கொழும்புத் துறைமுக நகரத் திட்டம் தொடர்பான புதிய முத்தரப்பு உடன்பாடு கொழும்பில் நேற்றுக் கையெழுத்திடப்பட்டது.
சீனாவின் 1.5 பில்லியன் டொலர் முதலீட்டில், துறைமுக நகரத் திட்டம் என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்டு, கடந்த ஆண்டு மார்ச் மாதம் இடைநிறுத்தப்பட்ட திட்டத்தை, மீள ஆரம்பிக்கும் வகையில் இந்த முத்தரப்பு உடன்பாடு கையெழுத்திடப்பட்டுள்ளது.
கொழும்பு அனைத்துலக நிதி நகரம் என்ற பெயரில் இந்த திட்டத்தை தொடர்ந்து முன்னெடுக்க இணக்கம் காணப்பட்டுள்ள உடன்பாட்டில், பெருநகர, மற்றும் மேல்...
ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரஜைகளை காணாமற் போகச் செய்ய இடமளிக்க முடியாது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
காணாமற்போனோர் அலுவலகம் குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட போது ஏற்பட்ட குழப்ப நிலைமை குறித்து நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், தமது பிள்ளைகளுக்கு என்னவாயிற்று என்பதனை அறிந்து கொள்ள காணாமற்போனவர்களின் பெற்றோருக்கு நியாயமான உரிமையுண்டு.
எந்தவொரு ஆட்சியாளரும் அல்லது அரசாங்கமும் ஆட்சியை தக்க...
இனவாதிகளின் கூச்சலுக்கு அஞ்சி, பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்க முடியாது. இனி இந்த நாட்டில் இனவாதிகளுக்கு இடமில்லை என சுதந்திரக் கட்சியின் பேச்சாளரும் இராஜாங்க அமைச்சருமான டிலான் பெரெரா தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் குறித்த நிரந்தர அலுவலகம் தொடர்பான சட்டமூலம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளமை குறித்து விபரிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், அரசாங்கத்தினால் அமைக்கப்படவுள்ள காணாமல் போனோர் குறித்த நிரந்தர அலுவலகம் ஊடாக நாட்டில் காணாமல் போனவர்களுக்கு என்ன...
சபாநாயகர் கரு ஜயசூரிய ஐக்கிய தேசிய கட்சியின் கட்டளைகளுக்கு தலையசைக்கும் கை பொம்மையாக செயற்பட்டு வருவதாக லங்கா சம சமாஜக் கட்சியின் தலைவரும் பேராசிரியருமான திஸ்ஸ விதாரண குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் அமைந்துள்ள லங்கா சம சமாஜக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், நாட்டை நிர்வகிக்கின்ற நாடாளுமன்றத்தின் தலைவர் தற்போதைய நிலையில் பிரதமர்...
அரசாங்கத்தின் கைப்பொம்மையாக எதிர்க்கட்சி செயற்படுவதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்றைய தினம் ஒழுங்கு பிரச்சினையொன்றை முன்வைத்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வாசுவேத நாணயக்கார இவ்வாறு தெரிவித்தார்.
காணாமல் போனோர் தொடர்பாக விசாரணை செய்யும் நிரந்தர அலுவலக சட்டமூலம் தொடர்பில் நேற்றைய தினமும் நாடாளுமன்றத்தில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருந்தது.
ஒழுங்குப் பிரச்சினையொன்றை முன்வைத்து கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன சட்டமூலமொன்றை நிறைவேற்ற வேண்டுமானால் அரசியலமைப்பு , நாடாளுமன்ற நிலையியற்கட்டளை...
காணாமற் போனோரின் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென உயர்கல்வி அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட காணாமற் போனோர் அலுவலகம் குறித்த சட்டம், சட்டவிரோதமானது என்றால் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றிருக்கலாம்.
எனினும் எவரும் நீதிமன்றிற்கு செல்லவில்லை. கடந்த மே மாதம் 22ஆம் திகதி இந்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
நீதிமன்றின் உதவியை நாடக்கூடிய கால...
அரசாங்கத்தினால் யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. ஆனால் அவ்வாறான உதவிகள் வழங்கப்படும் போது குறித்த மக்கள் அல்லது பயனாளிகள் அரச பயங்கரவாதத்துடன் தொடர்பு அற்றவர்கள் என்பதை உறுதிப்படுத்திக் கொடுக்கவும் என மேலும் ஒரு விண்ணப்பப் படிவம் அரசினால் கோரப்படுகின்றது .
இந்த விண்ணப்பத்தை தேவையற்ற விடயமாக நாம் கருதுகின்றோம். என ஐக்கிய கிராம உத்தியோகஸ்தர்கள் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் எஸ்.ஞானசிறி தெரிவித்தார்.
மட்டக்களப்பு - மண்முனை தென் எருவில்...
அம்பலாங்கொடை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளார்
சுமனதாஸ வர்த்தக குழுமத்தின் உரிமையாளரான 53 வயதான எச்.ஜி. பிரேமசிறி என்பரே இவ்வாறு சுட்டுக்கொலை செய்யப்பட்டுள்ளார்.
தன்னுடைய ஜீப் வண்டியில் பயணம் செய்த அவரை பின்தொடர்ந்த துப்பாக்கிதாரிகள் அவரை சுட்டுக்கொலைச் செய்துள்ளதுடன், தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, அம்பலாங்கொடை பகுதியில் வர்த்தகர் பலர் அண்மையில் சுட்டுக்கொலைச் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதுவரைக்காலமும் அமைதியாக இருந்த முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தற்போது தமது சதுரங்க ஆட்டத்தினை ஆரம்பித்துள்ளார் என்றே கூறவேண்டும்.
சந்திரிக்கா வட பகுதிக்கு அண்மையில் விஜயம் மேற்கொண்டுள்ளார். வடபகுதிக்கான இவரின் பயணங்கள் பாரியதொரு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இங்கு யாரை முட்டாளாக்குவதற்கு சந்திரிக்கா அம்மையார் முயல்கின்றார், என்பது மட்டும் புரியவில்லை. இவரின் உள்நோக்கம் என்ன?
இலங்கையில் இடம்பெற்ற யுத்தத்திற்கும் இவருக்கும், நெருங்கிய தொடர்பு உள்ளது என்பது அனைவரும் அறிந்ததே. இதுவரைக்காலமும் அமைதியாக இருந்து...
ரியோ ஒலிம்பிக்கின் 6 ஆவது நாள் நிறைவின் போது அமெரிக்கா தொடர்ந்தும் முதலிடத்துடன் முன்னிலை வகிக்கின்றது.
இரண்டாம் இடத்தை தக்கவைத்திருந்த சீனா அதே இடத்தில் இருந்தாலும், 5 ஆம் நாள் போட்டிகள் நிறைவின் போது 1 தங்கம் பின்னடைவில் இருந்த நிலையில், 6 ஆவது நாள் நிறைவில் 5 தங்கங்கள் பின்னடைவில் இந்த இடத்தை பிடித்துள்ளது.
பதக்கப்பட்டியலை பார்க்கும்போது, அமெரிக்கா 16 தங்கம், 12 வெள்ளி மற்றும் 10 வெண்கலம் அடங்கலாக...