மாலபே தனியார் வைத்திய கல்லூரியில் தற்போது கல்வி நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மாணவர்களுக்கு நட்டஈடு பணம் வழங்குவதற்கு யோசனை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. அகில இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கம் குறித்த யோசனையை முன்வைத்துள்ளது. இவ்வாறு வழங்கப்படும் நட்டஈடு பணத்தைக் கொண்டு மாணவர்கள் தமது வைத்திய பட்டப்படிப்பை வெளிநாடுகளில் கற்பதற்கு வாய்ப்பு ஏற்படும் என அகில இலங்கை வைத்தியர் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. அத்துடன் குறித்த நட்டஈட்டு பணம் வழங்கப்பட்டதன் பின்பு மாலபே வைத்திய கல்லூரியை...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அமெரிக்காவிற்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் மாதம் அமெரிக்காவின் நியூயோர்க்கில் நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பங்கேற்க ஜனாதிபதி அமெரிக்கா விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் செப்டம்பர் மாதம் 21ம் திகதி நடைபெறவுள்ள ஐக்கிய நாடுகள் அமைப்பின் 71ம் பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றவுள்ளார். கடந்த பொதுச் சபைக் கூட்டத்தில் ஜனாதிபதி ஆடம்பரமற்ற முறையில் எளிமையாக கலந்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த அரசாங்க ஆட்சிக் காலத்தில் பெரும்...
சுகாதார பணிப்பாளர் வைத்தியர் பாலித மஹிபாலவால் அவசர கடிதம் ஒன்று ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. சுகாதார அமைச்சிற்கு மற்றுமொரு சுகாதார பணிப்பாளரை நியமிக்கவுள்ளதாக அண்மையில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே குறித்த கடிதம் நேற்றைய தினம் ஜனாதிபதிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த கடிதமானது சுகாதார பணிப்பாளர் உள்ளிட்ட 14 அதிகாரிகளின் கையெழுத்துடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சுகாதார துறைக்கு இன்னுமொரு பணிப்பாளர் அவசியம் இல்லை என்றும் அவர்களது கடிதத்தில்...
கட்சியை பிளவடையச் செய்யவே பாதயாத்திரை நடத்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பு ஊடகமொன்றுக்கு அளித்த நேர்காணலில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்… கூட்டு எதிர்க்கட்சியினால் நடத்தப்பட்ட பாத யாத்திரைப் போராட்டம் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கவல்ல, கட்சியை பிளவடையச் செய்யவேயாகும். இவ்வாறான பாத யாத்திரைகளை நடத்துவதனால் அரசாங்கம் மேலும் பலமடையும். வலுவான அடிப்படையில் உருவாக்கப்பட்ட நல்லாட்சி அரசாங்கத்தை பாத யாத்திரைகளினால் அசைக்க முடியாது. பாத யாத்திரையின் பின்னர் அரசாங்கத்திலும் கட்சியிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள்...
சாட்சியாளர்களை பாதுகாக்கும் சட்டத்தின் கீழ் கடற்படை லெப்டினன்ட் கொமாண்டர் கே.பீ.வெலகெதரவுக்கு உடனடியாக பாதுகாப்பு வழங்குமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடற்படைக்கு உத்தரவிட்டிருந்தார். ஜனாதிபதி உத்தரவிட்டுள்ள போதும் இதுவரையிலும் அது செயற்படுத்தப்படவில்லை என கடற்படை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. கப்பமாக பணம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் பல இளைஞர்களை கடத்திச் சென்று கொலை செய்தமை தொடர்பில் பல சிரேஷ்ட கடற்படை அதிகாரிகள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டுக்களை நிரூபிக்கக் கூடிய பிரதான சாட்சியாளராக...
இலங்கையுடன் பாகிஸ்தான் பெறுமதிமிக்க உறவை கொண்டுள்ளதாக இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அந்த நாட்டின் பிரதம நீதியரசர் அன்வர் ஸாஹீர் ஜமாலி தெரிவித்துள்ளார் இந்த நிலையில் இந்த உறவை மேலும் பலப்படுத்திக்கொள்ள பாகிஸ்தான் விரும்புவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் நடைபெற்ற பாகிஸ்தானின் 70வது சுதந்திர தின நிகழ்வில் பிரதம விருந்தினராக பங்கேற்பதற்காக அவர் இங்கு வந்துள்ளார். இதேவேளை இலங்கையில் உள்ள பாகிஸ்தானிய உயர்ஸ்தானிகரும் இலங்கையுடன் பாகிஸ்தான்தீர்க்கமான உறவை விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார்.
திருகோணமலையில் சமீப காலமாக இடம் பெற்று வருகின்ற நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் விடயங்கள் தொடர்பாகவும் அதில் மிக முக்கியமாக சாம்பல் தீவு சந்தியில் அண்மையில் வைக்கப்பட்ட புத்தர் சிலை விடயம் தொடர்பாகவும், திருகோணமலை மாவட்டம் உப்புவெளி பிரதேச சபையின் முன்னாள் தலைவர் க. காந்தரூபன் ஜனாதிபதிக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளார். நேற்று முன்தினம் அனுப்பி வைக்கப்பட்டுள்ள இக்கடிதம் வருமாறு, முன்னால் திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச சபையின் தலைவராக இருந்து இப்பகுதி...
நாதப்பிரமமாய் விளங்கும் இறைவனை அடைவதற்கு சிறந்த சாதகம் இசையேயாகும். இசைக்கலை என்பது தமிழர்களின் வாழ்வோடு பின்னிப்பிணைந்தது. இசைக்கு அடிமையாகாதவர்கள் எவருமே இருக்க முடியாது. சிவபெருமானைக் கூட இசையினால் மயக்கினான் இராவணன் என்பது புராண வரலாறு. இறைவன்கூட மயங்குகின்ற இசைக்கு சாதாரண மனிதர்கள் விதிவிலக்காக அமைய முடியாது என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். செல்வி சௌதாமினி மோகனசுந்தரம் அவர்களின் சங்கீத அரங்கேற்ற நிகழ்வில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர்...
ஊர்காவற்துறை - காரைநகர் பகுதியில் காணாமல் போன சிறுமி சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இந்த சடலம் இன்று மாலை கண்டெடுக்கப்பட்டதாக ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த சிறுமி நேற்றிரவு காணாமல் போயிருந்த நிலையில், அவரது சடலம் வீட்டிலிருந்து சுமார் 500 மீற்றர் தொலைவிலுள்ள கிணறொன்றிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். காரைநகர், திக்கரையை சேர்ந்த சண்முகராஜ துவாரகா என்ற 15 வயதான சிறுமியொருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. குறித்த பகுதிக்கு தேங்காய் பறிப்பதற்கு வருககை...
  அமெரிக்காவை பொருளாதாரச் சரிவிலிருந்து காப்பாற்றுவது, ஈராக்கிலிருந்து படைகளைத் திரும்பப் பெறுவது, ஆப்கானிஸ்தான் போரை முடிவுக்கு கொண்டுவருவது போன்ற பிரச்சினைகள் இருந்தாலும் இவைகளைவிட முக்கியமான பிரச்சினை இனப் படுகொலையைத் தடுத்து நிறுத்துவதுதான் இதற்கே அமெரிக்க அதிபர் முன்னுரிமை தரவேண்டும் என்று அமெரிக்காவின் முன்னாள் உள்துறைச் செயலாளர் மேடலின் ஆல்ப்ரைட்டும், பாதுகாப்புத் துறைச் செயலாளர் வில்லியம் எஸ்.கோஹனும் கூறியிருக்கின்றார்கள்.   இதுபற்றிக்...