படுத்த வழி செய்யும். இதை...
தற்போதெல்லாம் படிக்கும் இடங்கள், வேலை செய்யும் இடங்கள், பேருந்துநிலையம் என பெண்களை கேலி செய்வதற்கு என்றே சில ஆண்கள் பட்டாளம் இருக்கத்தான் செய்கின்றனர். அவர்களை பார்த்து நாம் மிரண்டு ஓடாமல் எவ்வாறு சமாளிக்க வேண்டும் என்பதற்கு இப்பெண்ணே சாட்சி.... அந்த பெண்ணின் துணிச்சலை காணொளியில் தற்போது காணலாம். தன்னை கிண்டல் செய்த இரண்டு நபர்களை பெண் கன்னத்தில் அரைந்தது மட்டுமின்றி அவர்களை தோப்புக்கரணமும் போட வைத்துள்ளார். இப்படிப்பட்ட துணிச்சல் அனைத்து பெண்களிடம்...
அம்பகாமம் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் தாய் தந்தையை இழந்த மாணவனுக்கு துவிச்சக்கர வண்டி வழங்கப்பட்டுள்ளது. அம்பகாமம் பிள்ளையார் ஆலய பரிபாலன சபையின் ஏற்பாட்டில் புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள உறவுகளினால் யுத்தத்தின் போது தாய் தந்தையை இழந்த அம்பகாமம் பாடசாலை 6ஆம் ஆண்டு மாணவனுக்கு பாடசாலை செல்வதற்காக இந்த துவிச்சக்கர வண்டி மம்மில் பிள்ளையார் ஆலயத்தில் வைத்து 14.08.2016 அன்று புலம்பெயர்ந்த உறவுகளினாலும், பூசகரினாலும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. கோபிகா, புளியங்குளம்.
சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை, அடுத்த முறையும் தேர்தலில் போட்டியிட வைக்கும் முயற்சியில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியினர் ஈடுபட்டு வருகின்றனர். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை மீண்டும் தேர்தலில் போட்டியிடுமாறு கோரிக்கையை அடுத்து வரும் மாதங்களில் முன் வைக்க கட்சி உறுப்பினர்கள் திட்டமிட்டுள்ளனர். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 04ஆம் திகதி குருணாகல், வெலகெதர மைதானத்தில் இடம்பெறவுள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 65 ஆவது வருட நிறைவு விழாவில்...
உடனடிப் பிரச்சினைகள் தீர்க்கப்படாமையினாலும் வடக்கு, கிழக்கு நிலைமைகளில் மாற்றமின்மையினாலும் தமிழ் மக்கள் மத்தியில் சந்தேகம் நிலவி வருகின்றது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித்தலைவருமான இரா. சம்பந்தன் தெரிவித்திருக்கின்றார். இலங்கைக்கு விஜயம் செய்திருந்த நோர்வேயின் பிரதமர் எர்னா சொல்பேர்க் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் ஆகியோரை சந்தித்து பேசியிருந்தார். முதலில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்த எர்னா சொல்பேர்க்...
கடைகளை மூடி ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்வதன் மூலம் ஆட்சியை கவிழ்க்க முடியாது எனநிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்துள்ளார். நாட்டு மக்களுடைய உண்மை நிலையினைப் புரிந்து கொண்டு அதற்கான தீர்வினைபெற்றுக்கொடுப்பது மக்களிடம் நேரிடையாக சென்று கலந்துரையாடுவதன் மூலமே என்றும்அவர் தெரிவித்துள்ளார். அதைவிடுத்து கொழும்பில் இருந்து கொண்டு அறிக்கைகைளையும்,சுற்றுநிருபங்களையும் வெளியிடுவதன் மூலம் மக்கள் பிரச்சினையை தீர்க்க முடியாதுஎன்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். அநுராதபுரம்,விலச்சி மற்றும் கொக்கிச்சி பிரதேச மக்களை சந்தித்த போதே அமைச்சர்ரவி கருணாநாயக்க இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மேலும்...
புனர்வாழ்வளிக்கப்பட்ட விடுதலைப்புலிகள் அமைப்பின் முன்னாள் போராளிகள் 100க்கும் மேற்பட்டவர்கள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளனர். இவர்களின் உயிரிழப்புக்கு விஷ ஊசி ஏற்றப்பட்டமையே காரணம் என பேசப்பட்டு வரும் நிலையில் அதற்கு மறுப்பும் வெளியிடப்படுகின்றது. எனினும், இதனை ஒத்த சம்பவங்கள் சில வரலாற்றில் இடம் பெற்றுள்ளன. அதில் காலித் மசால் என்ற ஹமாஸ் இயக்கத்தின் தலைவரை, இஸ்ரேலின் உளவு அமைப்பான மொசாட் கொலை செய்ய முற்பட்ட சம்பவத்தை குறிப்பிடலாம். இந்த சம்பவம் 1977ஆம் ஆண்டு இடம்பெற்றுள்ளது....
முன்னொரு காலத்தில் விடுதலைப் புலிகளின் தாக்குதல்களை சமர்க்களத்தில் எதிர்கொண்ட முப்படையினரும் பல்வேறு பதில் தாக்குதல்களை மேற்கொண்டு பல்லாயிரத்திற்கு அதிகமான இராணுவத்தினரை இழந்துள்ளனர்.மேலும் பலர் அங்கவீனமடைந்துள்ளனர். இந்நிலையில் முப்படையினருக்கும் வீடுகள் அமைத்துக் கொடுக்கும் நோக்கில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் நிதி சேகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. முப்படையினருக்கும் வீட்டுத்திட்டத்தின் செயற்பாட்டின் கீழ் கண்டி, குருநாகல், மாத்தறை, ஹம்பாந்தோட்டை, மொனராகலை, பதுளை, காலி, அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, களுத்துரை, கேகாலை, பொலன்னருவை, கம்பஹா, இரத்தினபுரி, மாத்தளை,...