இலங்கை பல்லின மக்கள் வாழும் ஒரு நாடாகும்.
இந்நாட்டில் பௌத்த சிங்கள மக்கள் பெரும்பான்மையினராக இருந்த போதிலும் இந்து, இஸ்லாம், கிறிஸ்தவ மதங்களைப் பின்பற்றும் மக்கள் சிறுபான்மையினராக நீண்ட காலம் வாழ்ந்து வருகின்றனர்.
இருப்பினும் இந்நாட்டு மக்கள் மத்தியில் இன மத ரீதியான திட்டமிட்ட அடிப்படையிலான மேலாதிக்க சிந்தனையோ, செயற்பாடுகளோ கடந்த காலங்களில் காணப்படவில்லை.
சுதந்திரத்திற்கு பின்னர் சுமார் 30 வருட கால யுத்தத்திற்கு நாடு முகம் கொடுத்தும் அப்படியான நிலைமை ஏற்படவில்லை.
இந்த...
தலைநகர் கொழும்பில் போதைப் பொருள் நடவடிக்கைகளை ஒழிக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் நடவடிக்கை எடுக்கவுள்ளனர்.
எதிர்வரும் 15ம் திகதி முதல் இந்த விசேட நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நேரடிக் கண்காணிப்பில் இந்த நடவடிக்கை ஆரம்பிக்கப்படவுள்ளது.
கொழும்பை மைமயாகக் கொண்டு இயங்கி வரும் போதைப் பொருள் வர்த்தகத்தை கட்டுப்படுத்த பாரியளவில் சுற்றி வளைப்புக்கள் மேற்கொள்ளப்படவுள்ளன.
இந்த நடவடிக்கைகளுக்காக இராணுவத்தினர், விசேட அதிரடிப்படையினர் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.
விமானப்படையினரின்...
இராணுவத்தினர் விச ஊசி ஏற்றினார்கள் என தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மகளிர் அரசியல் துறைப் பொறுப்பாளர் தமிழினி முறைப்பாடு எதனiயும் செய்யவில்லை என சிரேஸ்ட இராணுவ அதிகாரியொருவர் சிங்கள ஊடகமொன்றுக்குத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக வடக்கு மாகாணசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில் அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில்,
தமிழினி தனது உடலில் விச ஊசி ஏற்றப்பட்டதாக எவ்வித முறைப்பாட்டையும் செய்யவில்லை.
தமிழீழ விடுதலைப் புலிகள்...
ஓய்வு அறிவிப்பை மீளப்பெற்றுக்கொண்ட கால்பந்து வீரர் லயோனல் மெஸ்ஸி மீண்டும் அர்ஜெண்டினா தேசிய அணிக்கு திரும்புவதாக அறிவித்துள்ளார்.
அமெரிக்கா கோபா கால்பந்து தொடரில் அர்ஜெண்டினா அணி தோல்வி அடைந்ததையடுத்து சர்வதேச கால்பந்து போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அர்ஜென்டினா அணியின் நட்சத்திர வீரர் லயோனல் மெஸ்ஸி அறிவித்தார்.
இந்நிலையில், ஓய்வு அறிவிப்பை மீளப்பெற்றுக்கொண்ட மெஸ்ஸி மீண்டும் அர்ஜெண்டினா தேசிய அணிக்கு திரும்புவதாக திடீர் அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
உலகக் கோப்பைக்கான தகுதி சுற்று போட்டிகள்...
காணாமல் போனோரின் உறவினர்களுக்கு நட்டஈடு வழங்கப்பட வேண்டுமென உயர்கல்வி அமைச்சரும் அவைத் தலைவருமான லக்ஸ்மன் கிரியல்ல தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் உரையாற்றிய போது நேற்று அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்டம், சட்டவிரோதமானது என்றால் அதற்கு எதிராக நீதிமன்றம் சென்றிருக்கலாம்.
எனினும் எவரும் நீதிமன்றிற்கு செல்லவில்லை. கடந்த மே மாதம் 22ஆம் திகதி இந்த சட்ட மூலம் சமர்ப்பிக்கப்பட்டது.
நீதிமன்றின் உதவியை நாடக்கூடிய கால...
ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரஜைகளை காணாமல் போகச் செய்ய இடமளிக்க முடியாது: ஜே.வி.பி.
Thinappuyal -
ஆட்சியாளர்கள் அதிகாரத்தைப் பயன்படுத்தி பிரஜைகளை காணாமல் போகச் செய்ய இடமளிக்க முடியாது என ஜே.வி.பி.யின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் அலுவலகம் குறித்த சட்ட மூலம் நிறைவேற்றப்பட்ட போது ஏற்பட்ட குழப்ப நிலைமை குறித்து நாடாளுமன்றில் விவாதிக்கப்பட்ட போது இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், தமது பிள்ளைகளுக்கு என்னவாயிற்று என்பதனை அறிந்து கொள்ள காணாமல் போனவர்களின் பெற்றோருக்கு நியாயமான உரிமையுண்டு.
எந்தவொரு ஆட்சியாளரும் அல்லது அரசாங்கமும் ஆட்சியை...
வவுனியா ஓமந்தையிலேயே பொருளாதார மத்திய நிலையம் அமைய வேண்டும் என வலியுறுத்தி 73 வயதான முதியவர் தா.மகேஸ்வரன் மேற்கொண்டு வந்த உண்ணாவிரதப்போராட்டம் மூன்றாவது நாளான நேற்று இரவு 9.30 மணியளவில் கைவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசினால் வவுனியாவில் அமைக்கப்படவிருந்த பொருளாதார மத்திய நிலையத்திற்கான இடத்தெரிவில் பாரிய இழுபறி நிலை காணப்பட்டு வந்த நிலையில் இறுதியாக மாங்குளம் மற்றும் வவுனியா மதகுவைத்தகுளம் ஆகிய பகுதிகளில் பொருளாதார நிலையம் அமையும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் ஓமந்தை...
முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழல் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
பொருளாதாரம் மற்றும் வியாபார விவகாரங்களுக்கான அமெரிக்க துணை இராஜாங்க செயலாளர் சார்ல்ஸ் ரிவ்கிம் இதனை தெரிவித்துள்ளார்.
நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவுடன் நேற்று(12)இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் இரு தரப்பு முதலீடு, பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வர்த்தகம் தொடர்பில் இதன் போது கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக விவகாரங்களுக்கான உதவி துணைச் செயலாளர்...
இறுதி யுத்தத்தின் போது இராணுவத்தினரிடம் சரணடைந்த முன்னாள் போராளிகள் பன்னிரண்டாயிரம் பேர் வரையில் புனர்வாழ்வு வழங்கப்பட்டு சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களுக்கான தொழில் உதவிகளையும் வழங்குவதாக அரசாங்கம் அறிவித்திருந்தது. ஆனால் அவர்கள் சமூகத்துடன் இணைக்கப்பட்ட பின்னர் தொழில் வசதிக்கான உதவிகள் சரியான முறையில் கிடைக்காமல் இன்றும் பலர் அல்லல்படும் நிலையே காணப்படுகின்றது.
பல முன்னாள் போராளிகள் குடும்பங்கள் அடுத்த நேர சாப்பாட்டுக்கு என்ன செய்வது என்று தெரியாத நிலையிலேயே உள்ளது. சமூகத்தில்...
மிருசுவில் படுகொலை! மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரியை விடுதலை செய்யுமாறு கோரிக்கை!
Thinappuyal -
மிருசுவிலில் சிறுவர்கள் உள்ளிட்ட எட்டுப் பொதுமக்களைப் படுகொலை செய்த குற்றச்சாட்டில், மரணதண்டனை விதிக்கப்பட்ட இராணுவ அதிகாரிக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும் என்று தேசிய சுதந்திர முன்னணி் கோரியுள்ளது.
நாடாளுமன்றத்தில் நேற்று உரையாற்றிய தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயந்த சமரவீர, மரணதண்டனை விதிக்கப்பட்டுள்ள இராணுவத்தின் ஆழ ஊடுருவும் படையணியைச் சேர்ந்த சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பொது மன்னிப்பு அளித்து விடுவிக்க வேண்டும்.
187...