இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் சகலதுறை ஆட்டக்காரரான சிறிபாலி வீரகொடி விளையாட்டு உபகரணங்களை விற்பனை செய்யும் ஸ்பார்டன் சர்வதேச நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் சச்சின் டெண்டுல்கர், விவியன் ரிச்சர்ட்ஸ், கிறிஸ் கெய்ல், இயன் மோர்கன், மிட்செல் ஜான்சன், மைக்கேல் கிளார்க், ரஸல், டோனி, நில் வோக்னர் ஆகியோர் வரிசையில் சிறிபாலி வீரகொடியும் அந்நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக இணைந்துள்ளார். 2006ம் ஆண்டு இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்...
மனித வாழ்வில் தற்போது முக்கிய அங்கம் வகிப்பது ஸ்மார்ட்போன். காலையில் எழுந்தவுடன் ஸ்மார்ட்போனை பார்த்து தான் பலரது பொழுதே விடுகிறது. அப்படிபட்ட ஸ்மார்ட்போன் ஒருநாள் கையில் இல்லையென்றால் வாழ்க்கை எப்படி இருக்கும். வழக்கமாக காலையில் சீக்கிரம் எழுந்து வேலைக்கு செல்ல வைக்கப்படும் அலாரம் அடிக்காது. அதையும் மீறி வேலைக்கு சென்றால் அடிக்கடி கையில் உள்ள கைகடிகாரத்தை பார்த்து மணியை தெரிந்து கொள்வோம். வேலையில் ஏதாவது மன அழுத்தம் ஏற்பட்டால் உடனே...
அப்பிள் நிறுவனம் தனது இலத்திரனியல் சாதனங்கள் உட்பட ஏனைய உற்பத்திகளை பயனர்கள் நேரடியாகக் கொள்வனவு செய்வதற்கு Apple Pay எனும் வசதியினை அறிமுகம் செய்திருந்தது. பலத்த வரவேற்பைப் பெற்ற இவ் வசதி உலகின் பல பாகங்களிலும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றது. இதன் ஒரு அங்கமாக அவுஸ்திரேலியாவில் அறிமுகம் செய்த வேளை பாரிய சிக்கலை அப்பிள் நிறுவனம் எதிர்நோக்கியுள்ளது. அதாவது அவுஸ்திரேலியாவை சேர்ந்த குறித்த சில வங்கிகள் Apple Pay முறையினை ஏற்றுக்கொள்ளவில்லை என...
வெளிநாடுகளுக்கு தொழிலுக்காக செல்லும் பெண்கள் உடல், உள, உபாதைகளுக்கு உள்ளாகி நிர்க்கதியான நிலையில் நாடு திரும்புகின்றனர். இந்நிலை மாற்றப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எம்.பி. ஸ்ரீஸ்கந்தராஜா இன்று சபையில் தெரிவித்தார். அத்தோடு பெண்கள் வெளிநாடு செல்வதால் அவர்கள் சார்ந்த குடும்பங்களுக்கு பிரச்சினைகள் தலைதூக்குகின்றன என்றும் அவர் தெரிவித்தார். பாராளுமன்றத்தில இன்று வெள்ளிக்கிழமை ஜே.வி.பி.யினால் முன்வைக்கப்பட்ட பெண்கள் வெளிநாடுகளுக்கு வேலைக்குச் செல்வதால் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பான சபை ஒத்திவைப்பு பிரேரணை...
  நல்லூர் உற்சவ காலத்தில் நல்லூர் கந்தனை தரிசிக்க வரும் பெண்கள் களவுகளை தவிர்க்கும் முகமாக கவரிங் நகைகளை அணிய முன்வரவேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். மாகாண மட்டத்திலான பொலிஸ் பொதுமக்கள் ஒருங்கிணைப்புக்குழு கூட்டத்தில் உரையாற்றும் போதே வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். அவர் இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில், கந்தனை தரிசிக்கச் செல்லும் சில பெண்கள் விலையுயர்ந்த தங்க ஆபரணங்களைப் போட்டு அலங்காரம் செய்து கொண்டு...
ஆரோக்கிய வாழ்வுக்கு சத்தான உணவு மட்டுமின்றி உடற்பயிற்சியும் இன்றியமையாத ஒன்று. தினமும் நாம் சாப்பிடும் உணவுகளில் நமது உடல் தேவையான சத்துக்களை மட்டும் எடுத்துக் கொண்டு மற்ற கழிவுகளை வெளியேற்றுகிறது. இதற்கு செரிமானம் சீரான நிலையில் இருப்பது அவசியமாகிறது, இதற்கு உடலில் உள்ள தசைகள், உள் உறுப்புகள் முறையாக இயங்க வேண்டும். இதற்கு தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியம், அதாவது 30 நிமிடங்கள் உடற்பயிற்சி செய்ய வேண்டும். உடலின் தசைகளை சுறுசுறுப்பாக வைக்க மூன்று...
வரலட்சுமி விரதம் என்பது கணவனுக்கு நீண்ட ஆயுள் வேண்டியும், குழந்தைகள் பிறந்து குலம் தழைக்கவும், அஷ்ட ஐஸ்வர்யம் கிடைக்கவும் வேண்டி சுமங்கலிப் பெண்கள் இந்த விரதத்தை கடைபிடிப்பார்கள். வரலட்சுமி விரதத்தன்று வரலட்சுமி தாயாரை மனதால் வேண்டினால், ஆதி லட்சுமி, தனலட்சுமி, தானியலட்சுமி, வித்யா லட்சுமி, வீர லட்சுமி, கஜ லட்சுமி, சந்தான லட்சுமி, விஜய லட்சுமி ஆகிய அஷ்டலட்சுமிகளையும் வேண்டிய பலன் ஒரு சேரக் கிடைக்கும் என்பது ஐதீகம். இவர்கள் அனைவரும்...
சர்வதேச நிகழ்வுகளுக்கான வீரர்களை தெரிவு செய்தல் மற்றும் அவர்களுக்கு பயிற்சிவழங்குதல் பணிகளுக்காக ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற சுசந்திகா ஜயசிங்கநியமிக்கப்பட்டுள்ளார். விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகரவினால் இன்று இவருக்கு இந்த நியமனம்வழங்கப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் சோமரத்ன விதானபத்திர மற்றும்உதவிச் செயலாளர் முரளி மனோகர் விஜயசேன ஆகியோர் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்
வடக்கு, கிழக்கில் பௌத்த மேலாதிக்கத்தை நிறுவும் வகையில் படைத்தரப்பினரது செயற்பாடுகள் அமைந்து வருவதாகவும் இதற்கு மாறி மாறி வரும் அரசாங்கங்கள் உறுதுணை புரிந்து வருவதாகவும் கடும் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு வருகின்றன. வடக்கு, கிழக்கில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளில் புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வருகின்ற விடயமானது பல்வேறு வகைகளில் முரண்பாடுகளை தோற்றுவித்து வருகின்றது. யுத்தம் இடம்பெற்ற காலத்தை விடவும் தற்போது பல பகுதிகளிலும் திடீர் திடீரென புத்தர் சிலைகள் முளைத்து வருகின்றன. வவுனியாவிலிருந்து...
3000 கிலோ நிறையுடைய மீன் தொகையொன்று கடந்த 8 வருடங்களாக மீன்பிடிக் கூட்டுத்தாபனத்தின் குளிரூட்டியிலிருந்து இன்று கண்டுபிடிக்கப்பட்டதாக மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார். இது தொடர்பில் விசாரணைகளை நடத்துமாறு கூட்டுத்தாபனத்தின் பதில் தலைவர் எஸ்.பாலசுப்ரமணியத்துக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, நட்டத்தில் இயங்கிவரும் இந்த கூட்டுத்தாபனத்தின் சம்பள நிலுவை மற்றும் கடன்களைச் செலுத்துவதற்காக திறைசேறியிலிருந்து 6500 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதென்றும் அவர் தெரிவித்தார்.