தமிழர்களை இனச்சுத்திகரிப்பு செய்வதற்கான ஒரு அங்கமே கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயத்திற்கு அருகில் அமைக்கப்படும் புத்தகோவில் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சி.சிறிதரன் குற்றஞ்சாட்டியுள்ளார். நேற்று (வெள்ளிக்கிழமை) கிளிநொச்சி கனகாம்பிகை அம்மன் ஆலயச் சூழலில் இராணுவத்தினரால் வலுக்கட்டாயமாக அமைக்கப்பட்டு வரும் பௌத்த விகாரையைப் பார்வையிட்ட பின்னர் கருத்துத் தெரிவிக்கும் போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில், தமிழர்களின் பூர்வீக நிலங்களைச் சிங்கள பௌத்த மயமாக்கும் நோக்கத்துடனேயே இராணுவத்தின் துணையுடன்...
யுனெஸ்கோ அமைப்பின் பணிப்பாளர் இரினா பொகோவா (Irina Bokova) நாளை (14) இலங்கைக்கு பயணம் செய்ய உள்ளார். இரினா பொகோவா அந்த அமைப்பின் பணிப்பாளராக நியமனம் பெற்றதன் பின்னர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதல் விஜயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் 2030ம் ஆண்டில் இலங்கையில் நிரந்தர சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் எற்படுத்துவதற்கு அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதே இந்த விஜயத்தின் நோக்கமாகும். இரினா பொகோவாவின் இந்த விஜயத்தின் போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, வெளிவிவகார...
கடந்த அரசாங்கம், இந்த நாட்டின் அமைதியையும் சமாதானத்தையும் சீர்குலைத்து, வெளிநாடுகளில் இலங்கையின் நற்பெயரை கெடுத்து நாட்டை மோசமான நிலைக்கு கொண்டு சென்றவர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ என்று வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். படைத்தரப்பை காட்டி நாட்டை கொள்ளையடித்த கொள்ளையர்களிடமிருந்து நாட்டை பாதுகாத்து இலங்கையை சுபீட்சமிக்க நாடாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்ரமசங்கவும் இணைந்து கட்டியெழுப்பி வருகின்றனர் என்று அவர் தெரிவித்தார். இன்று காலை...
இலங்கையை ஊடறுத்தும் நாட்டுக்கு அண்மையில் உள்ள கடற்பகுதிகளிலும் மணித்தியாலத்துக்கு 60-70 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக வானிலை அவதான நிலையம் எதிர்வு கூறியுள்ளது. 24 மணிநேரத்துக்குள் இதனை எதிர்ப்பார்க்கலாம் என்று தெரிவித்துள்ள வானிலை அவதான நிலையம், புத்தளம் முதல் மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலும், ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் ஊடாக மட்டக்களப்பு வரையிலுமான கரையோரப்பகுதிகளில் வாழ்வோர் மிகவும் அவதானத்துடன் இருக்குமாறும் அந்நிலையம் அறிவுறுத்தியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நூதனமான சங்கடத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. கட்டுநாயக்க விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் பகுதியில் கோப்பி கோப்பை ஒன்றிக்காக 4500 ரூபாய் கட்டணம் செலுத்தி, அதனை பெறும் நிலைக்கு மஹிந்த தள்ளப்பட்டுள்ளார். மஹிந்த ராஜபக்ச விமான நிலையத்தின் சிறப்பு விருந்தினர் பகுதிக்கு சென்ற சமயத்தில், தேனீர் பருகும் அவசியம் உண்டா என அதன் ஊழியர் ஒருவர் வினவியுள்ளார். இதன்போது தனக்கு ஒரு கோப்பை தேனீர் வழங்குமாறு...
  ஓமந்தையில் பொருளாதார வர்த்தக மத்திய நிலையம் அமைக்க கோரி சாகும்வரை உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்தார் 72வயதுடைய மகேஸ்வரன் என்பவர் நேற்றைய தினம் மூன்றாவது நாளாக தொடர்ந்த மகேஸ்வரனின்(மலேபாம்பு)  போராட்டமானது அனைவரும் எதிர்பார்த்தால் போல் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனின் வருகையுடன் நிறைவுக்கு வந்தது இதில் வேடிக்கை என்னவென்றால் ஓமந்தையில் மத்திய நிலையம் அமைக்கப்படவேண்டும் இதை ஜனாதிபதி பிரதமர் வடமாகாண முதலமைச்சர் அல்லது எதிர்கட்சி தலைவர் தனக்கு உறுதிவளங்கவேண்டும் அத்துடன்...
இலங்கையில் 18 வயது நிரம்பியதும் வாக்காளராகத் தகுதி பெறுகின்ற உரிமை அரசியலமைப்பில் உறுதி செய்யப்பட்டிருக்கின்ற போதிலும், வருடத்திற்கு ஒருமுறை ஜுன் மாதம் முதல் தேதி மட்டும் வாக்காளராகப் பதிவு செய்யும் நடவடிக்கை காரணமாக லட்சக்கணக்கான இளைஞர்கள், யுவதிகள் வயதுக்கு வந்தும்கூட வாக்காளராகப் பதிவு செய்ய முடியாதிருப்பதாக முறையிடப்பட்டிருக்கின்றது. ஜுன் மாதம் முதலாம் தேதி, 18 வயதை எட்டாத ஒருவர் அடுத்த வருடம் ஜுன் முதலாம் தேதி வரையில் 18 வயதை...
இலங்கையில் காணாமல் போனவர்களுக்கு மரண சான்றிதழ் வழங்க முற்படுவது தவிர்க்கப்பட வேண்டும் என காணாமல் போனவர்களின் உறவுகளிடமிருந்து கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. அரசாங்கத்தினால் நியமிக்கப்பட்டுள்ள நல்லிணக்கப் பொறிமுறைகளை ஒருங்கிணைப்பதற்கான செயலணியின் மக்கள் கருத்தறியும் அமர்வுகளின் போது இந்த கோரிக்கை காணாமல் போனவர்களின் உறவுகளினால் முன் வைக்கப்பட்டுள்ளது. காணாமல் போனவர்கள் தொடர்பாக ஏற்கெனவே வழங்கப்பட்டுள்ள மரண சான்றிதழ்களில், மரணத்திற்கான காரணம், `காணாமல் போனவர்' என குறிப்பிடப்பட்டுள்ள நிலையில், காணாமல் போன ஒருவருக்கு எவ்வாறு மரண...
ஆளும் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் கலகம் செய்த காரணத்தினால் காணாமல் போனோர் அலுவலகம் குறித்து உரிய முறையில் பாராளுமன்றில் விவாதம் நடத்த முடியவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார். இரண்டு தரப்பினர்களும் பாராளுமன்றில் கலகத்தில் ஈடுபட்டதனால் மிக முக்கியமான சட்ட மூலமொன்று தொடர்பில் விவாதம் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார். இந்த சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்வதற்கு முயற்சித்த...
கொழும்பில் போதைப் பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் விசேட கவனம் செலுத்தி வருகின்றனர். எதிர்வரும் 15ம் திகதி இது தொடர்பில் விசேட தேடுதல் வேட்டைகள் முன்னெடுக்கப்பட உள்ளன. கொழும்பில் நடைபெறவுள்ள போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது. இராணுவத்தினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இந்த நடவடிக்கைகளுக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். போதைப் பொருள் இல்லாதொழிப்பு குறித்த நடவடிக்கைகள்...