ஆளும்- கூட்டு எதிர்க்கட்சி உறுப்பினர்களின் கலகம் காரணமாக உரியமுறையில் விவாதம்நடத்த முடியவில்லை: JVP:
Thinappuyal -0
ஆளும் கட்சி மற்றும் கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்றில் கலகம் செய்த காரணத்தினால் காணாமல் போனோர் அலுவலகம் குறித்து உரிய முறையில் பாராளுமன்றில் விவாதம் நடத்த முடியவில்லை என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இரண்டு தரப்பினர்களும் பாராளுமன்றில் கலகத்தில் ஈடுபட்டதனால் மிக முக்கியமான சட்ட மூலமொன்று தொடர்பில் விவாதம் நடத்த முடியாத நிலைமை ஏற்பட்டது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த சட்டத்தில் சில திருத்தங்களைச் செய்வதற்கு முயற்சித்த...
கொழும்பில் போதைப் பொருள் வர்த்தகத்தை இல்லாதொழிப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் விசேட கவனம் செலுத்தி வருகின்றனர்.
எதிர்வரும் 15ம் திகதி இது தொடர்பில் விசேட தேடுதல் வேட்டைகள் முன்னெடுக்கப்பட உள்ளன.
கொழும்பில் நடைபெறவுள்ள போதைப் பொருள் ஒழிப்பு நடவடிக்கைகள் பிரதமர் மற்றும் ஜனாதிபதியின் நேரடிக் கண்காணிப்பில் மேற்கொள்ளப்பட உள்ளது.
இராணுவத்தினர் மற்றும் காவல்துறை விசேட அதிரடிப்படையினர் இந்த நடவடிக்கைகளுக்காக கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.
போதைப் பொருள் இல்லாதொழிப்பு குறித்த நடவடிக்கைகள்...
அரசாங்கம் பிரதமர் ஆட்சி முறைமையை அறிமுகம் செய்வது குறித்து கவனம் செலுத்தி வருகின்றது.
பாராளுமன்ற முறைமையிலான பிரதமர் முறைமை ஒன்றை அறிமுகம் செய்வது குறித்து கவனம் செலுத்தப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
புதிய அரசியல் சாசனம் அறிமுகம் செய்யப்பட்டதன் பின்னர் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை ரத்து செய்யப்படும் என தெரிவிக்கப்படுகிறது.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் பரிந்துரைக்கு அமைய இந்த மாற்றங்கள் செய்யப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
நவீன பாராளுமன்ற முறைமைகளுக்கு அமைய புதிய ஓர் கட்டமைப்பை...
சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்காக உதவிச்செயலர் சார்ள்ஸ் எச்.றிவ்கின் நேற்று சிறிலங்கா அமைச்சர்களைச் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.
இரண்டு நாட்கள் பயணமாக நேற்று முன்தினம் சிறிலங்கா வந்த சார்ள்ஸ் எச்.றிவ்கின் நேற்று, சிறிலங்காவின் நிதியமைச்சர் ரவி கருணாநாயக்க, அனைத்துலக வர்த்தக மற்றும் அபிவிருத்தி மூலோபாய அமைச்சர் மலிக் சமரவிக்கிரம, அமைச்சர் ஏரான் விக்கிரமரத்ன, சிறிலங்கா மத்திய வங்கி ஆளுனர் இந்திரஜித் குமாரசுவாமி...
கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான புதிய முத்தரப்பு உடன்பாடு கொழும்பில் நேற்றுக் கையெழுத்திடப்பட்டது.
சீனாவின் 1.5 பில்லியன் டொலர் முதலீட்டில், துறைமுக நகரத் திட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடைநிறுத்தப்பட்ட திட்டத்தை, மீள ஆரம்பிக்கும் வகையில் இந்த முத்தரப்பு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
கொழும்பு அனைத்துலக நிதி நகரம் என்ற பெயரில் இந்த திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டுள்ள உடன்பாட்டில், பெருநகர, மற்றும் மேல்...
காலி தங்கோகெதர சமகி மாவத்தையில் இடம்பெற்ற விபத்தில் பாத்திமா பர்மிளா என்ற உயர்தரத்தில் கல்வி பயிலும் மாணவி காயமடைந்துள்ள நிலையில்
விபத்தை நிகழ்த்தி விட்டு தப்பிச்சென்ற 16 வயது வாலிபர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படவில்லை என பாதிமா பர்மிலாவின் பெற்றோர் விசனம் வெளியிட்டுள்ளனர். அதேவேளை பாதிக்கபட்ட பாத்திமா பர்மிளா குணமாகும் முன்னர் பலவந்தமாக வைத்தியசாலையில் இருந்து வீட்டுக்கு அனுப்பப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஐ.டி துறையில் முதல் 100 கோடீஸ்வரர்கள் பட்டியலை ஃபோர்ப்ஸ் வெளியிட்டுள்ளது. இந்தியாவை சேர்ந்த இருவர் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அதில் தமிழரான ஷிவ் நாடார் சர்வதேச அளவில் 17வது இடத்தை பெற்றிருக்கிறார்.
இந்த பட்டியலில் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் 7,800 கோடி டாலர்கள் சொத்துக்களுடன் முதலிடத்தை பெற்றுள்ளார். அமேசான் நிறுவனர் ஜெஃப் பிசோஸ் 6,620 கோடி டாலர்கள் சொத்து மதிப்புடன் 2வது இடத்தை பிடிக்கிறார். கடந்த ஆண்டை...
யாழ்ப்பாணம் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான அரச காணியில் குடியேற்றப்பட்டுள்ள மக்களுக்கு நிர்மாணிக்கப்படும் வீட்டுத் திட்டத்தை முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க பார்வையிட்டுள்ளார்.
இவர் நேற்று மாலை குறித்த பகுதிக்கு விஜயம் செய்து இராணுவத்தின் ஒத்துழைப்புடன் நிர்மாணிக்கப்படும் வீட்டுத் திட்டத்தை பார்வையிட்டுள்ளார்.
யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து தொடர்ந்தும் அகதி வாழ்க்கை வாழ்ந்து வந்திருந்த காணிகள் அற்ற 129 குடும்பங்கள் காங்கேசன் துறை சீமெந்து கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான...
ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கீ மூன் இம்மாத இறுதிக்குள் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளதாக அரச தரப்பு தகவ்கள் தெரிவிக்கின்றன.
பான் கீ மூன் விஜயம் தொடர்பில் ஐக்கிய நாடுகள்சபை பிரதிநிதிகளுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த விஜயம் தொடர்பில் கடந்த ஜுன் மாதத்தில் இடம்பெற்ற ஜெனிவா மனித உரிமை மாநாட்டில் அறிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
நேற்று (12) ஆசிய சட்ட மாநாட்டில் கலந்துக்கொண்ட போது பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை தெரிவித்துள்ளார்.
ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரஜைகளை காணாமற் போகச் செய்ய இடமளிக்க முடியாது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் அலுவலகம் குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட போது ஏற்பட்ட குழப்ப நிலைமை குறித்து நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், தமது பிள்ளைகளுக்கு என்னவாயிற்று என்பதனை அறிந்து கொள்ள காணாமற்போனவர்களின் பெற்றோருக்கு நியாயமான உரிமையுண்டு.
எந்தவொரு ஆட்சியாளரும் அல்லது அரசாங்கமும் ஆட்சியை தக்க...