ரியோடி ஜெனிரோவில் நடைபெற்று வரும் 100 மீட்டர் மகளிர் ஓட்டத்தில் இந்தியாவின் டூட்டி சந்த் 7-வது இடம் பிடித்து வெளியேறினார். 1980 மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் 100மீட்டர் ஓட்ட பந்தயத்தில் சவால்களை தாண்டி இந்தியா சார்பில் கலந்து கொண்டவர் பி.டி உஷா. 36 ஆண்டுகளுக்கு பிறகு ரியோ ஒலிம்பிக் போட்டில் 100 மீட்டர் ஓட்டத்தில் பங்கேற்றார் இந்தியாவின் டூட்டி சந்த்.
ரியோ ஒலிம்பிக்ஸில் இன்னும் இந்தியா ஒரு பதக்கம் கூட வெல்லாத நிலையில், தடகளத்திலும் இந்திய அணியின் தடுமாற்றம் தொடர்கிறது. ஒலிம்பிக்ஸ் தடகளத்தில் வழக்கம் போல இந்தியா தடுமாற்றத்துடன் தான் தொடங்கியுள்ளது. ஆண்களுக்கான வட்டு எறிதலில் கடந்த ஒலிம்பிக் போட்டியில் இறுதிப்போட்டி வரை முன்னேறியவர் இந்திய வீரர் விகாஸ் கவுடா. தற்போது ரியோ ஒலிம்பிக்ஸில் கலந்து கொண்ட விகாஸ் கவுடா மீது அதிக எதிர்பார்ப்பு நிலவியது. இந்நிலையில், 35 பேர்...
ஒலிம்பிக் போட்டிகளில் கலப்பு இரட்டையர் டென்னிஸில் இந்தியாவின் சானியா- போபண்ணா இணை அரை இறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. 75 கிலோ எடைபிரிவு குத்துச் சண்டையில் இந்தியாவின் விகாஸ் கிருஷ்ணன் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளார். ரியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலப்பு இரட்டையர் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் சானியா மிர்சா-ரோகன்போபண்ணா இணை காலிறுதி ஆட்டம் ஒன்றில் ஆண்டி முர்ரே-ஹீதர் வாட்சன் இணையை எதிர் கொண்டது. இந்த ஆட்டத்தில் சானியா-போபண்ணா இணை 6-4, 6-4 என்ற...
ரியோ டி ஜெனிரோ: ஒலிம்பிக் பேட்மிண்டன் மகளிர் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்தியாவின் ஜுவாலா கட்டா - அஸ்வினி பொன்னப்பா ஜோடி மீண்டும் தோல்வியைத் தழுவியது. பேட்மிண்டன் பெண்கள் இரட்டையர் பிரிவு போட்டியில் இந்திய வீராங்கனைகள் ஜூவாலா கட்டா, அஸ்வினி பொன்னப்பா ஜோடி, நெதர்லாந்தின் செலினா பைக் மற்றும் மஸ்கின் ஜோடியுடன் மோதியது.
இலங்கை மற்றும் அவுஸ்ரேலிய அணிகளுக்கிடையிலான 3வதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி இன்று காலை கொழும்பில் ஆரம்பித்தது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இலங்கை அணித்தலைவர் மெத்தியூஸ் முதலில்  துடுப்பெடுத்தாட தீர்மானித்தார். அந்த வகையில் சில்வா 0 கருணாரட்டன 7 குசல் பெரேரா 16 குசல் மெண்டிஸ் 1 மெத்தியூஸ் 1 என   26 ஓட்டங்களுக்கு முதல் 5 விக்கெட்டுகளையும் பறி கொடுத்தது இலங்கை அணி. பின்னர் 6 வது  விக்கெட் இணைப்பாட்டமாக சந்திமால் மற்றும் டனஞ்சய சில்வா 168...
பிரதமர் ரணில் விக்ரமசிங்க சீனாவிற்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளார். நேற்றிரவு 9.10அளவில் பிரதமர் உள்ளிட்டப் பிரதிநிதிகள் சீனாவிற்கான விஜயத்தை ஆரம்பித்துள்ளனர். பிரதமருடன் 17 பிரதிநிதிகள் அடங்கிய குழுவினர் சீனாவிற்கு விஜயம் செய்ய உள்ளனர். ஐந்து நாள் விஜயமொன்றை மேற்கொண்டு பிரதமர் சீனாவிற்கு செல்கின்றார். பிரதமர், சீனாவின் கைத்தொழில் வலயங்களுக்கு சென்று அவற்றை நேரில் பார்வையிட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கை கடற்படையால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள முல்லைத்தீவு மாவட்டத்தின் வட்டுவாகல் பகுதி காணிகளை பார்வையிட இராணுவத்தளபதி கிருஷாந்த டி சில்வா நேற்றைய தினம் அப் பகுதிக்கு விஜயம் செய்துள்ளார். இதனால் முல்லைத்தீவில் அரச படைகளின் பாதுகாப்பு நடவடிக்கை அதிகரிக்கப்பட்டிருந்தது. முல்லைத்தீவு வட்டுவாகல் பகுதியில் பொதுமக்களுக்குச் சொந்தமான 617 ஏக்கர் காணிகளை அரச கடற்படை ஆக்கிரமித்துள்ளது. அக் காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்கும் நோக்கில் காணி அளெவீடு செய்ய அண்மையில் முற்பட்டபோது அப் பகுதி மக்கள்...
சாதாரண தரத்தில் எவரும் சித்தியடையவில்லை என்ற நிலைமை இருக்கக் கூடாது என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். எதிர்வரும் காலங்களில் ஆசிரியர் நியமனங்களின் போது சாரணர் இயக்கங்களில் அங்கம் வகித்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கும் திட்டமொன்று அறிமுகம் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலங்களில் கல்வித் துறையை அபிவிருத்தி செய்வது நோக்கமாக இருக்கவில்லை எனவும், அரசியல் நோக்கங்களே முதனிலைப்படுத்தப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். அரசியலற்ற கல்விக் கொள்கையொன்று உருவாக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
நோர்வேயின் பிரதமருக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சி தலைவருமான இரா. சம்பந்தனுக்குமிடையில் உத்தியோகபூர்வ சந்திப்பு நேற்று கொழும்பில் இடம்பெற்றது. இச்சந்திப்பின்போது தமிழ் மக்கள் முகம்கொடுக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் எடுத்துரைத்தார் என அவரின் அலுவலகத் தகவல்கள் கூறகின்றன. மீள்குடியேற்றம், படையினர் வசமுள்ள பொதுமக்களின் காணி விடுவிப்பு போன்ற விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் இன்னும் துரிதமாக இடம்பெற வேண்டும் என வலியுறுத்திய எதிர்க்கட்சி தலைவர், இச்செயற்பாடுகளில் சர்வதேசத்தின்...
முன்கூட்டியே பாகங்கள் தயாரிக்கப்பட்டு,  பின் கட்டப்படும் இடத்திற்கு,  கொண்டு வரப்பட்டு,  பொருத்தப்படும், பொருத்து தனி வீடமைப்பு திட்டம்,  காலநிலை  சீதோஷண நிலைமைகள் காரணமாக வட மாகாணத்தில் அமைக்கப்படுவது நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில்,  இந்த திட்டம், குளிர் கால சீதோஷண நிலைமைகள் கொண்ட இலங்கை மலைநாட்டுக்கு பொருத்தமானதா என ஆராய்வது முறையானது என நான் நம்புகிறேன். எனவே இதுபற்றி பரிசீலிக்கும்படி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிபாரிசு செய்யப்பட்டுள்ளது. மேலும் தமிழ் முற்போக்கு...